Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடல் தாத்தா!
 
பக்தி கதைகள்
கடல் தாத்தா!

கடற்கரை அருகிலிருந்த ஒரு குகையில் தன்னந்தனியாக வாழ்ந்து வந்தார் அந்தக் கிழவர். பொன்வண்ணன் என்பது அவர் பெயர். மீன் பிடிக்கச் செல்லும் செம்படவர்களிலிருந்து கடல் மீது பாய்மரம் விரித்துப் பயணம் செய்யும் மாலுமிகள் வரை எல்லாருக்கும் அந்தக் கிழவரைப் பற்றித் தெரியும். ஏனென்றால், கடலின் மீது செல்ல வசதியான காற்று எப்போது வீசும், புயல் எப்போது வரப் போகிறது? என்பதையெல்லாம் முன் கூட்டியே சொல்லக் கூடிய ஆற்றல் உடையவராக இருந்தார் அந்தக் கிழவர். அவர் சொற்படி கேட்டவர்கள் கடல் விபத்துக்களிலிருந்து தப்பி இருக்கின்றனர். யார் வந்து எந்த வேளையில் கேட்டாலும், அவர்களுக்கு எவ்விதக் கட்டணமுமின்றிக் காலநிலை பற்றிய தகவல்களைக் கூறுவார் பொன்வண்ணன். கிழவரின் புகழ் நாடெங்கும் பரவியது. பொன்வண்ணனுக்கு அந்த அற்புத ஆற்றல் எப்படி ஏற்பட்டது? கடலின் காலநிலை பற்றி அவர் எப்படி முன் கூட்டியே அறிகிறார் என்ற ரகசியம் மட்டும் யாருக்கும் புரியவில்லை. பொன்வண்ணனை நாட்டு மக்களெல்லாம் போற்றினர்; புகழ்ந்தனர்; வாழ்த்தினர். ஆனால், ஒரே ஒருவரைத் தவிர. அவர்தான் அந்நாட்டு மன்னன் அமலானந்த். பொன்வண்ணனின் புகழிலே பொறாமை கொண்டது அவன் உள்ளம். தனக்குக் கிடைக்காத போற்றுதலும், புகழும் ஒரு கிழவனுக்குக் கிடைப்பதா என்று அரசன் புழுங்கிப் போனான்.

கடல் காற்று, கடல் நீர் இவைகளின் நிலை அறிந்து கூறுபவன் நிச்சயம் ஒரு சூனியக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் மன்னன் அமலானந்த். ஒருநாள்- ஒரு மாலுமியைப் போல் வேடமணிந்து பொன்வண்ணனிடம் போனான் மன்னன். தான் கப்பலில் அயல்நாடு செல்ல விரும்புவதாகவும், கடல் பயணத்துக்குத் தகுதியான வேளையைக் குறிப்பிடும்படியும் கேட்டுக் கொண்டான். யாருக்கும் எவ்வித ஊதியமும் பெறாமல் உதவும் அந்தக் கிழவர் மன்னனுக்கும் உதவினார். அது சரி தாத்தா! இத்தனை கச்சிதமாகக் கடல்நிலை அறிந்து நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்? குட்டிச் சாத்தானுடன் தொடர்பு உண்டா உங்களுக்கு? என்று கேட்டான் மன்னன். இந்தக் குத்தலான கேள்வியினால் கோபம் கொண்டாலும் தம் உணர்ச்சியை வெளிக்காட்டாமல், இந்த விஷயங்களை எனக்கு என் நண்பர்கள் கூறுகின்றனர். தகுதியுடைய மாலுமிகளுக்கு இந்த ரகசியங்களைக் கூறுவதால் கோபமடையாதவர்கள் என் நண்பர்கள், என்றார். அந்த அதிசய நண்பர்கள் யாரோ? என்றான் மன்னன். அவர்கள் எப்போதும் என்னோடு இருக்க மாட்டார்கள். அவர்களை உன்னால் காண முடியாது, என்றார் கிழவர். இதற்குள் மாறுவேஷத்தில் வந்திருப்பது மன்னன் என்பதை உணர்ந்து கொண்டு விட்டார் கிழவர்.

கிழவரின் பதிலைக் கேட்டு நகைத்த மன்னன், நீ உன் நண்பர்களைப் பற்றிய உண்மைகளைக் கூறாவிட்டால் இந்தச் சூனியக்கார வேலைகளுக்காக உனக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும், என்றான். இதனால் கிழவர் பயந்துவிடவில்லை. ஆனால், கோபமடைந்தார். என் நண்பர்களை நீ பார்க்க விரும்பினால், உன்னால் முடியுமானால், சூரியன் மலைவாயில் விழுந்ததும், என் குடிசைக்கு என்னோடு புறப்பட சித்தமாக வந்து சேர். ஆனால், அந்தப் பயணத்தில் ஏதாவது விபத்து நேருமானால்... அதற்கு நான் பொறுப்பு அல்ல. என் நண்பர்களைச் சந்திக்கும் முயற்சியில் உனக்கு ஏதாவது நேருமானால் முன்னதாகவே ஏன் எச்சரிக்கவில்லை என்று குற்றம் சாட்டக் கூடாது. என்ன புரிந்ததா? என்றார் கிழவர். மன்னனும் நிபந்தனையை ஏற்று மாலை வருவதாகக் கூறிப் போனான். குறிப்பிட்ட நேரத்தில் கடற்கரை மலைக் குகைக்கு வந்து விட்டான் மன்னன் அமலானந்த். அப்போது, இருட்டும் வேளை. பொன்வண்ணனும் தயாராக இருந்தார். நீந்துவதற்கு வாகாக இடையில் ஒரே ஒரு சிறு துணி மட்டுமே அணிந்திருந்தார். அவருடைய இரு கைககளிலும் கனமான இரும்பு உலக்கைகள் இருந்தன. மங்கலான நிலவொளியில் கிழவரின் உடல் மீனின் உடலைப் போல் பளபளப்பதைக் கண்டான் மன்னன்.

ஆனால், அந்த அமைதியான கடலில் விழும் நிலவொளியின் பிரதிபலிப்பாக இருக்குமென்று தான் நினைத்தான். தன் கையிலிருந்த இரண்டு இரும்பு உலக்கைகளையும் மன்னனிடம் கொடுத்து, என்னைத் தொடர்ந்து, வருவதற்கு இவ்விரண்டு உலக்கைகளும் உனக்குத் தேவைப்படும். நான் இவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி வெகு நாட்களாயிற்று. நாம் கடலுக்குள் நீந்திப் போகப் போகிறோம். நினைவிருக்கட்டும். நாம் கடலின் ஆழத்துக்குப் போனதும் கரை நம்மை விட்டு மறைந்துவிடும். என்னைத் தொடர்ந்து வா, என்று கூறிக் கடலை நோக்கி நடக்கலானார் கிழவர். நீண்ட நெடுஞ்சாலையில் நடப்பது போல் கடல் நீருக்குள் இறங்கி வந்தார் கிழவர். அவருக்குப் பின்னால் வந்த மன்னன், கிழவரின் முதுகு நிலவொளியில் பளபளப்பதைக் கண்டான். கடல் நீருக்குள் ஓர் அடி, இரண்டடி, மூன்று... கிழவர் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார். கடல் நீர் முழங்காலுக்கு, தொடைக்கு, இடுப்புக்கு என்று உயர்ந்து கொண்டே போனது. மஞ்சள் நிற நிலவொளியில் வெள்ளியாகப் பளபளத்தன கடல் அலைகள். இவர்கள் முன்னேற்றத்தினால் ஏற்படும் சலனத்தைத் தவிர கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரே கருநீலக் கடல் நீர் தான். தகதகக்கும் கடல்நீர் கிழவரின் தோள்வரையில் வந்து விட்டதைக் கண்டான் மன்னன். அந்த நிலையிலும் அவர் வேகமாக, லாவகமாக முன்னேறிக் கொண்டிருந்தார். நீருக்குள் நடப்பதற்கென்றே உருவாக்கப்பட்டது போலிருந்தது அவரது உடல். திடீரென்று எவ்வித ஓசையுமின்றி அவர் தலையும் நீருக்குள் மூழ்கி மறைந்தது. அவர் இருந்த இடத்தில் கடல் அலை கொக்கரித்துச் சிரித்தது.

அதே நேரத்தில், பின்னால் வந்த மன்னன் அமலானந்த், தனது காலின் கீழுள்ள மணல் நழுவுவதை உணர்ந்தான். கைகளில் இருந்த இரும்பு உலக்கைகள் அவனை நீருக்குள் இழுத்துக் கொண்டிருந்தன. கால் கீழே படவில்லை. இரும்பு உலக்கைகளைப் பற்றிக் கொண்டு நீருக்குள் எப்படி? அவனைக் கடல் நீர் சூழ்ந்து கொண்டது. மூச்சு முட்டித் திணறியது. இனியும் அந்த இரும்பு உலக்கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனம் என்று கருதி அவன் அவைகளை நழுவவிட்டான். நீச்சல்காரர்களின் அசைவோடு நீரின் மேல் மட்டத்தை நோக்கி எழலானான். அப்போது கடல் நீரின் நீல நிறத்துக்குள் அதன் அடியிலே பெரிய கோட்டைபோன்ற அரண்மனை மிதந்து கொண்டிருப்பதைக் கண்டான். அம்மாளிகையின் பக்கங்களில் கடல் தாவரங்களால் ஆகிய கானகம் கனத்துக் கிடந்தது. அந்தக் கானகத்திடையே பலப் பல அழகிய முகங்கள் எட்டிப் பார்த்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்த முகங்கள்தான் எத்தனை அழகானவை. கடல் கன்னிகள் என்பது இவர்கள்தானே? என்று எண்ணமிட்டான் மன்னன். இத்தனையும் ஒருசில விநாடிகளே கண்டான். நீர் மட்டத்துக்கு அவன் உடல் உயருவதற்குள். கடல் மட்டத்துக்கு வந்தவன் தன்னுடைய பலமிக்க கைகளை மாற்றி மாற்றிப் போட்டுக் கரையை நோக்கி நீந்தலானான். நல்ல பலம் பொருந்தியவனாதலால் விரைவிலேயே அவன் கால்கள் கடலின் கரைப் பகுதியின் மணல் பரப்பை ஸ்பரிசிக்கலாயின. சற்றைக்கெல்லாம் கடல் கரை மணலில் ஆயாசத்தோடு வந்து விழுந்தான். நல்லவேளை! எனக்கு நீந்தத் தெரிந்ததால், உயிர் பிழைத்தேன். அந்தச் சூனியக்காரக் கிழவன் மூழ்கிச் செத்துத்தான் போயிருப்பான். முட்டாள்தனமாக அவனைப் பின் தொடர்ந்து போனேனே! என்று தன் புத்திசாலித்தனத்தை மெச்சியபடியே கொஞ்ச நேரம் மணலில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான். பிறகு கிழவரின் குகைக்குப் போய் தீ மூட்டி உடலில் சூடு உண்டாக்கிக் கொண்டு, அங்கிருந்த உணவைச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே படுத்துத் தூங்கியும் போனான். காலையில் மன்னனுக்கு விழிப்பு வந்தபோது சூரியனின் கிரணங்கள் குகை வழியே வந்து சுளீரென்று உடலைத் தாக்கிற்று. அடுத்த பகுதியான சமையலறையில் உணவு தயாரித்து ஓசையும், மணமும் எழுந்தன.
துள்ளி எழுந்தான் மன்னன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar