Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உண்மையும் போலியும்!
 
பக்தி கதைகள்
உண்மையும் போலியும்!

மிகவும் தர்ம சிந்தணையுள்ள  ஓர் அரசன் இருந்தான். அவன் நிரந்தரமாகத் தீராத வியாதியால் பீடிக்கப்பட்டவர்களும், உடல் உழைப்பை மேற்கொள்ளச் சக்தியற்றவர்களும் தங்கியிருக்கத் தர்ம விடுதி ஒன்று கட்டினான். மகிழ்ச்சியுடன் சிரமமின்றி நல்ல உணவோடும் வசதியாக வாழ முடிந்ததனால் பல பேர் ஏதேனும் காரணம் சொல்லிக் கொண்டு விடுதியிலே தங்க அனுமதி பெற்றுத் தங்க ஆரம்பித்தார்கள். அது காரணமாக விடுதியில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போயிற்று. விடுதியின் உள்ளே சுகவாழ்வு கிடைக்கப் பெற்ற அந்தச் சோம்பேறிகள் மிகவும் பலவீனம் உள்ளவர்கள் போலப் பாசாங்கு செய்தனர். எழுந்து நடக்கவும் சக்தியற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டு, படுக்கையிலேயே மலஜலம் கழிக்கவும் துணிந்தனர். அவர்களின் இந்தச் செயல் அரசனின் செவிக்கு எட்டியது. உடனே அரசன் அந்த விடுதிக்குத் தீ வைக்க ஆணை பிறப்பித்தான்.

தீயின் உஷ்ணம் உள்ளே பரவியது. விடுதி வாசிகள் உள்ளே இருந்தபடியே உதவி வேண்டிக் கூக்குரலிட்டனர் என்றாலும் அவர்களில் ஒருவர் கூடப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பதற்கு முயற்சி செய்யவில்லை. தீயோ தன் நாக்குகளை நீட்டியபடி வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. சூடு பொறுக்க முடியவில்லை. யாருமே உதவிக்கு வராததால் எல்லோரும் படுக்கையிலிருந்து எழுந்து உயிர் பிழைத்தால் போதுமென்று ஓடினார்கள். உண்மையாகவே எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் இருந்த இரண்டு பேர்களை மட்டும் அரசன் பத்திரமாக வெளியே எடுத்து வரச் செய்தான். அவர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரின் செய்கைகளுமே அபத்தமானவை என்ற உண்மையுடன் வெளிப்பட்டது. உண்மையான பக்தர்கள் உயிரே போனாலும் இறைவனையே நாடியிருப்பர். மற்றவர்களோ கஷ்டம் வந்தால் தன் மதத்தையும் விட்டு ஓடி விடுவார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar