Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கோமாதா
 
பக்தி கதைகள்
கோமாதா

கோமாதா என்று போற்றப்படும் பசுவை நம் முன்னோர் பெரும் செல்வமாகக் கருதி, தெய்வமாக வணங்கி வந்தனர். பசு பரிபாலனத்தை நம் புராணங்களும், சாஸ்திரங்களும் மிக உயர்வாகக் கூறுகின்றன. மகரிஷி ச்யவனரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒருநாள் ச்யவனர் தண்ணீருக்குள் இருந்தபடி தவம் செய்தார். பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தன. நீர் வாழ் உயிரினங்களின் பாசத்துக்குரியவரானார் ச்யவனர். ஒருநாள் மீனவர்கள் வலையை நதிக்குள் வீசினர். அப்போது. மீனவர்கள் பேசிக்கொண்டே ஆ, என்ன கனமாக இருக்கிறது. வலையை இழுக்க முடியவில்லையே என்று மற்றொரு மீனவரிடம் கூறினர். இரண்டாவது மீனவர், என்னப்பா, உன் வலையில் திமிங்கலம் மாட்டியிருக்கிறதோ இன்று உனக்கு யோகந்தான் என்று கூறினார். விளையாடதே, என்னுடன் சேர்த்து வலையை இழு என்று உடன்வந்த மீனவரிடம் கூறினார். இருவரும் சேர்ந்து வலையை மேலே இழுத்து படகில் வைத்து பார்த்ததும் ஆதிசயித்தனர்!

அய்யோ என்ன இது? ஜடையும் தாடியுமாய் யாரது? எனக்கொன்றும் புரியவில்லையே என்று மீனவர் புலம்பினர். உடன்இருந்த மீனவர் அடேய், இது மிருகமுமல்ல. மீனுமல்ல, தவம் செய்யும் ரிஷடா. என்று கூறினார். சற்று நேரத்தில் ரிஷி கண்விழித்தார். மீனவர்கள் அனைவரும்  கைகூப்பிக்கொண்டு அவர் முன்னால் மண்டியிட்டு சாமி, எங்களை மன்னிச்சிடுங்க. தப்பு செஞ்சிட்டோம். நாங்க என்ன செய்யணும் சொல்லுங்க என்று கேட்டனர். உடனே ரிஷி தவறு ஒன்றுமில்லை. நீங்கள் என்னை வலையில் பிடித்து இருக்கிறீர்கள் உங்கள் இஷ்டம்போல் செய்யுங்கள் என்று கூறலானார். பயந்து போன மீனவர்கள் அரசனிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள். அரசன் நதிக்கரைக்கு வந்து முனிவரை வணங்கினான். அரசர் முனிவரை வணங்கினார். முனிவரே, இந்த ஏழை மீனவர்களை மன்னியுங்கள். இதற்கு நான் என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும்? கூறுங்கள் என்றான்.

முனிவர், அரசே, அவர்கள் தொழில் தர்மப்படி என்னை வலையில் பிடித்து இருக்கிறார்கள். எனக்குத் தக்க விலை மதிப்பிட்டு, அவர்களிடம் கொடுத்து, என்னை மீட்டுக் கொள் என்று கூறினார். அரசர் மீனவர்களிடம் கேட்டார். நீங்களே சொல்லுங்கள். இவருக்கு என்ன விலை நான் கொடுக்கவேண்டும்? உடனே மீனவர்கள் அரசே, எங்களுக்கு என்ன தெரியும் என்று கூறினர். ஆயிரம் பொன் போதுமா? என்று மீனவரிடம் கேட்டார். பிறகு முனிவர் அரசரை பார்த்து. அரசே! நானே என்னை உயர்வாகக் கூறக்கூடாது. இருப்பினும் ஆயிரம் பொன் எனக்கு ஈடாகாது. மறுபடியும் அரசர் நூறாயிரம் பொன் போதுமா? என்று கேட்டார். இதுவும் குறைவுதான் என்று கூறினார் முனிவர். அரசர் மீனவர்கள் அனைவருடனும் ஆற்றங்கரைக்கு வந்து முனிவரை சந்தித்தார். கோடி பொன்? கொடுக்கிறேன் என்று கூறினார். அதுவும் குறைவுதான் என்றார் முனிவர். முனிவரின் மதிப்போ நமக்குத் தெரியவில்லை மீனவர்களுக்கு என்ன கொடுப்பது? என்று யோசித்தார் அரசர்.

உடனே அரசர் அரசவையை கூட்டி மந்திரிகளுடன் கலந்துஆலோசித்தான். மற்ற மந்திரிகளிடம் முனிவர் கேட்டார். முனிவரின் மதிப்போ நமக்குத் தெரியவில்லை. மீனவர்களுக்கு என்ன கொடுப்பது?  என்று யோசித்தான். பாதி ராஜ்யத்தைக் கொடுக்கலாம். முழுராஜ்யத்தை கொடுக்கலாம். இதுவும் குறைவுதான் மன்னா! என்று கூறினார் முனிவர். மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தான் மன்னன். மறுபடியும் தன் மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தான். வழியேதும் தோன்றவில்லை மறுநாள் அரசவைக்கு மற்றொரு முனிவர் வழிப்போக்கராக வந்தார். அரசனுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை அறிந்தார். மந்திரிகளிடம் தான் அதற்கு ஆலோசனை கூறுவதாக கூறினார். அப்போது முனிவர் தங்களின் குழப்பம் தீர ஒரு வழி கிடைத்திருக்கிறது என்று மீனவர்கள் கூறினர். மன்னர் அப்படியா என்னஅது? என்று கேட்டார். இம்முனிவர் அதற்கான தீர்வைச் சொல்வதாகக் கூறுகிறார் என்று மந்திரிகள் கூறினர். மன்னர் முனிவரே! வணங்குகிறேன். என் பிரச்சனைக்குத் தாங்கள் கூறும் வழிதான் என்ன? என்று கைகூப்பி வணங்கி கேட்டார்.

முனிவர்! அரசரை பார்த்து, அரசே, உலகில் ரிஷிகளுக்கும், பசுவிற்கும் எதுவும் ஈடாக முடியாது. ரிஷிகளிடம் வேத மந்திரம் இருக்கிறது. பசுக்களிடம் யாகத் திரவியங்கள் இருக்கின்றன. அதனால் ரிஷி ச்யவனருக்கு ஈடாகப் பசுவைக் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார். உடனே அரசர் சந்தோஷப்பட்டார். மிக்க மகிழ்ச்சி முனிவரே! என்று கூறினார் அரசர். மகரிஷியே, தங்கள் பெருமை அறிந்தேன். தங்களுக்கு ஈடாகப் பசுவை இம்மீனவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன். அதை ஒப்புக் கொள்ளுங்கள். என்றார் அரசர். முனிவரும், மிக்க மகிழ்ச்சி அரசே, நான் சரியான விலைக்குத்தான் வாங்கப்பட்டு இருக்கிறேன் என்றார். தவ சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடாகக் கருதப்படும் பசுவின் மேன்மையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறோம் என்று அரசர் முனிவரைப் பார்த்து கேட்டார். முனிவர் அரசரைப் பார்த்து பசு எனப்படும் கோமாதா உலகிற்கே தாய் போன்றவள். அதன் பாலை அனைவரும் பருகி வலிமை பெறுகின்றனர். அதுமட்டுமல்ல, பசுவின் தேகத்தில் பல தேவர்கள் வசிக்கின்றனர். இதனிடமிருந்து கிடைக்கும் பஞ்சகவ்யம் பரிசுத்தமான அருமருந்து. ஆகவே, கோரக்ஷணம், கோதானம் இவை புனிதமானவை என்று கூறினார் முனிவர்.

மீனவர்கள் அனைவரும் முனிவரை வணங்கி ஐயனே, நாங்கள் உங்களுக்குப் பதிலாக இந்தப் பசுவைப் பெற்றுக்கொண்டு இதைக் காப்போம். இதன் அருளால் எங்கள் தொழில் பெருகி நன்கு வாழ எங்களை ஆசீர்வதியுங்கள் என்று கேட்டனர். முனிவரும் மீனவர்களை பார்த்து கோரக்ஷண புண்ணியம் உங்களைக் காக்கும். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும் என்று வாழ்த்தினார்.

காம் ச த்ருஷ்ட்வா நமஸ்க்ருத்ய க்ருத்வா சைவ ப்ரதக்ஷிணம்
ப்ரதக்ஷிணீக்ருதா தேன ஸப்த த்வீபா வஸுந்தரா
ஸர்வகாமதுகே தேவி ஸர்வ தீர்த்தாபிஷேசினீ
பாவனே ஸுரபிஷ்ரேச்ட்டேதேவி துப்யம் நமோஸ்து தே.

பசுவை நமஸ்கரித்து ப்ரதக்ஷிணம் செய்பவருக்கு ஏழு தீவுகளுடன் கூடிய பூமியைப் பிரதக்ஷிணம் செய்த புண்யம் கிடைக்கிறது. அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றக் கூடிய, எல்லாத் தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்த புண்யத்தைக் கொடுக்கக் கூடிய, பரிசுத்தம் செய்யக் கூடிய காமதேனுவாகிய ஹே தேவி! உனக்கு நமஸ்காரம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar