Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கற்றதனால் ஆய பயன்!
 
பக்தி கதைகள்
கற்றதனால் ஆய பயன்!

ஒரு சமயம் தக்ஷபிரஜாபதியின் கடுந்தவத்தை மெச்சி, பராசக்தி தாக்ஷாயணியாக அவனுக்கு மகளாகப் பிறந்தார். தாக்ஷாயணி சிவனை மணம் புரிந்துகொள்ள வேண்டி, கடுந்தவம் மேற்கொண்டார். அவரை சிவனுக்கு பிரம்மாதி தேவர்கள் திருமணம் செய்து வைத்தனர். ஸ்ரீமத்பாகவத புராணத்தின்படி ஒரு சமயம் ரிஷிகளால் நடத்தப்பட்ட யாகத்தில் பங்கு கொள்ள தக்ஷ பிரஜாபதி வந்தான். சிவன் மற்றும் பிரம்மாவைத் தவிர எல்லா தேவர்களும் ரிஷிகளும் எழுந்துவணங்கினர். லோக அரசனான தன்னை தன் மாப்பிள்ளை சிவன் வணங்கவில்லையே என்று சினம் கொண்டு, எல்லோர் முன்னிலையிலும் சிவ நிந்தனை செய்தான் தக்ஷன். உடல் முழுவதும் விபூதி அணிந்து கொண்டு, மயானத்தில் சிவ கணங்களுடன் நாகரீகமற்று வாழும் இந்த சிவனுக்கு இனி நடத்தப்படும் எந்த யாகத்திலும் பூஜை இல்லை என்றான். தக்ஷனது அறியாமையையும் அகங்காரத்தையும் பொருட்படுத்தாமல், சிவபெருமான் கருணையினால் அவனைத் தண்டிக்காமல் அந்த சபையிலிருந்து வெளியேறி விட்டார். ஆனால் நந்திதேவரோ சிவ நிந்தனையைச் சகிக்க இயலாமல், ஹே தக்ஷனே, நான்முகனின் மகனாக நற்குலத்தில் பிறந்து எல்லா வேதங்களையும் கற்றிருந்தும் இப்படி அறியாமையினால் அகங்காரம் கொண்டுள்ளாயே. அரசனாக முடிசூடிக் கொண்டாலும் உலக ஆசைகளினால் அலைக்கழிக்கப்பட்ட நீயோ பிறவிச் சுழலில் உழலும் ஒரு சாதாரண ஜீவன். பகவான் சிவனோ உலகிற்கே ஆதிமூலம் மேலும் ஞானகுரு என்ற உண்மையைக்கூட நீ அறியவில்லையே.

அவர் எல்லா உயிரினங்களிடமும் கொண்ட கருணையினால், அந்திமக் காலத்தில் தாரக மந்திரத்தை ஓதி, உயிரினங்களைக் கரையேற்றவே மயானத்தில் எளிமையாக உறைகின்றார். பூரண ஞானத்தில் நிலைபெற்ற மகான்களுக்கு எவ்வித ஆசையும் கிடையாது. பகவான் சிவனின் மகிமையை அறியாது அவரின் ஞான நிலையையும், தியாகத்தையும், எளிமையையும் ஏளனம் செய்து அமங்கல வார்த்தைகளை உபயோகித்த உனக்கு ஆட்டுத் தலை உண்டாகட்டும் என்று சபித்தார். இந்தக் கதை நமக்கு உணர்த்துவது.

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய உன்னதத் திருவடிகளைத் தொழாமல் ஒருவன் இருந்தால் அவன் கற்ற கல்வியால் பெற்ற பயன் என்ன? இதன் மூலம் கல்வியின் பயன் இறைவனிடம் பக்தி கொள்வதும், அகங்காரமற்று இருப்பதும்தான் என்பது தெளிவு. தியாகத்தையும் அன்பையும் வாழ்க்கை முறையாகக் கொண்டு எளிமையாக வாழும் மகான்களின் பெருமையை உணர்ந்து அவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எளிமையான வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் பழிக்கக்கூடாது. அப்படிப் பழித்தால் அதற்கான விளைவை அனுபவித்தே ஆக வேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar