Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கவுதம புத்தர்
 
பக்தி கதைகள்
கவுதம புத்தர்

இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்து நாட்டை சுத்தோதனர் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவரது மனைவி மாயாதேவி ஒருநாள், இரவில் ஓர் அற்புதக் கனவு கண்டார். ஒருநாள் மாயாதேவி தனது அரண்மனையில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அப்போது தனது கனவில் ஒரு வெள்ளை யானை வெண் தாமரை ஒன்றைத் துதிக்கையில் ஏந்தியபடி அசைந்து வந்து அவரருகில் நின்றது. அது மாயாதேவியின் கருவினுள் நுழைந்தது. நிறைமாத கர்ப்பிணியான மாயாதேவி ஒருநாள் தோழியாருடன் லும்பினி வனத்திற்குச் சென்றார். அங்கு சாலமரத்தின் பூக்களை எட்டிப் பறிக்க முயன்றபோது அவர் வயிற்றிலிருந்து குழந்தை வந்தது! அப்பொழுது ஓர் அழகான ஆண் மகவுக்குத் தாயானார். அவளது தோழிகள் ஆச்சரியத்துடன் ஆ, இது என்ன! பிறந்த குழந்தை அடியெடுத்து நடக்கிறதே என்றனர்.

அந்த குழந்தைக்கு சித்தார்த்தன் என்று பெயரிடப்பட்ட சுத்தோதனரின் குழந்தையைக் காண அசிதமுனி என்பவர் வந்தார். அரசே 32 லட்சணங்களுடன் காணப்படும் இவன் எதிர்காலத்தில் புத்தராகி (ஞானம் தெளிந்தவராக) தர்ம வழிகளைப் போதிப்பான் என்று முனிவர் கூறினார். ஏர் உழும் திருநாள் அன்று, நாவல் மரத்தின் அடியில் குழந்தை சித்தார்த்தன் தியானத்தில் ஆழ்ந்துவிட்டான். சித்தார்த்தனின் தந்தை அங்கு வந்தார். மகனே, உன் தியான நிலையில் நான் உன்னை ஒரு முனிவராகவே காண்கிறேன். உனக்கு முதலில் என் பணிவார்ந்த வணக்கம். என்ன அதிசயம்! மர நிழல்கூடத் திரும்பாமல் சித்தார்த்தனுக்கு குளிர்ச்சி தருகிறதே. என்று சித்தார்த்தனின் தந்தை மற்றும் அருகில் இருந்த மனைவி மற்றும் உடன் வந்தவர்கள் கூறினார். ஒருநாள் சித்தார்த்தன் தன் ஒன்றுவிட்ட சகோதரன் தேவதத்தனுடன் வனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது சகோதரனிடம் இருந்து அந்த அன்னப் பறவையை என்னிடம் கொடு. நான் தானே அடித்து வீழ்த்தினேன், என்று கேட்டான். இருவருக்கும் வாக்கு வாதம் நடந்தன. அதற்கு சித்தார்த் ஒரு ஜீவனின் உயிர் அதைப் பறிப்பவனுக்குச் சொந்தமல்ல, அதைக் காத்து ரட்சிப்பவனுக்குத்தான் உரியது. நான் தரமாட்டேன் என்று கூறினான்.

சித்தார்த்தன் திருமண வயதுடைய இளைஞனான் அப்போது, இளவரசன் சித்தார்த்தன் யசோதரையை மணக்க விரும்பியபோது  யசோதரையின் தந்தை சித்தார்த்தனின் வீரத்தை பரிசோதிக்க விரும்பினார். சித்தார்த்தன் தம் வில்லில் இருந்து கடினமான இரும்பு இலக்கைத் தகர்த்தான். அப்போது யசோதையின் தந்தையும் அங்கிருந்தவர்களும் அதிசயித்துபோயினர். இதைப்பார்த்து அரசர் சுற்றி இருந்து வீரர்கள் ஆ! முரட்டுக் குதிரையை அடக்கிவிட்டாரே. என்னே தீரம்! என்று பாராட்டினர். பின்பு அரசர் சம்மதத்துடன் தனது அரண்மனையில் சித்தார்த்தனுக்கும் யசோதரைக்கும் வெகுவிமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. சில வருடங்கள் கழிந்தன. ஒருமுறை சித்தார்த்தர் நகர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அவர் கண்களில் கண்ட காட்சிகள் நான்கு, முதல் மூன்று நாட்களில் ஒரு தள்ளாடும் முதியவர், நோயாளி, பிணம் என்ற மூன்றைக் கண்டார். நான்காவது நாள் ஒரு துறவியைக் கண்டார். பல நாள் இரவில் தூங்காமல் அவர் மனம் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்தது. நான் கண்ட காட்சிகள் எதற்காக என்று பலநாள் யோசித்தார். பின்பு ஒரு நாள் இரவில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் யசோதரா! அப்போது அறைக்குள் நுழைந்த சித்தார்த்தன் தனது மனைவி குழந்தை உறங்குவதை பார்த்தார். மனதிற்குள் அன்பு யசோதரா! உலக மக்களின் துன்பங்களைக் காண என்னால் பொறுக்க முடியவில்லை. அவற்றின் காரணத்தை அறியவும் அவற்றை நீக்கவும் உன்னையும் தனது மகன் ராகுலனையும் துறந்து செல்கிறேன் என்று அரண்மனையிலிருந்து விடைபெற்றார்.

சித்தார்த்தன் தனது காவலாளியிடம் சன்னா, இந்த உலகைத் துறந்து செல்கிறேன். இந்த ஆடை, அணிகலன்களை எனது தந்தையிடம் சேர்ப்பித்துவிடு, நான் பின்னொரு நாள் அவரைக் காண கட்டாயம் வருவேன் என்று சொல் என்று கூறி சென்றுவிட்டார். சித்தார்த்தர் கபிலவஸ்துவிலிருந்து ராஜகிருகத்தை அடைந்தார். அங்கு அவர் பிச்சையெடுத்து உண்பதைக் கண்ட அரசன் பிம்பிசாரன் அவரைச் சந்தித்தான். பிம்பிசாரன் சித்தார்த்தரை கைகூப்பி வணங்கினான். என் ராஜ்யத்தில் பாதியை உங்களுக்கு அளிக்கிறேன். தயை கூர்ந்து ராஜபோகத்துடன் இங்கேயே வாழுங்கள் என்றார். அதற்கு சித்தார்த்தர் அரசே, நன்றி. நான் ஞானம் பெற்றபின் பார்க்கலாம் என்று கூறினார். ஞானம் பெற வேண்டி ஓர் அரச மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்தார் சித்தார்த்தர். பிராணாயாமம், ஹடயோகப் பயிற்சிகள், தியானம் ஆகியவை அவரது உடலைப் புடம் போட்டுத் தூய்மை செய்தன. சித்தார்த்தர் ஞானத்தை விரைவில் அடைவேன், என்ற மகிழ்ச்சியில் அவர் கண் திறந்தபோது. அவர் எதிரில் கையில் கிண்ணத்துடன் ஒருபெண் உட்கார்ந்துக் கொண்டிருந்தார். பிரபு, நான் சுஜாதை. வெகுநாட்களாக உங்களுக்கு உணவு அளிக்கக் காத்திருக்கிறேன். இந்தப் பாலன்னத்தை அருந்துங்கள். என்றாள். சித்தார்த்தர் புத்த நிலையை அடைய விடாமல் தடுக்க கொடிய மிருகங்கள், பாம்புகள்கள், எலும்புகூடுகள் போன்ற மாயசக்திகள் பலவிதங்களிலும் முயற்சி செய்தன. ஆனால் அவர் தன் நிலையில் தளரவில்லை. தியானத்தில் ஆழ்ந்தார்.

ஒரு பவுர்ணமி நாளில் புத்தர் மனிதரைக் கெடுப்பவை, அவற்றின் காரணம், அவற்றின் அழிவு, அதற்கான வழி அனைத்தையும் அறிந்து ஞான ஒளி பெற்றார். புத்தர் காசி, இசிபதானா மான் பூங்காவில் முன்னர் தமக்குத் தொண்டு செய்து ஐந்து சீடர்களுக்கு முதல் உபதேசத்தை அளித்து தர்ம சக்கரத்தைச் சுழலச் செய்தார். பின்பு புத்தர் தமக்கு அன்னமிட்ட சுஜாதையின் கணவருக்கும் மகனுக்கும் போதித்தார். புத்தர், தான் தேரோட்டியிடம் கூறியபடி கபிலவஸ்துவிற்குத் திரும்பி வந்து தந்தையைக் கண்டு யசோதராவையும் ஆசிர்வதித்தார். அவளும் அவரின் காலில் விழுந்து வணங்கினாள். அரண்மனை உப்பரிகையிலிருந்து யசோதரா தன் மகனுக்கு புத்தரைக் காட்டினாள். ராகுலா அதோ, அரண்மனை வாயிலை நெருங்கிக் கொண்டிருக்கும் சிங்கம் போன்ற கம்பீரமான துறவிதான் உன் தந்தை. உடனே அவரிடம் செல் என்று கூறினாள். ராகு<லனும் தன் தந்தையிடம் சென்று தந்தையே, எனது பரம்பரைச் சொத்தை எனக்கு அளியுங்கள் என்று  கூறினான். அதற்கு புத்தர் அருகில் இருந்த சீடரிடம் ஐயனே இவன் கேட்டதைத் தரலாமா? என்று கேட்டார். அவரும் தாரலமாக கொடு என்று சீடர் கூறினார். பின்பு ராகுலனுக்கும் துவராடை வழங்கப்பட்டது. தந்தையின் அடியொற்றி மற்ற சீடர்களுடன் ராகுலனும் வர அந்த அற்புதத் துறவியர் படை மக்கள் துயர் தீர்க்கும் பணியைத் தொடர்ந்தது. அனைவரையும் ஆசிர்வதித்தார். பலரது நன்மைக்காக தர்மத்தைப் போதித்தப்படி எங்கும் செல்வோம்! என்று புத்தர் தனது சீடர்களிடம் கூறி விடைபெற்றார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar