Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திரும்பத் திரும்ப மாலைகள் கீழே விழுந்தது ஏன்?
 
பக்தி கதைகள்
திரும்பத் திரும்ப மாலைகள் கீழே விழுந்தது ஏன்?

உடுப்பி கிருஷ்ணர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த வியாஸராயர் எனும் மகான் கர்நாடக மாநிலத்தில், வாழ்ந்து வந்தார். ஒரு முறை அவர் பல்லக்கில் யாத்திரை செய்து வரும்பொழுது. மிகவும் அடர்ந்த. எங்கு பார்த்தாலும் துளஸி செடிகள் செழித்து வளர்ந்திருந்த பகுதி வழியாகப் பயணம் செய்தார். பசுமையான துளஸியைப் பார்த்ததும். அவரது மனம் கிருஷ்ணர்பால் சென்றது. அத்தனை துளஸியையும் பறித்து. மாலையாகக் கட்டி, உடுப்பி கிருஷ்ணருக்குச் சாற்ற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. தன்னுடைய பக்தியை மெச்சி ஒரு வித பெருமிதமும் அவர் மனதில் எழுந்தது. உடனே மானசீகமாக எல்லா துளஸியையும் பறிக்கிறார்-மாலையாகக் கட்டுகிறார். கிருஷ்ணருக்குச் சாற்றுகிறார். மாலை கிருஷ்ணரின் கழுத்தில் நிற்காமல் தொப்பென்று கீழே விழுந்து விடுகிறது. எல்லாமே மனத்தளவில்தான் நடக்கின்றன. மறுபடியும் மாலை கட்டி சூட்டுகிறார். அதுவும் கீழே விழுகிறது. இந்த மாதிரி ஒரு முறை அல்ல. பலமுறை நடக்கிறது. மனக்கலக்கம் அடைந்த வியாஸராயரின் கவனம். வெளியில் கேட்கும் சத்தத்தினால் நடைமுறை உலகச் சூழலுக்குத் திரும்புகிறது.

என்னவென்று வெளியே பார்கிறார். பல்லக்குத் தூக்கிகள், பல்லக்குப் போகும் பாதையில் வழிமறித்து நிற்கும் ஒரு ஆடு மேய்ப்பவனை அதட்டி வழிவிட்டு விலகும்படி கூறிக் கொண்டிருந்தனர். அவனோ நகராமல், மறுபடியும் மறுபடியும் பல்லக்கு தூக்குபவர்களிடம் உள்ளே இருக்கும் பெரியவரிடம் ( அவர் யாரென்று அவனுக்குத் தெரியாது) ஒரு விஷயம் சொல்லிவிட்டுத்தான் வழி விடுவேன் என்று சண்டித்தனம் செய்தான். வியாஸராயர். பல்லக்கை நிறுத்தும்படி சொல்லி விட்டு அவனிடம் என்ன விஷயம் என்று கேட்கிறார் - அவன் ஏதோ தன் குறைபற்றி நம்மிடம் சொல்லப்போகிறான் -  நல்ல வார்த்தைகளை ஆறுதலாகச் சொல்லிவிட்டு மேலே யாத்திரையைத் தொடரலாம் என்பது அவர் எண்ணம். அவனோ வியாஸராயரை நோக்கி, நீங்கள் மறுபடியும் மறுபடியும் மாலைகளை கிருஷ்ணருக்குப் போடுகிறீர்கள் - அவைகள் திரும்பித் திரும்பக் கீழே விழுகின்றன. நீங்கள் அவசரம் அவசரமாக பொறுமை இழந்து போடும்போது மாலைகள் கிருஷ்ணர் கையில் இருக்கும் மத்தில் மாட்டிக் கொள்கின்றன. எனவேதான் கழுத்தில் அவை நிற்காமல் கீழே விழுகின்றன. அடுத்த தரம் போடும்போது, மத்தில் மாட்டிக் கொள்ளாமல் கவனமுடன் போட்டீர்கள் என்றால் மாலை கழுத்தில் நின்று விடும் என்று சொல்கிறான்!

வியாஸராயருக்கு தூக்கி வாரிப்போடுகிறது. தான் மானசீகமாகச் செய்வது. இந்த இடையனுக்கு எப்படி தெளிவாகத் தெரிகிறது. என்று அதிர்ச்சி அடைகிறார். உனக்கு எப்படியப்பா நான் செய்தது தெரியும் எனக் கேட்கிறார். அவனோ மிகவும் சாதாரணமாக சாமி, நானும் அதையேதான் செய்து வருகிறேன். கிருஷ்ணருக்கு துளஸி என்றால் பிடிக்குமாமே! அதனால் நான் இந்த துளஸிகாட்டையே மாலையாக்கி தினமும் கிருஷ்ணருக்குப் போடுகிறேன். என்னால் வேறு என்ன அவருக்குச் செய்ய முடியும்? இன்று நான் கட்டிய மாலையை அவர் காலில் போடும்போது தாங்கள் போட்ட எல்லா மாலைகளும் நான் போட்ட மாலைகளின் மீது வந்து விழுவதைப் பார்த்தேன். என்னவென்று பார்த்து, காரணம் தெரிந்து உங்களிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.  நான் வந்த வேலை முடிந்து விட்டது சாமி என்று சொல்லி விட்டு ஆடுகளை விரட்டிய படியே அங்கிருந்து நகர்கிறான். தன் கிருஷ்ண பக்தி பற்றி மிகுந்த பெருமிதம் கொண்டிருந்த வியாஸராயர் கண்கலங்கி, கைகூப்பியபடி அவனைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

கஜேந்திர மோக்ஷம் கதை எல்லோருக்கும் தெரியும். அந்தக்கதையில் வரும் கஜேந்திரன் எனும் யானை அதன் முற்பிறவியில் இந்த்ரத்யும்னன் எனும் பாண்டிய அரசனாக (பாண்டியர்கள் வம்சம் அத்தனை பழமையானது) இருந்திருக்கிறது. இந்த்ரயும்னன் குரு அகஸ்திய மகரிஷி ஆவார். அரசன் ஒருநாள் தன் அரண்மனையில் பூஜை செய்து கொண்டிருக்கும்பொழுது. அவனை சந்திக்க குரு அகஸ்தியர் வருகிறார். மன்னன் தன் குரு வருவதை கவனித்தான் என்றாலும் கவனிக்காதது மாதிரி தொடர்ந்து தன் பூஜையில் ஈடுபடுகிறான். அரண்மனை பூஜை ஆயிற்றே - பூஜைப் பொருட்கள், உபகரணங்கள் எல்லாமே அதி விலை உயர்ந்த, பெரிய பெரிய பொருட்களாக ஆடம்பரமாக இருந்தன. மன்னன் மனதில் பெருமிதம் பிறக்கிறது.

தன்னைப்போல இவ்வளவு பெரிய அளவில் தன் குருவால் இறைவனுக்குப் பூஜை செய்ய முடியுமா - மிஞ்சிமிஞ்சிப் போனால், மிகவும் சிறிய அளவில் எளிதில் கிடைக்கக் கூடிய பூ, பழம் கொண்டு தான் அவரால் வழிபாடு நடத்த முடியும்! என்கிற எண்ணங்கள் ஓடியபடி இறைவன் பால் மனம் ஈடுபடாமல் மன்னன் பூஜையைத் தொடர்கிறான். அகஸ்தியர் நிலைமையை உணர்கிறார். தன் மாணவனை நோக்கி, பூஜையில் எல்லா திரவியங்களும் இருந்தாலும், மிகவும் முக்கியமான ஒன்று இல்லை. எது இல்லாவிட்டால் இறை வழிபாடு முழுமை அடையாதோ, பயன்தராதோ - எது இருந்து விட்டால் இறைவன் மனநிறைவுடன், நாம் அர்ப்பணிப்பதை ஏற்றுக் கொள்வானோ அந்த வஸ்து, குணம் வினயம் உன்னிடம் இல்லை. கர்வம்-மதம் என்பது மிருகத்தின். யானையின் குணம், மனிதர்களின் குணமல்ல. மனதளவில் யானையாக இருக்கும் நீ உருவத்திலும் யானையாகவே மாறுவாயாக என்று சாபமிடுகிறார். சாபவிமோசனமாக நீ உன் கர்வத்தை ஒழித்துவிட்டு, இறைவனை சரண் அடையும்போது, ஆண்டவனே வந்து உன்னை ஏற்றுக்கொள்வார் என்றும் கூறுகிறார்.

மாணவனின் தவற்றைத் திருத்தி, நல்வழிப்படுத்தாமல், குரு என்பவர் சாபம் கொடுப்பதோடு மட்டும் தன் வேலை கடமை தீர்ந்து விட்டது. என்று இருப்பாரா? இங்குதான் நுட்பமான கருத்து இருக்கிறது. சாபம் இடும் குருவே, சாப விமோசனமும் கூறுகிறார். இந்த்ரத்யும்னன் மனநிலையில் அவன் இறைவனடி சேர்வது என்பது சாமானியமாக, எளிதில் நடந்து விடும் காரியம் இல்லை. அப்படியே நடந்தாலும், பல பிறவிகளுக்குப் பின்னரே, மிகவும் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒருக்கால் நடக்கக்கூடிய காரியம் என்பதும் அகஸ்தியருக்கு நன்றாகவே தெரியும். அந்தக் காலத்தை, பல பிறவிகள் முடிவில் நடக்க வேண்டிய செயலை. ஒரே பிறவியின் - அந்தப் பிறவியின் முடிவிலேயே யானை ஜென்மத்தின் முடிவிலேயே அவனுக்கு நிகழும்படி அருள் பாலிக்கிறார். சாபமே ஆசீர்வாதமாகிறது. குருவின் கோபம் நன்மையிலேயே முடிகிறது. அதோடு மட்டுமல்ல! இன்று வரை இறைவன் பெருமை பற்றிக் கூறுமிடங்களில் எல்லாம் கஜேந்திரனின் சரித்திரம் பேசப்படுகிறதே அதுவும் எதிர்பாராமல் கிடைத்த இரட்டிப்பு பலன்தானே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar