Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஊசியின் காதில் நுழைந்த யானை!
 
பக்தி கதைகள்
ஊசியின் காதில் நுழைந்த யானை!

நாரத மகரிஷி திரிலோக சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். அன்று அவருக்கு பூலோகத்தைப் பார்க்க ஆசை. தனது சுயரூபத்திலேயே மக்களைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார். பெரும்பாலானோர், ‘யாரோ ஒருவர் தத்ரூபமாக நாரதர் போலவே வேஷம் அணிந்து நாடகத்தில் நடிக்க செல்கிறார் போலும்’ என நினைத்துக் கொண்டனர். மூன்றுபேர் மட்டுமே அவர் நிஜ நாரதர் என நம்பினர். அவர்களில் ஒருவர் பணக்காரர். மற்ற இருவர் பணக்காரரின் பண்ணையில் பணிபுரியும் விவசாயக் கூலித்தொழிலாளியும், ஒரு புலவரும்! அவர்கள் நாரதரிடம், திரிலோக சஞ்சாரியே! தாங்கள் நாராயணனின் திவ்யதேசங்களான பாற்கடலுக்கும், திருவைகுண்டத்துக்கும் சர்வ சாதாரணமாக சென்று வருபவர். மனித ஜீவன்களான நாங்கள் இறந்த பிறகு கூட, அங்கே செல்வோமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், எங்களால் அங்கே போக முடியுமா? தாங்கள் சொல்லுங்களேன்,” என்றார். இந்த கேள்விக்கு நாரதரால் பதில் சொல்ல முடியவில்லை. அன்பர்களே! நீங்கள் கேட்ட கேள்விக்குரிய விடை எனக்குத் தெரியாது. அந்த நாராயணனிடமே இதற்கு விடை கேட்டு வருகிறேன். அதுவரை நீங்கள் பொறுத்திருங்கள். வரும் பவுர்ணமியன்று, நிலா உதயமானதும், நீங்கள் உங்கள் ஊர் பெருமாள் கோவிலுக்கு வந்து விடுங்கள். நானும் அங்கே வருவேன்,” என சொல்லி விட்டு மறைந்து விட்டார்.நேராக வைகுண்டம் சென்றார்.

பரந்தாமனின் தாமரை பாதங்களை திருமகள் பிடித்து விட, அவர் யோக நித்திரையில் இருந்தார். கண்களை மூடிக்கொண்டே, உலக நடப்பைக் கவனிப்பதே யோக நித்திரை. அவருக்கு பூலோகத்தில் என்ன நடந்தது என்பது தெரியும். நாரதர் பரந்தாமனை தரிசித்த உடனேயே, பரந்தாமன் சொல்லிவிட்டார். நாரதா! நடந்ததை அறிவேன். நீ மீண்டும் பூலோகம் போய், அந்த மூவரிடமும், நான் ஊசியின் காதில் யானையை நுழைத்துக் கொண்டிருப்பதாக சொல். அவர்களில் யார் அதை நம்புகிறார்களோ, அவரே மோட்சத்தை அடைய முடியும் எனச்சொல்லி விடு,” என்றார். நாரதரை எதிர்பார்த்து, மாலையிலேயே பெருமாள் கோவிலுக்கு போய் விட்டனர் மூவரும். நாரதரும் வந்து விட, மூவரும் ஆவலுடன் ஓடினர். பக்தர்களே! நான் பகவானைப் பார்க்கப் போனேன். அப்போது அவர், ஊசியின் காதில் யானையை நுழைத்துக் கொண்டிருந்தார். அதனால், அவருடன் பேச முடியாமல் போய் விட்டது,” என்று அப்பாவி போல சொன்னார். பணக்காரரும், புலவரும் சிரித்தனர். அது எப்படி சாமி! ஊசியின் காதுக்குள்ளே யானை நுழையுமா? என்ன கதை அளக்கிறீங்க! எங்க ஊர் மக்கள் சொன்னது மாதிரி, நீர் நிஜ நாரதரே இல்லே! நாடகத்துக்கு வேஷம் போட்டவர் தான்,” என்றார்கள். ஆனால் தொழிலாளி நாரதர் சொன்னதை அப்படியே நம்பினார். என் பரந்தாமன் ஊசியின் காதில் யானையை நுழைக்கும் அளவு வல்லமை உடையவனா! ஆஹா!” என்று பரவசத்தோடு சொன்னான். நாரதர் அவனிடம், “பார்த்தீர்களா!  இறைவனால் எதையும் செய்ய முடியும் என நம்புபவனே அவனை அடைய முடியும். இதோ! இந்த தொழிலாளி பெருமாளை நம்பினான். இவனே இறப்புக்குப் பின் வைகுண்டம் செல்வான்,” என சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar