Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உதவினால் வளர்வீர்கள்!
 
பக்தி கதைகள்
உதவினால் வளர்வீர்கள்!

அட்சயம் என்றால், வளர்தல்; திரவுபதியின் புடவையை துச்சாதனன் இழுத்த போது, அட்சய என்றார், கிருஷ்ணர். உடனே, அந்தப் புடவை முடிவில்லாமல் நீண்டது. நன்றாக உழைத்தும், சூழ்நிலையால் கஷ்டப்படுவோர் அதிகம். கணவன் நல்ல பணியில் இருந்தாலும், வீட்டுக்கு பணம் தராமல் குடித்தால், அவனுடைய மனைவி, குழந்தைகளுடன் சிரமப்படுவாள். பண்புள்ளவராக இருந்தாலும், சம்பாதித்த பணம், நோய் காரணமாக செலவாகி விட்டால், அந்தக் குடும்பம், வாழ்க்கையை நடத்த சிரமப்படும். நன்றாக படித்தாலும், மேல்படிப்புக்கு செலவழிக்க இயலாத நிலையில் உள்ள மாணவர்களும் நாட்டில் உண்டு. இது போன்றோருக்கு உதவி செய்வது தான், அட்சய திரிதியை நாளின் நோக்கம். ஒரு காலத்தில், அட்சய திரிதியை நன்னாளில், பசித்தவர்களுக்கு தயிர் சாதம் தானம் செய்துள்ளனர். கோடை காலத்தில் இந்த விழா வருவதால், இந்நாளில், தயிர் சாதம் தானம் செய்வது மிகப்பெரும் புண்ணியம். நாமும் வளர வேண்டும்; நான்கு பேருக்கு நன்மையும் செய்ய வேண்டும் என்றால், கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். ஒருவரது ஜாதகத்தில், சுக்கிரன் சாதகமாக இருந்தால், அவருக்கு இத்தகைய மனோபாவம் ஏற்படும். ஒரு மனிதனுக்கு, குடும்பத்தில் இல்லறக் கடமைகள் பல உள்ளன. அவற்றை நிறைவேற்ற மனைவி வேண்டும். அந்த மனைவியை தரும் உரிமை பெற்றவர் சுக்கிரன்! அதனால், அவருக்கு, களத்திர காரகர் (மனைவியை தரும் உரிமை உடையவர்) என்ற பெயர் உண்டு. சுப பலத்தோடு சுக்கிரன் இருந்தால், நல்ல மனைவி வாய்ப்பாள். நாம் வாழ அழகான வீட்டை கட்டிக் கொள்ளும் வாய்ப்பை அருள்பவரும் அவரே! பிறந்தான், இறந்தான் என்றில்லாமல், ஒருவரது பெயர், புகழ் நிலைக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர், இசை பட வாழ்தல் என்று குறிப்பிடுகிறார். அந்தப் பெருமையை ஒருவருக்கு வழங்கும் அதிகாரம், சுக்கிரனிடமே உள்ளது.

மேலும், இவர், சங்கீதம் மற்றும் நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஈடுபடச் செய்து வித்வானாக்குவார். புராணங்களில் சொல்லப்படும் சப்பர மஞ்சம், அம்ச தூளிகா மஞ்சம் எனப்படும், வெல்வெட் மெத்தை மற்றும் குஷன் சேர் போன்ற ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்தச் செய்வார். சொகுசு வாகனம், கடல்வழி வியாபாரம், ரத்தின வியாபாரம் மற்றும் வான்வழி பயணங்கள் ஆகியவற்றை அனுபவிக்கச் செய்வார். நகைச்சுவை உணர்வுடன் பேச வைப்பார். தலைமைப் பதவியை வழங்குவார். நல்ல உறவினர் மற்றும் நண்பர்களைத் தருவதுடன், லட்சுமி கடாட்சத்துடன் வாழ வைப்பார். நமக்கு இந்த பலன்களையெல்லாம் சுக்கிரன் தர வேண்டுமானால், அவருக்கு அதிபதியான ரங்கநாதரை வணங்க வேண்டும். அட்சய திரிதியை நன்னாளில், பணம் உள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்திற்கு வித்திட வேண்டும். அவ்வாறு உதவினால், நீங்களும் வளர்வீர்கள்; மற்றவர்களும் வாழ்வர்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar