Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காரணம் சொல்லாதே!
 
பக்தி கதைகள்
காரணம் சொல்லாதே!

உபன்யாசகர் ஒருவர் தன் நிகழ்ச்சியின் இடையே, அன்றைய தினம் யாரெல்லாம் சுவாமி கும்பிடவில்லை? என்று கேட்டார். பலர் கை உயர்த்தினார்கள். இறைவனை வழிபடாமல் விட்டதற்கு ஆளுக்கு ஒரு காரணமும் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்ட உபன்யாசகர் பேசத்தொடங்கினார். பக்தி செய்யாமலிருக்கக் காரணம் சொல்லாதீர்கள். தங்கள் வேலையைச் செய்யாமல் விட்டதற்கு காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை. இதைவிடக் கடுமையான காரணங்களில் பல பக்தர்கள் வாழ்விலும் இருந்தது அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள். தகப்பன் கொடுமைக்காரனாக இருந்தும் பகவானை விடாமல் பக்தி செய்தவன் பிரகலாதன்! தாயால் கெட்ட பெயர் வந்தபோதும் பக்தியை விடாதிருந்தவன் பரதன்! அண்ணனே அவமதித்தபோதும் உள்ளம் தவறாமல் பூஜித்தவர், தியாகராஜர். கஷ்டமும் தரித்திரமும் கடுமையாக குடும்பத்தை வாட்டியபோதும் தெய்வத்தைக் கும்பிடுவதை மறக்காதவர், குசேலர்.

கட்டிய மனைவி அடங்காப்பிடாரியானபோதும், சற்றும் தவறாமல் பாண்டுரங்க வழிபாடு செய்தவர், சந்ததுகாராம். கணவன் கொலைகாரப் பாவியாக இருந்தபோதிலும் கிருஷ்ணனைப் பாடித்தொழுதாள், பக்த மீரா! புகுந்த வீட்டினர் பெரும் கெடுமைகளைச் செய்தபோதிலும், புலம்பாமல் புருஷோத்தமனை வணங்கினாள், சக்குபாய். மகன் இறந்த சோகத்திலும் மறக்காமல் மாதவனை வழிபட்டவர், பூந்தானம்! பெற்ற தாயை சிறுவயதில் இழந்த போதிலும் தாயாய் அந்த தமோதரனையே நினைத்துப் பணிந்தவர், நாரதர். அரசவைப் பணிப்பெண்ணுக்குப் பிறந்து அவமரியாதைகளை சந்தித்தபோதும் எண்ணம் முழுக்க கண்ணனாகவே இருந்தவர், விதுரர். கணவனை இழந்து கைக்குழந்தைகளுடன் கஷ்டப்பட்டபோதும் தெய்வத்தை குறைசொல்லாமல் கும்பிட்டாள், குந்திதேவி. சொந்த பந்தங்களே சூழ்ச்சி செய்து ஏமாற்றிக் கொடுமைகள் செய்தபோதும், பரந்தாமன் பாதங்களை மறக்காமல் தொழுதனர். பாண்டவர்! உடன் பிறந்த தம்பியே விரோதியாக இருந்தபோதும் ஜயமல்லர் தெய்வத்தையே தொழுது நின்றார்.

குடும்பத்தினர் அனைவருமே கைவிட்ட நிலையில் வருந்தாமல் ராம நாமம் சொன்னவர் வால்மீகி. அம்புப்படுக்கையில் இறுதி நேரத்தை எண்ணிக் காத்திருந்த போதும், பகவானை ஆயிரம் நாமம் சொல்லி ஆராதித்தவர், பீஷ்மர். தெய்வம் இது என்ற அறிவுகூட இன்றி அனைத் தங்கள் தோழனாகவே பார்த்து பக்தி செய்தவர்கள், கோபர்கள், கோபிகைகள். இப்படி எத்தனையோ கடுமையான துன்பங்களுக்கு மத்தியிலும் இறைவனை மறக்காமல் இருந்த பலகோடி பக்தர்கள் இந்தப் பட்டியலில் உண்டு. பக்தி ஒன்றுதான் வாழ்க்கைக்கு ஒரே ஆதாரம். அதைச் செய்யாமல் வேறு எதைச் செய்தாலும் பிரயோஜனம் இல்லை. இனிமேலாவது காரணம் சொல்லாமல் பகவானிடம் பக்தி செய்யத் தொடங்குங்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar