Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திருந்தினால் வாழ்வுண்டு!
 
பக்தி கதைகள்
திருந்தினால் வாழ்வுண்டு!

உடல் ஆரோக்கியத்திற்காக எவ்வளவு தான், நல்லவைகளை ஏற்றுக் கொண்டாலும், உடனே பலன் கிடைத்து விடாது. அதேசமயம், சிறிதளவே ஆனாலும் நஞ்சை அருந்தினால், அது, உடனே பலன் அளித்து விடும். இதுபோலவே, நல்லவைகள் பலனளிக்க நாட்களாகும்; தீயவைகளோ, உடனே பலனளித்து விடும். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல், பல ஆண்டுகள் படாத பாடுபட்டு காப்பாற்றிய நற்பெயர், ஒரு சில வினாடிகளிலேயே போய் விடும். நந்தனபுரம் என்ற சிற்றூரில், புரந்தரன் என்பவர் வாழ்ந்து வந்தார். மிகவும் நல்லவரான அவருக்கு, மாதவன் என்ற மகன் இருந்தான். தந்தையைப் போலவே, அவனும் நல்லவனாக இருந்தான். அவன் மனைவி சந்திரரேகை; பெயருக்கு ஏற்றாற் போல், நற்குணத்தவளாக விளங்கினாள். ஒருநாள், பூஞ்சோலையில் தன் மனைவியுடன் உலாவினான், மாதவன். அப்போது, ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மாலினி என்பவளைக் கண்டான். மிக அழகியான அவளைப் பார்த்ததும், அவன் மனம் மயங்கி, புத்தி தடுமாறியது.

அவள் மீது ஏற்பட்ட மோகத்தால், தன்னிடம் இருந்த செல்வம் அனைத்தையும் இழந்ததுடன், மனைவியை விட்டும் பிரிந்தான். கையில் காசில்லாத நிலையில், அவளுக்காக வழிப்பறியில் ஈடுபட்டான், பின், பொருளுக்காக கொலையும் செய்தான். ஆனால், எத்தனை காலங்கள் தான் தீய செயல்களை தொடர முடியும்.
உடலில் பல்வேறு பிணிகள் பீடித்து ஆட்ட, வழிப்பறியில் அவனால் ஈடுபட முடியவில்லை. இதனால், வறுமையில் வாடினான். பொருள் ஈட்ட முடியாத மாதவனை, விரட்டி விட்டாள், மாலினி. மனம் நொந்த மாதவன், பிணி மற்றும் வறுமையால், பைத்தியம் பிடித்தவனைப் போல, பல இடங்களிலும் சுற்றித் திரிந்து, கால் போன போக்கில் நடந்து, ஒரு மலை அடிவாரத்தை அடைந்தான். அவ்விடத்திற்கு வந்ததும், அதுவரை அவன் மனதை ஆட்டிப் படைத்த தீவினைகள் அனைத்தும் இருள் விலகுவதைப் போல விலக, மனத் தெளிவு அடைந்தான். மலையேறி, அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டு, அடியேனின் பாவங்களையெல்லாம் எரித்து, நன்னிலை காட்டிய பெருமாளே... அடியேனை முழுமையாக ஆட்கொண்டு, அருள்புரி... என வேண்டினான். மனம் திருந்தியவனுக்கு, அருள்புரிய, மாலவன் மறுப்பாரா! அவனுக்கு முக்தியையும் அளித்தார். மாதவனின் பாவங்களை எரித்து, அருள் புரிந்த அத்திருத்தலம் வேங்கடம்! வேம் + கடம் என்ற சொல்லுக்கு, பாவங்களை எரிப்பது என்பது பொருள். இத்தகவலை, வேங்கடமே மெய்வினை நோய் தீர்ப்பதுவும்... எனக் குறிப்பிடுகிறது, திவ்யபிரபந்தம். திருந்தியவர்களுக்கு வாழ்வளிக்க, திருவேங்கடத்து இறைவன் மறுப்பது இல்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar