Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தேவர்களைக் காத்த கஜானன்!
 
பக்தி கதைகள்
தேவர்களைக் காத்த கஜானன்!

அசுரன் தாளாசுரன், தன்னை எவராலும் அழிக்க முடியாத வரம் வேண்டி பிரம்மதேவனை நோக்கித் தவம் செய்தான். அவனுடைய தவசக்தியை மெச்சி பிரம்மதேவர் அவனுக்குக் காட்சி தருகிறார். தன்னை மனிதர், தேவர் போன்ற எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாத வரம் கேட்கிறான் அசுரன். பிரம்மனோ, பூமியில் பிறந்தவர் அனைவருக்கும் மரணம் சாஸ்வதம் என்று கூறியும், அவன் கேட்பதாயில்லை. ஆகையினால், அவன் ஏதாவது மாற்று கூறினால் அவனுக்கு மரணமே இல்லாத வரத்தை அளிப்பதாகக் கூறுகிறார். தாளாசுரனும், தனது பலத்துக்கும் குறைவான யானை ஒன்றைத் தவிர, வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாத வரத்தைக் கேட்கிறான். பிரம்மனும் அப்படியே வரம் தந்து அருளினார்.

இயற்கையாகவே அசுரர்களுக்கே உரித்தான ராட்சஸ குணம் தாளாசுரனையும் ஆட்கொண்டது. அதனால், தேவர்களைத் தாக்கி இந்திர லோகத்தைக் கைப்பற்றினான். வேதனையுற்ற தேவர்கள், பிரம்மனிடம் முறையிட்டனர். அவர், தாளாசுரனை வதைக்க வேண்டுமெனில், அவனைவிட பலவீனமான யானை ஒன்றால் தான் முடியும் என்றார். அதோடு, சிவபெருமானின் கருணை ஒன்றுதான் வழி செய்யும் எனக்கூறி, அவர்களை ஈசனை நோக்கிப் பிரார்த்திக்கச் சொன்னார். தேவர்கள் சிவபிரானைப் பிரார்த்தித்தனர். தேவர்களின் குறையைக் கேட்டறிந்த ஈசன், விநாயகப் பெருமானிடம், உனக்குத்தான் தாளாசுரனை வதைக்கும் பலம் இருக்கிறது. ஆகையால், அவனை அடக்கித் தேவர்களைக் காத்தருள்வாயாக என்று கட்டளையிட்டார்.

விநாயகப்பெருமான் கஜமுகத்தோன் அல்லவா? உடனே, தாளாசுரனை நோக்கிப் படையெடுத்துச் சென்றார். முதலில், அவனிடம் சிக்கியிருந்த தேவலோகத்தையும் மற்ற உலகங்களையும் விடுவித்தார். பிறகு, தாளாசுரனை எதிர்த்துப் போர் புரிந்தார். மிகக் கடுமையாக நடைபெற்ற இந்தப் போரில் தாளாசுரன் தன் பலத்தையெல்லாம் இழந்தான். வந்தது சாட்சாத் விநாயகப்பெருமானே என உணர்ந்த தாளாசுரன், அவரது காலில்  விழுந்து சரணடைந்தான். விநாயகப்பெருமானும் அவனது சரணாகதியை ஏற்று அவனுக்கு நல்வாழ்க்கையையும் மற்றவர்களைப் போற்றி வாழ வைக்கும் முறையையும் போதித்தார். தாளாசுரன் விநாயகரிடமே ஞானம் பெற்று அன்று முதல் அவரது பக்தராகி, அன்பு எனும் உலகத் தத்துவத்தை ஆராதித்து அவர் அடி போற்றி மகிழ்ந்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar