Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » லக்ஷ்மண சாதுர்யம்!
 
பக்தி கதைகள்
லக்ஷ்மண சாதுர்யம்!

சீதை - ஸ்ரீராமர் விவாஹம் விமரிசையாக நடந்தேறியதும் விருந்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயின. அப்போது மிதிலாபுரியில் இருந்த பெண்கள், ராமர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், மூத்தோர்களை அழைத்து வரும்படி கூறினர். ஒரு பிரம்மாண்ட மாளிகையில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ராமர், தம் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களோடு அங்கு விருந்துண்ணும் சடங்குக்கு வந்தார். அங்கு நிறைந்திருந்த பெண்களின் நெரிசலைக் கண்டதும் அவர் லக்ஷ்மணனின் காதில், லக்ஷ்மணா! இது பெண்களின் சபை. இங்கு நீ எக்குத் தப்பாய் எதுவும் சொல்லி விடாதே. ஏதாவது சொல்லப்போக, இவர்கள் நம் தலையை உருட்ட ஆரம்பித்து விட்டால் நன்றாக இருக்காது. அவர்கள் நம்மை கேலி செய்வது இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சடங்கு. ஆகவே, பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

லக்ஷ்மணன், சரி அண்ணா, நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்றார்.

வாழை இலை போட்டு, அதில் பலவித உணவு வகைகள், காய்கறிகள், பதார்த்தங்கள் பறிமாறப்பட்டு அவர்கள் உபசரிக்கப்பட்டனர். விருந்து களைகட்ட ஆரம்பித்தது. அப்போது திடீரென தாய்மார்களிடையே ஒரு சலசலப்பு. ஒரு பெண் அருகில் இருந்த மற்றொரு பெண்ணிடம், என்னைக் கேட்டால் நம்முடைய சீதை எல்லோரையும் விட ரொம்ப அழகு! ராமரைப் பார்; கொஞ்சம் அழகில்லை. அவரும், அவருடைய நிறமும்! கன்னங்கரேல் என்று நெருப்பைக் குளிப்பாட்டின மாதிரி. ஜானகியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் கூட இவரைப் பார்க்க முடியாது. கண்ணுக்கும் தெரிய மாட்டேன் என்கிறார் என்றாள்.

அதைக் கேட்டதும், லக்ஷ்மணனுக்கு உசுப்பியது போலாகி விட்டது. ஓஹோ, முதலில் இவரைப் பார்ப்பதற்குத்தானே ஓடிக் கொண்டிருந்தீர்கள் என்ற சொல்லிக்கொண்டே, தன் ஸ்தானத்தில் இருந்து எழுந்தபோது, ராமர் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு தம்பி, இது பெண்களின் சபை! சாந்தமாக இரு. இவர்கள் விநோதமாகப் பேசுவார்கள். வேடிக்கை செய்வார்கள். அவர்களோடு மல்லுக்கு நிற்காதே. இங்கு நீ பேசுவது உசிதமில்லை என்றார்.

இதைக் கேட்டதும், அப்பெண்கள் சபை இன்னும் உற்சாகமாக ஆரம்பித்தது, ஆமாம், நானும் கவனிக்கவே இல்லை. இவ்வளவு கருப்பா? எப்படிப்பட்ட மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து விட்டோம் பாரேன். நமது ஜானகி எத்தனை அழகு! தந்தக் கடைசல்! உண்மைதான். எனக்கு இன்னமும் ராமர் கண்ணுக்குத் தெரியவில்லை. எங்கிருக்கிறார் ராம்ஜி? என்றாள்.

அதைக் கேட்கக் கேட்க லக்ஷ்மணனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உடனே அவர், அடி சக்கை! கண்ணில் படவில்லையா உங்களுக்கு? அப்போது இவரை தரிசிப்பதற்கு ஓடோடி வந்து கொண்டிருந்தபோது, இவர் அகலிகைக்கு விமோசனம் அளித்தார்! தாடகையை வதம் செய்தார்! என்று உங்களுடைய வாயால்தானே இவருடைய மகிமையை புகழ்ந்து கொண்டிருந்தீர்கள்? என்று லக்ஷ்மணன் வியாக்யானம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

அதைக்கேட்ட மிதிலாபுரி பெண்கள், அப்படியா? அகலிகைக்கு விமோசனம் கொடுத்தாரா? யார் பாஷாண்டமாகி இருந்தாளே அதே அகலிகையா? என்றனர்.

ஆமாம், பார்த்தீர்களா என் பிரபுவிடம் எத்தனை சக்தி இருக்கிறது என்று? என்றார் லக்ஷ்மணன்.

உடனே ஒரு பெண் சொன்னாள், ராமரிடம் சக்தி எங்கேயிருக்கிறது தம்பி? உங்களுடைய அயோத்தியில் என்ன கல்லே இல்லாமலா இருந்தது? இல்லை பாஷாண்டமானவர்கள் இல்லாமல் இருந்தார்களா? என்றாள்.

ஆமாம், நிறையவே இருந்தார்கள் என்றார் லக்ஷ்மணன்.

சரி, அங்கு ராமருடைய ஸ்பரிசம் எந்தக் கல்லையாவது பெண்ணாக்கியதா? என்றாள் அப்பெண்.

இல்லை, ஆக்கவில்லை.

இப்போது எப்படி ஆக்கியது தெரியுமா? ராமர் மிதிலாபுரியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஜானகியுடைய சக்தியின் பிரபாவத்தால்தான் கல்லான பெண், மீண்டும் பெண்ணானாள். ராமரிடத்தில் ஒரு சக்தியும் இருக்கவில்லை. இவருக்கு வில்லை அசைக்கக்கூட திராணி கிடையாது. ஏதோ பெரிய பெரிய வீரர்கள், சூரர்கள் வந்தார்கள். அவர்களின் பலத்தைக் காட்டிக் காட்டி வில் நலிந்து விட்டது. அப்போது ராமர் வந்து வில்லை ஒடித்துப் புகழைத் தட்டிக் கொண்டு போய் விட்டார். எல்லோரும் ராமருடைய பராக்கிரமத்தை பாராட்டுகிறார்கள். ராமர் எங்கே வில்லை உடைத்தார்? என்றாள்.

இன்னொரு பெண்மணி சொன்னாள், நீ சொல்வது முழுக்க முழுக்க உண்மை. ராமருக்கு இவ்வளவு சக்தி எப்படி இருக்க முடியும்? உனக்குத் தெரியுமா? தசரத மகாராஜருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது, வசிஷ்ட ரிஷி புத்திர காமேஷ்டி யாகம் செய்யச் சொன்னார். யாகத்தில் யக்ஞ நாராயண பகவான் தோன்றி, குழந்தை பாக்கியத்துக்காக பாயசத்தைக் கொடுத்தார். அப்புறம்தான் பிள்ளை பிறந்தது. நீயே சொல்வேன்! பாயசம் சாப்பிட்ட யாராலாவது வில்லை உடைக்க முடியுமா? இவரிடம் வலிமை ஒன்றுமில்லை என்றாள்.

உடனே லக்ஷ்மணன் சொன்னார், அண்ணா, இப்போது என்னால் பேசாமல் இருக்க முடியாது. முதலில் உங்களை வைத்து கேலி செய்து கொண்டிருந்தார்கள். இப்போது நமது அன்னையார்களையும் வம்புக்கு இழுக்கிறார்கள் என்றார்.

பிறகு தன்னுடைய ஸ்தானத்தில் இருந்து எழுந்து, சரிதான், அயோத்தியில் தாய்மார்கள் பாயசம் உண்டு தான் பாலகர்களை ஜனிக்கிறார்கள். ஆனால், மிதிலா புரி பெண்கள் பாயசம் சாப்பிட வேண்டிய அவசியம் கூட இல்லை. பூமியைப் பிளந்தால் அதிலிருந்தே சந்தானம் கிடைத்து விடுகிறது என்றார்.

அடேயப்பா, லக்ஷ்மணனை சீண்டுவது மிகவும் சிரமமான காரியம் என்று எல்லோரும் அமைதியாகி விட்டார்கள். அவரிடம் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தயாராக இருந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar