Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » யாகப் பலன்!
 
பக்தி கதைகள்
யாகப் பலன்!

அன்று கண்ணன் ஆயர்பாடி கோபர்களிடம் யாரும் இன்று சாப்பாடு கொண்டு வர வேண்டாம் என்றான். அதனால், எவரும் அன்று மதிய உணவு கொண்டு வரவில்லை. ஆனால், வழக்கம்போல மதியம் அவர்களுக்குப் பசி எடுத்தது. கண்ணா நீதான் எங்கள் பசிக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும் என்றனர். கண்ணன் யோசித்தான். அடுத்த கிராமத்து பிராமணர்கள் அன்று ஒரு யாகம் வளர்த்து இந்திரனுக்கு ப்ரீதி செய்து கொண்டிருப்பதால், நிறைய உணவு அங்கே கிடைக்குமே என எண்ணினான். கண்ணன் பிருந்தாவனச் சிறுவர்களை அழைத்து, நீங்கள் அடுத்த ஊரில் யாகம் வளர்த்துக் கொண்டிருப்பவர்களிடம் கண்ணன், பலராமன் இருவரும் பசியாக உள்ளனர். நாங்கள் அவர்களோடு வந்திருக்கிறோம். எங்கள் எல்லோருக்கும் உணவு தாருங்கள் என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். அவர்களும் அவ்வாறே அங்குச் சென்று கேட்டபோது அந்த பிராமணர்கள் இன்னும் யாகம் முடியவில்லை. முடிந்த பிறகு எல்லோரும் இங்கு உணவு அருந்திய பிறகுதான் தர முடியும் என்றனர்.

கண்ணனிடம், சிறுவர்கள் நடந்ததைச் சொல்ல, ஏன் உணவு அங்கு இல்லையா? என்றான் கண்ணன். இருக்கிறது. ஆனால், தேவர்களுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டுத்தான் தருவார்களாம் என்றனர். அப்படியா? அந்த பிராமணர்களின் வீடுகள் அங்கேதானே உள்ளது. வீட்டில் அவர்களின் மனைவியர் இருப்பார்களே? அவர்களிடம் சென்று கண்ணனும் பலராமனும் ரொம்ப பசியாக இருக்கிறார்கள். உங்களிடம் சாப்பிட உணவு வாங்கி வரச் சொன்னார்கள் என்று சொல்லுங்கள் என்றான் கண்ணன். சிறுவர்கள் மீண்டும் சென்றனர். வீடுகளில் பிராமணர்களின் மனைவியரிடம் சொன்னவுடனே அந்தப் பெண்கள் ஒன்றுகூடி யோசித்தார்கள். இந்த யாகத்துக்கு சமைத்த உணவு தயாராக உள்ளது. ஆனால், புதிதாக சமைத்து எடுத்துச் செல்வதற்குள் கண்ணன், பலராமன் சென்றுவிட்டால் என்ன செய்வது? இதையே எடுத்துச் செல்வோம் என்று நிறைய உணவை எடுத்துக்கொண்டு அவர்களே கண்ணன் இருக்குமிடத்துக்குச் சென்றனர். சில பிராமணர்கள் இதைப் பார்த்துவிட்டு அவர்களைத் தடுத்தனர். அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது. கணவனின் கட்டளையை மீறவும் முடியாது. இந்தப் பெண்களோ கவலையின்றி கண்ணன், பலராமன் இருக்கும் இடம் தேடிச்சென்று அவர்களே அனைவருக்கும் பரிமாறினார்கள்.

அங்கே, பிராமணர்களின் யாக குண்ட அக்னியில் ஒரு தேவதை தோன்றி அனைத்து தேவர்களும், இந்திரன் உட்பட உண்டு மகிழ்ந்ததாகக் கூற, பிராமணர்கள் திடுக்கிட்டனர். இன்னும் மந்திரங்களே முடியவில்லையே என்று ஆச்சரியப்பட்டனர். இதற்கிடையே கண்ணன் அந்தப் பெண்களிடம், நேரமாகிவிட்டது. நீங்கள் வீடு செல்லுங்கள் என்று கூறினான். அவர்கள், இனி நாங்கள் வீடு திரும்ப முடியாதே! எங்கள் வீட்டில் கணவன்மார்கள், எங்கள் வார்த்தையை மீறி உணவோடு வீட்டை விட்டுச் செல்லும் நீங்கள் இனி வீடு திரும்ப முடியாது என்று சொல்லிவிட்டார்கள் என்று வருந்தினர். கண்ணன் சிரித்தான். அதெல்லாம் ஒன்றும் நடக்காது. கவலையின்றி நீங்கள் செல்லுங்கள். உங்களை அவர்கள் சாந்தோஷமாக வரவேற்று ஏற்றுக் கொள்வார்கள் என்றான். யாகம் முடிந்தவுடன், இரு யோகிகள் அங்கு தோன்றி, விஷ்ணுவுக்கு யாகப்பலன் எப்படிப் போய் சேர்கிறது. அதனால் பிரபஞ்சம் எப்படி சம்ரட்சிக்கப்படுகிறது என்று விளக்கியபோதுதான், பிராமணர்களின் அகக்கண் திறந்தது. இறைவனின் அம்சமாகிய கண்ணனும், பலராமனும் உணவு கேட்டு வாங்கி உண்டதன் விளைவே யாகத்தின் முழுப்பயன் என்று உணர்ந்தனர். தங்கள் அறியாமையை எண்ணி வருந்தினர். தங்கள் மனைவியர் வரும்வரை காத்திருந்தனர். வந்ததும் அவர்களை வணங்கி, தங்கள் தவறுக்கு வருந்தினர். அதோடு, அவர்களைப் போற்றி மரியாதையோடு நடத்தினர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar