Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சமூக விலைமதிப்பும் தேவைகளும்!
 
பக்தி கதைகள்
சமூக விலைமதிப்பும் தேவைகளும்!

ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனது வீடு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு மனிதனின் லச்சியமானது இருப்பிடத்திற்கு செல்வது. இருப்பிடத்தை தேடுவது மற்றும் நமது இருப்பிடத்திற்கு சென்றடைவதே. இதனை சென்றடைவதற்கு மனிதருள் ஒற்றுமை, தூய்மை மற்றும் தெய்வீகத் தன்மையே உதவும். மனப்பூர்வமாக செய்யும் எந்த செயலும் நம்மை நம்  இருப்பிடத்தினை அடையச் செய்கிறது. ஒருவரின் எண்ணம், நினைப்பு, நடத்தை ஒன்றாக இருந்தால் அதுவே அவனை தூய்மையின் நிலைக்கு உயர்த்தும். அன்பு, அமைதி, உண்மையான நடத்தை, நல்லொழுக்கம், தியாகம், அஹிம்சை இவையே உலகளாவிய மனித உணர்வுகள் இவையனைத்தும் கடைபிடிப்பவன் தூய்மை நிலை அடைகிறான். இதில் ஒன்றை கடைபிடிக்க ஆரம்பித்தால் பிற குணங்கள் தானாகவே நம்மை வந்து சேரும். இந்த குணங்கள் போலவே ஆறு வகை தீய குணங்களும் மனிதனுள் இருக்கிறது. அவை காமம், குரோதம், மோகம், மதம், லோபம் (எல்லாம் தனக்கே வேண்டும் என்ற எண்ணம்). மாட்சர்யம் (பொறாமை) இவையே மனிதனை மோட்சம் அடைவதற்கு தடையாக இருக்கும் குணங்கள் இதில் ஒரு குணம் கொஞ்சம் தலை தூக்கினாலும் மீதமிருக்கும் குணங்களும் தானாக செயல்பட தொடங்கி விடும்.

நாம் வாழ்க்கையின் ஆரம்பத்திலே இருத்தல் முடியாதது ஒன்றாகும். நிறைவான வாழ்விற்கு உண்மை அன்பால் நிறைந்ததாய் இருத்தல் வேண்டும். அன்பு தியாகத்தின் வடிவமாக இருத்தல் வேண்டும். அஹிம்சை குணத்தால் அனைவரையும் இணைக்க வேண்டும். தர்மம் வார்த்தையில் மட்டும் இல்லாமல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருத்தல் வேண்டும். உண்மையான நடத்தையே மேன்மையை அடையச் செய்கிறது. எதிர்பார்ப்பின்றி வரும் அன்பே உண்மையானது. நம் உணர்வுகளை கட்டுப்படுத்துவதே அஹிம்சை. வாழ்வின் உண்மையான அர்த்தம் தியாகத்தின் மூலமே வெளிப்படும். ஏனெனில் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்தே வாழ்கிறோம். அனைவரும் ஒன்றே, வேற்றுமையில், ஒற்றுமை இன்பத்தை அடையலாம். கல்வி என்பது மனிதனை மேன்மைபடுத்துவதே கல்வியின் மூலம் நல்லொழுக்கத்தையும் நன்மதிப்பையும் பெறலாம். ஒழுக்கமற்ற கல்வி தற்பெருமையையும் ஆணவத்தையும் வளர்க்கிறது. இதனால் நாம் சமூகத்தில் மதிப்பை இழக்கிறோம். முழு நிலவை மேகம் மறைப்பது போல் நம் அறிவை இந்த தீய குணங்கள் மறைத்து விடுகிறது.

மனித குணங்களில் மிகவும் ஆபத்தானது ஆணவம் (திமிர்) என்ற குணம். உண்மையான கல்வி நம் மனதை தூய்மைப்படுத்துகிறது. தூய்மையே நம்மை தெளிவுபடுத்துகிறது. தெளிவான செயல் சமூகத்தை மேம்படுத்துகிறது. மனசாட்சியுடன் வேலை செய்வதே உண்மையான ஞானம். இந்த ஞானமே நாம் தெய்வீக சக்தியை அடைய உதவுகிறது. மோக்ஷத்திற்கு வழிகாட்டுகிறது. அகிலத்தை மேன்மையாக விரிவடையச் செய்கிறது. மனிதன் மனத்தின் தூய்மையே நல்லறிவு. நல்லொழுக்கம் மற்றும் நல்ல மதிப்பிற்கு வித்தாகிறது. நல்லறிவு மற்றும் ஒழுக்கத்தால் மனிதன் பரந்த நோக்கமுடையவனாகிறான். கல்வியின் வித்தானாது யாதெனில் நல்லொழுக்கம் ஒற்றுமை, அமைதி, தூய்மை, மேல்நோக்கு பார்வை, உண்மையான நடத்தையே காந்தியை மஹாத்மா வாக்கியது. நல்லொழுக்கமே ஸ்ரீராமரை மனிதருள் முன்மாதிரியாக்கியது. அவர் ஒரு நல்ல மகனாக, நல்ல கணவனாக, நல்ல சகோதரனாக நாடே போற்றும் அரசனாக திகழச் செய்தது. அன்பின் பலமே சிறந்த மனிதர்களை உருவாக்குகிறது. தூய்மையான தியாகத்திற்கு தாய் ஒரு எடுத்துக்காட்டு ஒழுக்கமற்ற கல்வி பயனற்றது. அது சமூகத்திற்கு சாபக்கேடு, நல்லொழுக்கத்தை கற்றுத்தரும் கல்வியே நம் நாட்டிற்கு சிறந்த வரமாக அமையும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar