Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நல்லதை கற்றுக் கொடுப்போம்!
 
பக்தி கதைகள்
நல்லதை கற்றுக் கொடுப்போம்!

குழந்தைகளுக்கு, நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுப்பது, பெற்றோரின் கடமை என்பதை உணர்த்துவதே தீபாவளி பண்டிகையின் நோக்கம். நரகாசுரன் நல்லபடியாக வளராததால், தன் பெற்றோர் கையாலேயே, அழிவைச் சந்திக்க நேர்ந்தது. அதனால், தீபாவளிக்கு, குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசு வாங்கிக் கொடுப்பதோடு, இதுபோன்ற நல்ல கருத்துகளை சொல்லி, கொண்டாடச் சொல்ல வேண்டும். பிரம்மாவிடம் இருந்த வேதங்களை திருடிய அசுரன் ஒருவன், பாதாள லோகத்தில் ஒளிந்து கொண்டான். அதை மீட்க, வராக அவதாரமெடுத்து, பூமிக்குள் சென்றார் பெருமாள். அப்போது, பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில், அவளுக்கு, பவுமன் என்ற மகன் பிறந்தான். பவுமன் என்றால், பூமியின் பிள்ளை; அவன், கெட்ட குணங்களைக் கொண்டவனாக இருந்தான். இதனால், நரகாசுரன் என்று அழைக்கப்பட்டான். அசுர குணம் கொண்ட மனிதன் என்று இதற்குப் பொருள். நரகாசுரன் வசித்த நகரம், தற்போது அசாம் என்று அழைக்கப்படும், காமரூபம் பகுதியில் இருந்த, ப்ராக் ஜ்யோதிஷபுரம். ஜோதிஷபுரம் என்றால் பிரகாசமான பட்டணம் என்று பொருள். ப்ராக் என்றால், கிழக்கு அல்லது முன்பக்கம்; இந்நகரமே, தற்போது, கவுகாத்தி எனப்படுகிறது.
தேவர்கள் மற்றும் பூலோக மக்களை கொடுமை செய்தான், நரகாசுரன். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், அவனை, யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. வேறு வழியின்றி, நரகாசுரனின் தந்தையான பெருமாளிடம் புகார் செய்தார், பிரம்மா.

நரகாசுரனோ, தன் தாயைத் தவிர, வேறு யாராலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். இதையடுத்து, இன்னொரு பிறவியில், சத்தியபாமாவாகப் பிறந்து, கிருஷ்ணரை திருமணம் செய்தாள் பூமாதேவி. அவளை அழைத்துக் கொண்டு, நரகாசுரனுடன் போருக்குச் சென்ற கிருஷ்ணர், ஒரு கட்டத்தில், நரகாசுரனால் தாக்கப்பட்டு, மூர்ச்சையடைபவர் போல் நடித்தார். பதறிப்போன சத்தியபாமா, தன் கணவரைக் காப்பாற்ற, தன் மகன் மீது அம்பு தொடுத்தாள்; நரகாசுரன் இறந்தான். அதன்பின்பே, முற்பிறவி நினைவு வர, பெற்ற பிள்ளையையே கொன்று விட்டோமே என்று, அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது. அதேநேரம், அவனது மரணத்திற்காக, உலகமே, தீபமேற்றிக் கொண்டாடுவதைப் பார்த்தாள். அதனால், பெருமாளிடம், தன் மகன் இறந்த நாளை, தீபாவளி என்றும், அவன் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இறந்ததால், மகனின் பெயரால், நரக சதுர்த்தசி என்றும் பெயரிட்டு கொண்டாட, அனுமதி கேட்டாள். அதன்படி, தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஒருவர் இறந்தால், எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம். அதன்படி, அன்று எண்ணெயில், லட்சுமியும், வெந்நீரில், கங்கையும் வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதனால், இந்நீராடல், கங்கா ஸ்நானம் என்று பெயர் பெற்றது. தன் மகனைப் போல் அல்லாமல், எல்லாரும் பாவம் நீங்கி, புண்ணியம் செய்தவர்களாக வேண்டும் என்ற நல்ல நோக்கமே அதற்கு காரணம்.பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு, நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை, நரகாசுரனின் வாழ்க்கை சரித்திரம், நமக்கு உணர்த்துகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar