Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அபயாம்பிகை பட்டர்
 
பக்தி கதைகள்
அபயாம்பிகை பட்டர்

நல்லத்துக்குடி, மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூர். அங்கு 200 ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அந்தண தம்பதிக்கு அழகிய ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு தாத்தா பெயரான கிருஷ்ணசாமி என்று வைத்துவிடலாமே! என்று தம்பதியர் இருவரும் பேசிக் கொண்டனர். ஓ, அப்படியேச் செய்யலாம் என்று குழந்தைக்கு பெயர் சூட்டுவிழாவில் அனைவரது முன்னிலையிலும் சொன்னனர். அந்தத் தம்பதி விரைவில் நோய்வாய்ப்பட்டனர். சுவாமி இது என்ன சோதனை? நாம் இருவரும் விரைவில் இறந்துவிடுவோம் என்று தோன்றுகிறது. நம் குழந்தை என்ன செய்வான்? பாவம், அனாதை ஆகிவிடுவானே...? என்று அந்தணரின் மனைவி மனவேதனையுடன் சொன்னார். உடனே, அந்தணர் அப்படிச் சொல்லாதே; குழந்தை கிருஷ்ணசாமி, தேவியின் அருளால் தோன்றியவன். அவனை அபயாம்பிகை காப்பாற்றுவள் என்று கூறினார். வேதியரும், அவருடைய மனைவியும் இறந்துவிட்டனர். அவர்களின் இறுதிச் சடங்குகளும் முடிந்து விட்டன. தனித்து விடப்பட்ட குழந்தை கிருஷ்ணசாமி செய்வதறியாது, வீட்டுத் திண்ணையில், பசியுடன் சோர்ந்தவாறு அமர்ந்திருந்தான்.

அப்போது இரண்டு வேதியர்கள் அவ்வழியே சென்றனர். ஓய்! குழந்தையின் நிலையைப் பார்த்தீரா? பெற்றவர்களை விழுங்கிவிட்டு, அனாதையாகி நிற்கிறான்? என்று ஒருவர் சொல்ல, மற்றவர் பாவம்! அப்படிச் சொல்லாதீர்; அனாதைக்குத் தெய்வமே துணை! என்று கூறினார். குழந்தையை அபயாம்பிகை காப்பாற்றுவாள்! என்று தனது தந்தை குறிப்பிட்டது கிருஷ்ணசாமியின் நினைவிற்கு வந்தது. அம்மா! அபயாம்பிகே! அம்மா! என்று அம்பிகையை கண்கலங்கி வணங்கினான். அதை கேட்டவுடன்... சுவாமி, தேவி உன்னைத்தான் அழைக்கிறான் குழந்தை! உடனே சென்று அருள் செய்க! குழந்தை பயந்துவிடாதிருக்க சாதாரணப் பெண் வடிவத்தில் செல்! என்று கூறினார். அப்படியே செய்கிறேன் சுவாமி! என்று அம்பாள் சொன்னார். சுவாமி சொன்னதுப் போலவே ஒரு சாதாரணப் பெண் வடிவத்தில் அம்பாள் கையில் உணவுடன் சென்றார். ரொம்பப் பசியா? அம்மா வந்துவிட்டேன்! இந்தா, சாப்பிடு! என்று ஊட்டி விட்டாள். தங்கக் கிண்ணத்தில் கொணர்ந்த அன்னத்தை அபயாம்பிகை ஊட்டியவுடன், கிருஷ்ணசாமியின் வயிற்றுப் பசி நீங்கியது. அத்துடன், வேத சாஸ்திர ஞானமும், கவிபாடும் திறமையும் கிடைத்துவிட்டது! வாலிபப் பருவத்தை அடைந்த நிலையில் வேலையில்லாமல் இருந்த கிருஷ்ணசாமியின் முன்னால் மீண்டும் அபயாம்பிகை தோன்றுகிறாள்.

கிருஷ்ணசாமி என்னுடன் வா! உனக்கு உரிய பணியை தருகிறேன். என்று அம்பாள் கூறுகிறார். வேதியப் பெண்ணாக வந்த அபயாம்பிகையைப் பின் தொடர்ந்து சென்றார் கிருஷ்ணசாமி. மயூரநாதர் கோயில் வாசல் வந்தவுடன் வேதியப் பெண் மறைந்து விட்டார். அபயாம்பிகை தாயே தன் கோயிலில் தொண்டு செய்ய அழைத்து வந்திருக்கிறாள்! இனி வாழ்நாள் முழுவதும் அவளுக்கே தொண்டு செய்வேன் என்று மனதாத வேண்டிக் கொண்டார். ஒரு நாள் கோயிலில் வாயிலில் கல்லில் கால் இடறி விழுந்தார் கிருஷணசாமி. அப்போது... அம்மா! அம்மா! அபயாம்பிகை தாயே! என்று அழைத்தார். மெதுவாகப் பார்த்து; வா! நான் உனக்கு நல்லத்துக்குடி வரை கைவிளக்குடன் வந்து வழி காட்டுகிறேன் என்று அபயாம்பிகை கைவிளக்குடன் நின்றார். அபயாம்பிகை கைவிளக்குடன் முன்னே நடக்க, கிருஷ்ணசாமி பின்னால் நடந்து செல்கிறார். அடுத்தநாள் அர்த்தஜாமப் பூஜைகள் முடிந்தபின் கிருஷ்ணசாமி இருளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இது என்ன அதிசயமாக உள்ளது. கைவிளக்கு எனக்கு முன்னால் செல்கிறது! ஆனால், எவரையுமே காணோமே! அபயாம்பிகையின் அருள்தான் இது! என்று பெருமகிழ்ச்சிக் கொண்டார்.

தாயே! பெற்றோர் இறந்தது முதல் என்னைப் பேணிக் காக்கும் உனக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? என்று கிருஷ்ணசாமி அம்பாளிடம் கேட்க, அதற்கு தாய், என்னை செந்தமிழ்ப் பாக்களால் பாடலாமே? என்று கூற, மிகவும் மகிழ்ச்சி தாயே! நீ தந்த வாக்கால் உனக்கு ஒரு சதகம் பாடுகிறேன்! கேள் என்று பாடினார். கிருஷ்ணசாமி! அபயாம்பிகை மீது சதகம் பாடி, அன்னையை மகிழ்வித்த உன்னை இனி உலகம், அபயாம்பிகை பட்டர் என்று போற்றும் என்று ஊர்மக்கள் அனைவரும் கூறினர். பெரியோர்களே எல்லாம் அபயாம்பிகை திருவருள்! என்று கிருஷ்ணசாமி கூறினார். நூறு பாடல்களைக் கொண்ட அபயாம்பிகை சதகம் மயிலாடுதுறை அம்பிகையான அபயாம்பிகை மீது இயற்றப்பட்ட நூலாகும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar