Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஞானத்தை யாரிடம் கற்பது?
 
பக்தி கதைகள்
ஞானத்தை யாரிடம் கற்பது?

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக்கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னன் அவரைக் கண்டான். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும் அவரது குரு யார்? என்பதையும் கேட்டான். எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்! என்றார், தத்தாத்ரேயர். இந்த பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், சுவாமி! ஒருவருக்கு ஒரு குருதானே  இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே... என்றான். அவனிடம், பஞ்சபூதங்கள், சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன் சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர். என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர், இதற்கு விளக்கமளித்தார்.

மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன். தூய்மையை தண்ணீரிடம் தெரிந்துகொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை நெருப்பு உணர்த்தியது. பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது. ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன். வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்தேன். எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடப்பதை உண்டு. பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது. எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின. இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும் ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன். புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்குக் காரணம் என்பதை உணர்ந்தேன்...! என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார் தத்தாத்ரேயர். அனைத்தையும் கேட்ட அரசன் மனத்தெளிவு பெற்று அவரை வணங்கிச் சென்றான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar