Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அனைத்தும் நாராயணன் !
 
பக்தி கதைகள்
அனைத்தும் நாராயணன் !

ஒரு காட்டில் சாது ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பல சீடர்கள். ஒரு நாள் அவர் தமது சீடர்களிடம், கடவுள் எல்லோரிலும் இருக்கிறார். எனவே எல்லோரையும் வணங்குங்கள்! என்று உபதேசம் செய்தார். ஒரு நாள் அந்தச் சீடர்களில் ஒருவன் ஹோமத்திற்கு விறகு சேகரிக்க காட்டிற்குச் சென்றான். அப்போது யார் எங்கிருந்தாலும் எல்லோரும் ஓடி விடுங்கள். ஓடிவிடுங்கள். மதயானை ஒன்று வருகிறது என்று யாரோ உரத்த குரலில் சத்தமிடுவது கேட்டது. எல்லோரும் ஓடினர். ஆனால் சீடன் ஓடவில்லை. யானையும் நாராயணன் என்பது தான் அவனுக்குத் தெரியுமே! அவன் ஏன் ஓட வேண்டும்? எனவே அங்கேயே நின்று கொண்டு, கைககூப்பிய வண்ணம் நாராயணனைத் துதிபாடி போற்றத் தொடங்கினான். யானைப் பாகன், ஓடுங்கள் ஓடுங்கள் என்று கத்திக் கொண்டு வந்தான். சீடன் அதைப் பொருட்படுத்தவில்லை. நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். கடைசியில் மத யானை துதிக்கையால் அவனைத் தூக்கி வீசி எறிந்துவிட்டுப் போய்விட்டது.

உடல் முழுவதும் காயங்களுடன் சீடன் மூர்ச்சித்து விழுந்தான். இந்த செய்தியைக் கேட்டு குருவும் மற்ற சீடர்களும் விரைந்து சென்று, அவனை ஆசிரமத்திற்குத் தூக்கி வந்து சிகிச்சை அளித்தார்கள். சிறிது நேரத்தில் அவனுக்கு நினைவு திரும்பியது. அப்போது சீடர்களுள் ஒருவன் அவனைப் பார்த்து, ஆமாம், மதயானை வருகிறது என்பதைக் கேட்டும் நீ ஏன் ஓடவில்லை? என்று கேட்டான். அதற்கு அந்தச் சீடன், நாராயணனே மனிதன் முதலிய எல்லா உயிர்களுமாக இருக்கிறார் என்று அல்லவா குருநாதர் நமக்கு உபதேசித்தார்! ஆகவே யானை- நாராயணன் வந்தபோது, அந்த இடத்தை விட்டு ஓடாமல் இருந்து விட்டேன் என்றான்.

இதைக் கேட்ட குரு, மகனே, யானை- நாராயணன்தான் வந்தான். அது உண்மை. ஆனால் யானைப்பாக-நாராணயன் உன்னை எச்சரித்தானே! எல்லோரும் நாராயணன் என்றால் நீ ஏன் அவனது வார்த்தைகளை நம்பவில்லை? யானைப் பாக- நாராயணனின் வார்த்தைகளையும் நீ மதித்திருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். (எல்லோரும் சிரித்தனர்) ஆபோ நாராயண:- அதாவது தண்ணீரும் நாராயணன் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சில தண்ணீரைத்தான் பூஜைக்குப் பயன்படுத்தலாம். சில தண்ணீர் வாய் கொப்பளிக்க, பாத்திரம் கழுவ, துணி துவைக்க மட்டும்தான் உதவும். குடிக்கவோ பூஜைக்கோ பயன்படாது. அதுபோலவே நல்லவன் கெட்டவன், பக்தன்- பக்தன் அல்லாதவன் என்று எல்லோரின் இதயத்திலும் நாராயணன் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் தீயவர்கள், பக்தர்கள் அல்லாதவர்கள், துஷ்டர்கள் இவர்களோடு எந்தவித உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது. பழகக்கூடாது. சிலருடன் வெறும் வாய்ப்பேச்சு மட்டும் வைத்துக் கொள்ளலாம். இன்னும் சிலருடன் அதுவும் கூடாது. இத்தகைய மனிதர்களிடமிருந்து விலகியே வாழ வேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar