Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சீதையைக் கவர்ந்த விராதன்!
 
பக்தி கதைகள்
சீதையைக் கவர்ந்த விராதன்!

உலகமகா காவியங்களில் ஒன்று கம்பராமாயணம் இக்காப்பியம் பாரத நாட்டில் இதிகாசம் ஆகும். இச்சொல் இது இவ்வாறு நடந்தது. என்னும் பொருள் தரும். நம் நாட்டின் இருபெரு இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும் ஆகும். வைணவ சமயத்தின் முழு முதல் தெய்வமான விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஏழாவது அவதாரம் இராமாவதாரம். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற் கேற்ப வாழ்ந்தவன் இராமன். அவனது வாழ்வியலை கூறும் நூலே இராம காதை என்று கம்பரால் பெயரிடப்பட்ட இராமாயணம் ஆகும்.

கைகேயி பெற்ற வரங்கள்:

கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களை உடையது. இலங்கை அரசன் இராவணனை அழிப்பதற்காக எழுதப்பட்டது. அதற்காகவே பூமியில் தசரத மன்னனின் மகனாகப் பிறந்த இராமனுக்கு முடிசூட்ட வேண்டும் என்று தசரதன் முடிசூட்டு விழாவுக்கு நாள் குறித்தபோது தேவர்கள் பெற்ற வரத்தாலும், இராவணன் செய்த பாவத்தாலும் மந்தரை என்ற பெயருடைய கூனி தசரதனின் மூன்று மனைவியருள் இரண்டாவது மனைவியான கைகேயியின் தோழியாக கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்தாள். அவளது தூண்டுதலால் கைகேயி தசரதனிடம் பெற்றிருந்த இரண்டு வரங்களில் 1.) பரதன் நாடாள வேண்டும். 2.) இராமன் காட்டிற்குச் சென்று பதினான்கு ஆண்டுகள் தவம் செய்ய வேண்டும். என்றும் தசரதன் கட்டளை இட்டார் என்று முடிசூட்டிக் கொள்வதற்கு முன் தன்னிடம் ஆசி பெற வந்த இராமனிடம் கூறினாள். இராமனும் இவை தந்தையின் கட்டளையாக இல்லாமல் உம்முடைய கட்டளையாக இருப்பினும் இவற்றை ஏற்பேன் என்று கூறி இலக்குவணனுடனும், சீதையுடனும், காட்டிற்குச் சென்றான். கைகேயி பெற்ற முதல் வரம் தவளாங்க முனிவரிடம் பெற்றது. (அபிதான சிந்தாமணி -ப.501) சித்திர கூடம்; சித்திர கூடத்தில் தங்கியிருந்த இராமனைக் கண்டு வணங்கி அயோத்தியின் அரசாட்சியை ஏற்க வேண்டும் என்று வேண்டினான். பரதன், இராமன் அதற்கு உடன்படாததால் அவனது பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து அரசாளுவேன் என்று அவற்றை இராமனிடம் இருந்து பெற்றுக்கொண்டு அயோத்திக்குச் சென்றான் பரதன்.

தண்டகாரண்யம்:

இந்நிகழ்ச்சிக்குப் பின் தான்தங்கியுள்ள சித்திர கூடத்திற்கு அயோத்தியிலிருந்து பலரும் வருவார்கள் என்பதால் இராமன் தண்ட காரண்யத்திற்குச் செல்ல விரும்பினான். அவ்வாறு தண்ட காரண்யம் நோக்கிப் போகும் வழியில் அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது அத்திரி முனிவரின் மனைவி அநசுயை சீதைக்குப் பட்டாடையும், அணிகலன்களும் அணிவித்து அழகு செய்தாள். அத்திரி முனிவரிடம் தண்டகாரண்யத்திற்குச் செல்லும் வழி முறைகளைக் கேட்டறிந்த இராமன், சீதையுடனும், இலட்சுமணனுடனும் தண்டகாரண்யம் சென்றடைந்தான்.

விராதன் சீதையைக் கவர்தல்:

இராமாயணத்தில் சீதையைக் கவர்ந்து சென்றவர்கள் இருவர். முதலில் கவர்ந்தவன் விராதன். இரண்டாவதாகக் கவர்ந்தவன் இலங்கை வேந்தன் இராவணன், விராதன் என்று சொல் அளவு கடந்த பாவங்களைச் செய்தவன் என்று பொருள் தரும் என்கிறார் வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார். விராதன் சீதையைக் கவர்ந்த பொழுது சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை. பொற்கொடி போன்ற சீதை துறவுக் கோலம் பூண்ட இராம, இலட்சுமணருடன் செல்வதைப் பார்த்த அரக்கன் விராதன் இலட்சுமணர்க்கு இடையில் சென்ற சீதையை ஒரு நொடிப்பொழுதில் கையில் எடுத்துக் கொண்டு வானில் பறந்தான். இந்நிகழ்ச்சி இராம. இலட்சுமணர் கண்களுக்கு எதிரில் நடந்ததால் சிறிது நேரத்திலேயே அவனைக் கொன்று சீதையை மீட்டனர்.

விராதன்:

பிரம்மனிடம் வரங்கள் பெற்ற விராதன் வலிமை வாய்ந்தவன். அதனால் அவனை ஆயுதங்களால் வெல்ல முடியாது. ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் யானை பலம் கொண்டவன் யானை சிங்கம், யாளி முதலிய விலங்குகளைக் கயிற்றில் கட்டி தன்கையிலுள்ள சூலாயுதத்தில் கட்டி வைத்திருக்கும் கொடியவன் சீதையை விராதன் கவர்ந்து சென்றபோது நீ யார்? என்று இராம இலட்சுமணர் கேட்டனர். அப்போது விராதன். உங்களாலும், உங்கள் ஆயுதங்களாலும் என்னை வெல்ல முடியாது. ஆதலால் இவளை என்னிடம் விட்டு விட்டு சென்று விடுங்கள் என்றான்.

விராதனுடன் போர்:

இதனைக் கேட்ட இராமன் நாணொலி எழுப்பி விராதனைப் போருக்கு அழைத்தான். அதனால் தன் கையில் இருந்த சீதையைக் கீழே விட்டுவிட்டு இராம. இலட்சுமணருடன் போரிட்டான். இராம, இலட்சுமணரும் விராதனுடன் பலவாரு போரிட்டனர். இறுதியாக மலை போன்ற தோள்களுடன் சேர்ந்துள்ள அவன் கைகளை வெட்ட விராதன் கைமேல் ஏறினர். அப்போது அவ்விருவரையும் சுமந்து கொண்டு விராதன் வானில் பறந்தான்.

இதனைக் கண்டு அஞ்சி நடுங்கிய சீதை, விராதனே; தரும வழியில் நிற்கும் இராம, இலட்சுமணரை விட்டு விட்டு என்னை எடுத்துச் செல் என்றாள். இதனைக் கேட்ட இலட்சுமணன் இராமனுக்கு சீதை விராதனிடம் சொன்னவற்றைக் கூறினான். அதனால் சினம் கொண்ட இராமன் தன் கால்களால் உதைத்து விராதனைக் கீழே தள்ளினான். பின்பு விராதன் தோள்களை வெட்டினர். அப்பொழுதும் விராதன் இராம, இலட்சுமணரைப் பின்தொடர்ந்து சென்றான்.

விராதனின் முக்தி:

விராதனை உயிருடன் மண்ணில் புதைத்துக் கொல்ல முற்பட்ட இராமன் அதற்கான குழியை வெட்டும் படி இலட்சுமணனிடம் கூறினான். அக்குழியில் விராதனைப் புதைத்தனர். பின் விண்ணில் தோன்றிய விராதன் இராமனைப் பலவாறு துதித்தான். அப்போது மூல முதல்வனான திருமால் அடியவர்களுக்கு அருளிய.

1. கஜேந்திரனுக்கருளிய மோட்சம்.

2. வராக அவதாரத்தில் திருமகளைக் காத்தது.

3. பிரளயத்தில் உயிர்களை விழுங்கியது.

4. வாமன அவதாரத்தில் மாபலி சக்ரவர்த்திக்கு முக்தியளித்தது.

5. சிவனது பிரம அத்தியை நீக்கியது முதலிய செய்திகளைக் கூறி வணங்கினான்.

விராதனின் முற்பிறப்பு:

இராமன் விராதனைப் பார்த்து நீ யார்? உன் வரலாற்றைக் கூறுக என்றான். அதனைக் கேட்ட விராதன் தன் வரலாற்றைப் பின்வருமாறு கூறினான். சென்ற பிறவியில் நான் ஒரு கந்தர்வன். என் பெயர் தும்புருதத்தன் என் பெற்றோர் பெயர் ஜயன், சதக்தாதை என்றான். தேவலோகத்தில் அரம்பையுடன் ஊடலும். கூடலுமாக வாழ்ந்தேன். அப்போது குபேரனை அலட்சியம் செய்ததால் குபேரன் என்னை அரக்கனாகும்படி சபித்தான் என்றான்.

விராதனின் சாபவிமோசனம்:

குபேரன் எனக்கிட்ட சாபத்தைக் கேட்டு வருந்திய நான் சாபவிமோசனத்துக்கான வழியைக் கூறும்படி குபேரனிடம் வேண்டினேன். அப்போது குபேரன், நீ, பூவுலகில் கிளிஞ்சன் என்னும் அரக்கனை தந்தையாகப் பெறுவாய். அவன் உனக்கு விராதன் என்று பெயரிடுவான். இப்பிறவியில் இராமன் பாதங்கள் உன் உடலில் படும்போது உன் சாபம் நீங்கும் என்றான். அவ்வாறே நான் இப்போது சாபநீக்கம் பெற்றேன் என்று மனமகிழ்வுடன் இராமனைத் தொழுது வணங்கி வானுலகடைந்தான். பின்பு இராமன். சீதை, இலட்சுமணன் ஆகிய மூவரும் சரபங்க முனிவரின் ஆசிரமம் அடைந்தனர்.

இரண்டு சிறையெடுப்புகள்:

ஆரண்ய காண்டத்தின் ஏழாவது படலம் ; மாரீசன் வதை படலமாகும் தங்கை சூர்ப்பணகையின் தூண்டுதலால் சீதையைக் கவர்ந்து செல்ல பஞ்சவடிக்கு மாரீசன் துணையுடன் வந்த இராவணன் சூழ்ச்சி செய்து சீதையை இராம, இலட்சுமணர்களை விட்டுப் பிரிந்த பின்பே பர்ணசாலையோடு கவர்ந்து சென்றான். அசோகவனத்தில் சீதையை சிறை வைத்தான். இராம, இலட்சுமணர்கள் பதினெட்டு மாதங்கள் வானர சேனையின் உதவியுடன் போரிட்டு, நான்கு ஆண்டுகள் அசோகவனத்தில் சிறையெடுத்த சீதையை மீட்டனர்.

விராதன், இராவணன் ஆகிய இரண்டு அரக்கர்களாலும் கவர்ந்து செல்லப்பட்டவள் சீதை. இவற்றில் விராதன் சிறையெடுப்பில் இருந்து உடனடியாக மீட்கப்பட்டவள் சீதை என்ற செய்தி ஆரண்ய காண்டத்தில் முதல் படலமான விராதன் வதை படலத்தில் ஒரு சில பாடல்களிலேயே தெளிவுப்படுத்தப்படுகிறது. இராவணனால் சிறைப்பட்ட சீதை கம்பராமாயணத்தின் இறுதி காண்டமான, யுத்தகாண்டத்தில் சிறை மீட்கப்பட்டாள். இராவணன், சீதையைக் கவர்ந்து சென்று சிறை வைத்தது மட்டுமே அனைவரும் அறிந்த காப்பிய நிகழ்வாகிறது. விராதன் சீதையைக் கவர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை உடைய கம்பராமாயண காப்பியத்தில் மிக மிக மிகச் சிறிய துளியாகக் கலந்து விட்டது. பெண்ணாசை அழிவையே தரும் என்பதற்கு இவ்விருவரது வாழ்க்கை வரலாறே சான்று.

இராமன், சீதை, இலட்சுமணன் ஆகிய மூவரும் பத்தாண்டுகள் முனிவர்களின் ஆசிரமத்தில் வாழ்ந்தனர். பத்தாம் ஆண்டிற்குப் பிறகுதான் இராவணன் சீதையை சிறையெடுத்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar