Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திருவேங்கடவன் தாள் சரண் புகுவோம்!
 
பக்தி கதைகள்
திருவேங்கடவன் தாள் சரண் புகுவோம்!

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக பக்தர்களைக் காத்தருளும் பாசமிக்கவனாக கேட்ட வரம் தந்தருளும் கருணைமிக்கவனாக பக்தர்களால் போற்றித் துதிக்கப்படும் திருவேங்கடமுடையான் அருள் வடிவமாகவும் அலங்கார ரூபனாகவும் எழுந்தருளி காட்சியளிக்கும் ஒப்புயர்வற்ற தலம் திருப்பதி என்னும் திருமலை ஆகும். இத்திருமலை “சுவயம் வக்த க்ஷேத்திரம்” என்றும் அழைக்கப்படும். பரந்தாமனே விரும்பி எழுந்தருளிய தலமாகும். இத்திருமலையில் சேஷாத்ரி, அஞ்சானத்ரி, நாராயணாத்ரி, வ்ருஷபாத்ரி, கருடாத்திரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி என்று ஏழு மலைகள் உண்டு.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்” எனத் தொல்காப்பியமும், “வடமாலவன் குன்றம்” என இளங்கோவடிகளும், “மேற்கு பவள மலை வேங்கடம் நேர் வடக்காம்” என கம்பநாட்டாழ்வாரும் போற்றிய தலமாகும். திருவேங்கடத் திருமாலைத் திருக்கோயிலில் கர்ப்பகிருகத்தில் ஸ்ரீமந்நாராயணன் கமலபீடத்தில் திருமென் மலர்ப்பாதம் இரண்டும் ஊன்றி, லக்ஷ்மி அலர்மேல்மங்கைத் தாயார் சமேதராய் எழுந்தருளி அருட்காட்சி தருகிறார்.

ஆழ்வார்களால் ஆராதிக்கப்பட்ட அனந்தனை, அரசகுலத்தவர் அனைவருமே தங்களது இஷ்ட தெய்வமாகக் கொண்டு பொன்னும் மணியும், வைர, வைடூரியமும் வாரி வாரி வழங்கியுள்ளதைக் கல்வெட்டுகள் மூலம் காணலாம். ஸ்ரீமந்நாராயணன் நித்தியவாசம் புரியும் திருமலையில் 365 நாளும் திருவிழா வைபவம்தான்! இருந்தாலும் புரட்டாசி ஐப்பசி மாதங்களில் உத்ஸவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதலாழ்வார்கள் மூவரும் ஐப்பசி மாதத்தில் அவதரித்தனர். விஷ்வக்சேனர் தோன்றியதும் இம்மாதமே.

இப்பேர்பட்ட முக்கியமான புரட்டாசி ஐப்பசி மாதங்கள் வேங்கடநாதனின் திருவிழா காணும் திவ்யத் திருமாதங்களாகும். எனவே இந்த மாதங்களில் பிரம்மோற்சவ பெருவிழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. திருமலையின் சிறப்புகளை ஆழ்வார்கள் பலவாறு பாடிப் போற்றியுள்ளனர். குலசேகராழ்வார் சுவாமியின் சன்னிதானத்தில் படியாகக் கிடக்க வேண்டும் என வேண்டுகிறார்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே

ஒவ்வொரு மனிதரும் உலக வாழ்வில் சிக்குண்டு, நோய்நொடியால் தாக்குண்டு, இறுதியில் இறைவனைப் பற்றுகின்றனர். அப்பொழுதும் அடியவரை ஒதுக்காமல் அனைத்தருளும் பரமனின் பெருமையை திருமங்கை ஆழ்வார்.

தாயே தந்தை என்றும் தாரமே
கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக்
காண்பது ஓர் ஆசையினால்
வேய்ஏய் பூம்பொழில் சூழ்விரை ஆர்
திருவேங்கடவா!
நாயேன் வந்தடைந்தேன்; நல்கி ஆள்
என்னைக் கொண்டருளே    (1028)

எனப் பாடுகிறார்.

தொலைவிலும் அருகிலும் இருப்பவனும், என் நெஞ்சத்தில் குடிபுகுந்த மாயவனும், மூங்கில்கள், முத்துக்களை உதிர்க்கும் திருவேங்கடமாகிய மலையில் வாழும் கண்ணன் கழலினைத் தவிர வேறொன்றையும் அறியேன் என்பதை.

சேயன், அணியன், என் சிந்தையுள் நின்ற
மாயன், மணிவாள், ஒளிவெண் தரளங்கள்
வேய்விண்டு உதிர்வேங்கட மாமலை மேய
ஆயன்அடி அல்லது மற்று அறியேனே     (1045)

இவ்வாறு கட்டுகிறார்.

உலகத்தை அளந்தவனுடைய இரண்டு திருவடித் தாமரைகளை எந்த நாளில் காண்போம் என்று விரும்பித் தேவர்கள் திருவேங்கடமலையில் அவனைக் கூட்டம் கூட்டமாகக் கண்டு போற்ற வருகிறார்கள். அவர்கள் தங்கள் உள்ளம் உரை, செயல் ஆகிய மூன்று வகைகளிலும், மெய், நாக்கு, மனம் ஆகிய மூன்றால் எம்பெருமானைத் திருமலையில் எப்பொழுதும் வழிபடுகிறார்கள். அவர்கள் வழிபாட்டிற்கு உரியவனாய்த் திருமலையில் இருப்பவனே! உனக்கு ஆட்பட்ட அடியேன் உண்மையாகவே எந்நாளில் உன் திருவடி வாரத்தை அடைவேன் என நம்மாழ்வார் வேண்டுவதை.

எந்நாளே நாம்மண் அளந்த இணைத்
தாமரைகள் காண்பதற் கென்று
எந்நாளும் நின்றுஇமை யோர்கள்
ஏத்தி, இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு
செய்யும் திருவேங்கடத் தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்
அடிக்கண் அடியேன் மேவுவதே        (3331)

இந்தப்பாடல் உணர்த்துகிறது.

திருவேங்கடமுடையான் திருப்பாதங்கீழ் அடைக்கலம் வேண்டும். முகத்தான் நம்மாழ்வார் பாடும் இன்னொரு பாசுரத்தில்

அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகர் இல் புகழாய்! உலகம்மூன்று
உடையாய்! என்னை ஆள்வானே!
நிகர் இல் அமரர், முனிக் கணங்கள்
விரும்பும் திருவேங்கடத் தானே!
புகழ் ஒன்று இல்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.        (3335)

கணநேரமும் பிரிந்திருக்கேன் என்று கூறும் திருப்பாற்கடலில் பிறந்த மலர்மகள் வாழும் மார்பையுடையவனே! ஒப்பற்ற புகழ் உடையவனே! மூன்று உலகங்களையும் உண்டாக்கிக் காப்பாற்றி வருபவனே! என்னை ஆள்கின்றவனே! ஈடற்ற வானவர் முனிவர் ஆசைப்பட்டு வழிபடும் திருவேங்கட மலையில் உள்ளவனே! உன்னையன்றி வேறு புகலிடமற்ற நான் உன் திருவடிக் கீழ் பொருந்திச் சரணம் புகுகிறேன். நீயே அடைக்கலம் தந்து அருள் காட்ட வேண்டும் என நம்மாழ்வார் வேண்டுவது நமக்கும் பொருந்தும்.

எனவே, இப்பெருநாளில் இறைவனின் திரு நாமத்தை கோவிந்தா! கோவிந்தா! என முழங்கி திருமலையெங்கும் எதிரொலிக்க நாம் நாளும் வழிபட்டால் நம்மைத் துன்பம் அணுகாது; நோய் நெருங்காது, வளமே தந்து நலமே தரும் நாராயணன் திருப்பாதம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar