Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பாவத்தை நீக்குபவர்!
 
பக்தி கதைகள்
பாவத்தை நீக்குபவர்!

இறைவனைக் குறிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் உயர்ந்த பொருள் உண்டு.  விநாயகன் என்றால், ஒப்புமை இல்லாத தலைவன் என்று பொருள். முருகன் என்றால் அழகு, இளமை என்றெல்லாம் பொருள் உண்டு. அதேபோல் பைரவர் என்ற சொல் படைத்தல், காத்தல், அழித்தல் (ஒடுக்குதல்) என்கிற முத்தொழில்களையும் குறிக்கும். பை காத்தலைக் குறிக்கும். ர பயத்தை அழித்தலைக் குறிக்கும். வ படைத்தலைக் குறிக்கும். ஆக, பைரவர் என்கிற வார்த்தை முத்தொழில்களையும் (படைத்தல், காத்தல், அழித்தல்) உணர்த்துகிறது. பைரவர் என்ற சொல்லுக்கு வழிபடும் பக்தர்களைக் காப்பவர் என்று பொருள். நம்மிடம் உள்ள தேவையற்ற பயத்தை நீக்குபவர். தன்னை நம்பி சரண் புகும் அடியார்களின் பாவத்தை நீக்குபவர். பழங்காலத்தில் ராஜாக்கள் தங்களது பொக்கிஷ அறையில் பைரவ மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து, விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டனர். காரணம், இந்த வழிபாட்டால் பொக்கிஷ அறையில் பொன்னும் பொருளும் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த பைரவரை ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்பார்கள். பொன்னிற தேகத்துடன் திகழும் இவர், மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து, மாணிக்கம் போன்ற அணிகளால் இழைக்கப்பட்ட தங்க அட்சயப் பாத்திரம் ஏந்தியிருப்பார்.

சிற்ப நுõல்களும், சிவாகமங்களும் பைரவ மூர்த்தத்தை விவரிக்கும்போது, அறுபத்து நான்கு பைரவர்களை அறிமுகப்படுத்துகின்றன. இன்னும் சில சிற்ப நுõல்களில் நுõற்றியெட்டு வடிவங்களாகவும் இவை குறிக்கப்படுகின்றன. சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் பைரவரும் ஒருவர். ஏனைய நால்வர், ஸ்ரீகணபதி, ஸ்ரீமுருகன், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீஐயனார். வலிமை மிக்க ஞானமூர்த்தியாக பைரவரை உற்பத்தி செய்து உலகைக் காக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளார் சிவபெருமான். எனவே, பூலோக உயிர்களுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் பாதுகாவலாக இருப்பதுடன் எட்டுத் திசைகளிலும் அஷ்ட பைரவராக நின்று சகலத்தையும் பாதுகாத்து வருகிறார்.அசுரர்களால் உலகம் எப்போதெல்லாம் துன்பம் அடைகிறதோ, அப்போதெல்லாம் தன் அம்சமாக பைரவரைத் தோற்றுவித்து, அசுரர்களை வென்று வர அனுப்புவார் சிவபெருமான். இப்படிப் புறப்பட்டுப் போன பைரவரே சகல உயிர்களுக்கும் அமைதி அளித்தார் என்று பைரவர் தோற்றம் பற்றிப் புராணங்கள் சொல்கின்றன.

பைரவருக்கு க்ஷேத்திரபாலக மூர்த்தி என்கிற திருநாமம் உண்டு. க்ஷேத்திரம் என்றால் பூமி. பாலகர் என்றால் காப்பவர். க்ஷேத்திரமாகிய உலகைக் காப்பவர் என்பதால் அவருக்கு இந்தத் திருநாமம் (இதே திருநாமம் ஈசனையும் குறிப்பதுண்டு). பைரவர் நீல நிற மேனியர். சிலம்புகள் ஒலிக்கும் திருவடிகள் உடையவர். பாம்புகள் பொருந்திய திருமேனி. மனிதத் தலைகள் மாலைகளாய்த் தவழும் திருமார்பு. சூலம், மழு, பாசம், உடுக்கை ஏந்திய திருக்கரங்கள். சிவபெருமான் போலவே முக்கண்கள், இரு கோரைப் பற்கள். செஞ்சடை மேனியர். உதட்டில் கோபச் சிரிப்பு, முகத்தில் உக்கிர வடிவம். தேகத்தின் மீது உள்ள பற்றை இவர் நீக்குவதால் நிர்வாணமாகக் காட்சி தருவார். காவல் தெய்வம் என்பதால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். எப்படி ஒரு நாயானது, தான் சார்ந்திருக்கும் வீட்டைக் கர்ம சிரத்தையுடன் காவல் காக்கிறதோ, அதுபோல் இந்த உலகுக்கே காவலாக விளங்கும் பைரவதேவர், நம்மை எல்லாம் காத்து வருகிறார். தீய சக்திகளின் பிடியில் இருப்பவர்களும், பில்லி, சூன்யம் போன்றவற்றின் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களும், காத்து, கருப்பு தாக்கியவர்களும் பைரவரை உரிய முறையில் வழிபட்டால், நிச்சயம் நலம் பெறலாம். தேய்பிறை, அஷ்டமி தினங்களில் இவருக்கு எல்லா ஆலயங்களிலும் பிரமாதமான வழிபாடு நடந்து வருகிறது.

நவக்கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும் தோஷங்களில் இருந்து மீள்வதற்கு பைரவரை பூஜை செய்யலாம். எந்தெந்த கிரகம் பலவீனமாக உள்ளதோ, அந்தக் கிரகம் பலமடைவதற்கு பைரவரை வழிபட்டு நலம் பெறலாம். சனி பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். பைரவரும் ஈசனின் அம்சம்தானே! ஒரு முறை சனி பகவான், சூரியனின் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டார். இதில் மிகவும் மனம் நொந்த அவர், தன் குறையை யாரிடம் சொல்வது என்று தவித்தார். இந்நிலையில் தன் தாயான சாயாதேவியைச் சந்தித்து, தனக்கு யமதர்மனால் ஏற்பட்ட கவுரவக் குறைவைச் சொல்லிப் புலம்பினார். தன் மகனுக்கு ஏற்பட்ட நிலையைக் கேட்டு வருந்திய சாயாதேவி, மகனே... எல்லோரையும் காக்கும் சக்தி கொண்டவர் பைரவர். அவரை வழிபட்டு உனக்கு ஏற்பட்ட அவல நிலையைப் போக்கிக் கொள், என்று அறிவுறுத்தினாள். அதன்பின் பைரவரை உரிய முறையில் உபாசனை செய்து அனுக்ரஹம் பெற்றார். பைரவரின் அருளால்தான் சனி பகவானுக்கு நவக்கிரகங்களில் ஒன்றாகும் அந்தஸ்து கிடைத்ததாகவும் சில புராண நுõல்கள் சொல்கின்றன. பைரவரின் எட்டு திருவடிவங்களும் சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் நிறைந்து     அருள்பாலிக்கின்றன.

பைரவருக்கு உண்டான ஹோமங்களின்போது, எட்டு விதமான (அஷ்ட) அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. சிவாச்சார்யர்கள் எட்டுப் பேர் சூழ்ந்திருக்க, எட்டு விதமான மலர்கள் மற்றும் எட்டு விதமான பத்ரங்கள் (இலைகள்) கொண்டு அர்ச்சிப்பார்கள். அதேபோல் எட்டு விதமான நைவேத்தியங்கள்: சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பால் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், எள் சாதம், மிளகு, சீரகம் சேர்த்த சம்பா சாதம் ஆகியவை. அவருக்கு எட்டு விதமான பட்சணங்கள் படைக்க வேண்டும். அவை: சூயம் (மோதகத்துக்குள் வைப்பது போல் பூரணத்தை உள் வைத்து செய்யும் இனிப்பு பண்டம்), அப்பம், வெள்ளப்பம், தேன்வடை, பாயாசம், தேன்குழல், எள் உருண்டை, அதிரசம் ஆகியவை. எட்டு விதமான சமித்துகளைக் கொண்டு ஹோமம் செய்து, எட்டு விதமான ஆரத்திகளைக் காட்ட வேண்டும். சிவாலயங்களில் பிரதிஷ்டை ஆகி இருக்கும் பைரவ மூர்த்தியை தேய்பிறை அஷ்டமி தினங்களில் பால், தேன், பன்னீர், பழரசம் போன்றவற்றால் அபிஷேகம் செய்தால் சிறப்பு. அதுபோல் பைரவருக்கு சந்தனக் காப்பினால் அலங்காரம் செய்தால் மிகவும் மனம் குளிர்ந்து, நம்மை ஆசிர்வதிப்பார். காவல் தெய்வமாக விளங்கி வரும் பைரவரைப் போற்றி, பலன்கள் பல பெறுவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar