Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பை சுவைப்போம்!
 
பக்தி கதைகள்
அன்பை சுவைப்போம்!

இளைஞன் ஒருவன், நீண்டநெடிய தனது பாலைவன பயணத்தின் வழியில் ஒரு சுனையைக் கண்டான். கடும் தாகத்தில் இருந்தவன், ஆவலுடன் ஓடிச்சென்று சுனையின் நீரைப் பருகினான். சுனை நீர் அமிர்தமாக இருந்தது. அவனுக்கு சிறப்பான அந்த நீரை தன் நாட்டு மன்னனுக்கும் கொடுக்க விரும்பியவன், தனது தோல் குடுவையிலும் கொஞ்சம் சுனை நீரை சேகரித்துக் கொண்டான். நீண்ட பயணம் முடிந்து ஊருக்குத் திரும்பியவன், நேராக அரண்மனைக்குச் சென்று, சுனை நீரின் பெருமையைக் கூறி, மன்னனிடம் குடுவையைக் கொடுத்தான்.

குடுவையை வாங்கிக்கொண்ட மன்னன், சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான். அருகிலிருந்த மகாராணி, தனக்கும் அந்த தண்ணீரைத் தரும்படி ஆர்வத்துடன் கேட்டாள். ஆனால், அவள் வேண்டுதலை கவனிக்காதவனாக நீரைக் குடித்து முடித்த மன்னன், பிரமாதம்... உண்மையில் இதுபோல ஒரு சுவையான நீரை நான் இதுவரை அருந்தியதேயில்லை. நீ நீடுழி வாழ்க! என்று இளைஞனை வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்பிவைத்தான். அவன் சென்ற பிறகு, மன்னவனிடம் கோபித்துக் கொண்டாள் மகாராணி. அவளிடம், இல்லை ராணி! நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. வேண்டுமானால் நீயும் பருகிப் பார்! என்று குடுவையைக் கொடுத்தான் மன்னன்.

ஆர்வத்துடன் வாங்கி ஒரு வாய் குடித்தவள், ச்சீ... ச்சீ... இதென்ன இப்படி துர்நாற்றம் அடிக்கிறது என்றபடி தண்ணீரை துப்பிவிட்டாள். இப்போது மன்னன் சொன்னான். தேவி! நீ நீரை சுவைத்தாய். ஆனால், நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பையே சுவைத்தேன். பாலைவனத்தில் தாகத்துடன் திரிந்தவனுக்கு, இந்த நீர் தேவாமிர்தமாக இருந்திருக்கிறது. அதை, எனக்கும் கொடுக்கவேண்டும் என்று கருதி எடுத்து வந்த அவனது அன்பு இணையற்றது. அவன் இருக்கும்போதே உனக்கும் இந்த நீரைத் தந்திருந்தால், அவன் முன்பாகவே நீ முகம் சுழித்திருப்பாய். அவன் மனம் வருந்தியிருப்பான். ஆகவே தரவில்லை. அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை என்பதைப் புரிந்துகொள் என்றான். நம்மிலும் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர, அதற்குள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது தவறல்லவா?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar