Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வரமா? சாபமா?
 
பக்தி கதைகள்
வரமா? சாபமா?

ராமபிரான் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. அன்று ஒருநாள் அவரது அவைக்கு நாய் ஒன்று அடிபட்டு ரத்தம் வழிய வழிய வந்தது. இதைக் கண்ட ராமபிரான்! யாரங்கே! உடனே இந்த நாய்க்கு உரிய சிகிச்சை அளியுங்கள்! என்று சேவகர்களுக்கு கட்டளையிட்டார்!  உடனே அந்த நாய் ராமா! நான் சிகிச்சை தேடி இங்கே வரவில்லை... நீதி வேண்டி தங்களை தேடி வந்திருக்கிறேன்.! பிரபு என்றது.  அதன் பின் நாய் நடந்ததைச் சொன்னது? நாய் சொன்னதைக் கேட்டு அவையோர் திகைத்தனர். ராமர் அன்புடனும், பரிவுடனும் அதனிடம் விசாரித்தார். உடனே ராமர் உன் துயரம் எமக்கு புரிகிறது. இந்த நிலைமைக்குக் காரணம் ஆனாவர்கள் யார் என்பதை என்னிடம் சொல்.. அவர்களுக்கு தண்டனை வழங்கியதோடு மட்டுமின்றி உனக்கு உரிய நீதி வழங்குகிறேன். என்றார் ராமபிரான். ப்ரபோ! என்னை அடித்து இந்த நிலைக்கு ஆளாக்கியவன்,  இழிவான காரியத்தை செய்தவன் சர்வார்த்த சித்தன் எனும் அந்தணன் என்று கூறியது நாய்!

உடனே அந்த அந்தணனை அழைத்துவர ஆணையிட்டார், ராமர். அதன்படி சேவகர்களும் அவனை அழைத்து வந்து பிரபு முன் நிறுத்தினர். பிரபு தீர்ப்பை ஆரம்பித்தார்! அந்தணனே! இந்த நாய் சொல்வது உண்மையா? ஏன் இப்படி வாயில்லா பிராணியை இந்த அளவுக்கு அடித்தாய்? என்று ராமர் கேட்டார். உடனே அந்த அந்தணன் ராமசந்திரா இந்த நாய் சொல்வது உண்மைதான். நான் பிட்சைக்குச் செல்லும் வழியில் குரைத்துக்கொண்டும், தொல்லை தந்ததால் தான் ஒரு கட்டையால் அடித்தேன் தவறு தான் பிரபு என்னை மன்னியுங்கள்! என்றான் அந்தணன். நீ குற்றத்தை ஒப்புக் கொண்டாலும் செய்த தவறுக்கு தகுந்த தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்றார் ராமர். அந்தணனுக்கு என்ன தண்டனை தரலாம் என்று அவையினருடன் கலந்து ஆலோசித்தார் ராமபிரான். அவையோரே, ஆன்றோரே! புதியவர்களைக் கண்டால் குரைப்பதும் காவல் புரிவதும் நாயின் இயல்பு தானே அது தனது பணியை சரியாகச் செய்தது. ஆனால் இப்படி அடித்த அந்தணனுக்கு என்ன தண்டனை தரலாம் சொல்லுங்கள்? என்றார் ராமர்!

அப்போது அனைவரும் மவுனமாக இருந்தனர்! அந்த நிமிடத்தில் அடிபட்ட நாயே பேசத் தொடங்கியது. உடனே நாய் ப்ரபோ...! நான் குறுக்கிடுவதற்கு தாங்கள் என்னை மன்னியுங்கள் என்றது. இந்த அந்தணனுக்கு தண்டனையாக நான் கேட்கும் வரத்தை நீங்கள் அளியுங்கள். அதுவே போதும் என்று வேண்டியது. என்ன வரம் வேண்டும் கேள்! என்றார் ராமர் அதில் நியாயம் இருப்பின் உனக்காக நிறைவேற்றுகிறேன். நாய் தொடர்ந்து பேசியது. அரசே! இந்த அந்தணனுக்கு தண்டனை வாங்கி தருவது எனது நோக்கம் இல்லை என்றது நாய். இந்த அந்தணனை குறுநில மன்னனாக தாங்கள் அறிவிக்க வேண்டும். என விரும்புகிறேன். இதுவே எனது கோரிக்கை. நாய் கூறியதைக் கேட்டதும், அவையோரும் அந்தணனும் திகைத்தனர், ஆனால் ராமரோ கொஞ்சமும் மறுக்காமல் உடனே உன் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்று சொன்னார். யாரங்கே! நம் நாட்டின் சிறு தேசம் ஒன்றிற்கு இந்த அந்தணனை அரசனாக்குகிறேன். உடனே இவரை யானைமீது ஏற்றி அங்கே அழைத்துச் செல்லுங்கள் என்று ஆணையிட்டார். உடனே சேவகர்களும் பிரபு சொன்னவாறே செய்தனர்.

என்ன இது, குற்றம் செய்தவனுக்கு அரசபதவியா? இதை வழங்குவதுதான் நியாயமா? என்று அவையில் உள்ளோர் கூச்சலிட்டனர். நல்லோரே! இந்த அந்தணன் முன்கோபமும் மூர்க்க குணமும் உள்ளவன். அவனது குணம் ஆட்சியின்போதும் வெளிப்படும் அல்லவா! அதனால் அவன் மக்களின் சாபத்திற்கு ஆளாகி பல பாவங்கள் அவனை வந்துச் சேரும். மேலுலகில் கொடிய தண்டனை பெறுவான் அதற்காவே இந்த நாய் இப்படி ஒரு வரத்தைக் கேட்டது. ராமபிரான் சொல்ல, உணர்ந்தனர் அவையோர். அந்தணனுக்கு மேலும்மேலும் பாவங்கள் சேர்ந்திடச் செய்திட வரம் கேட்ட தவறுக்கு வருந்திய நாய் சிகிச்சையை மறுத்து காசிக்குச் சென்று உயிர் நீத்து சொர்க்கம் அடைந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar