Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » விஷ்ணு மாயை!
 
பக்தி கதைகள்
விஷ்ணு மாயை!

ஒரு சமயம் ஸ்வேதத்வீபத்தில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவைக் கண்டு வணங்கிய நாரத முனிவர், பகவானே! தங்களுடைய மாயை எப்படிப்பட்டது? அதன் வடிவத்தை எனக்குக் காட்டியருள வேண்டும் என்று கேட்டார். அதற்கு பகவான், என் மாயையை அறிவதால் உனக்கென்ன பயன்? என்றாலும் நீ என் உண்மையான பக்தன். அதனால் உனக்குக் காட்டுகிறேன் என்னுடன் வா என்று கூறி. ஸ்வேதத்வீபத்தை விட்டுப் புறப்பட்ட மகாவிஷ்ணு. தன் ரூபத்தை ஒரு வயோதிகராக மாற்றிக்கொண்டார். அவருக்கு யக்ஞசர்மா என்று பெயர். இருவரும் வான்வழியே புறப்பட்டு ஜம்பூத்வீபத்தை அடைந்து. அங்குள்ள கன்யா குப்ஜம் என்ற நாட்டிற்கு வந்தனர். வழியில் குளமொன்று எதிர்ப்பட, இதில் நாம் இருவரும் நீராட வேண்டும். முதலில் நான் நீராடிவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு நீ நீராடு என்று கூறிய வயோதிகரான மகாவிஷ்ணு குளத்திலிறங்கி நீராடினார். பின்னர் நாரதரை நீராடச் சொன்னார். குளத்திலிறங்கி நீராடிய நாரதர் கரையேறும்போது அழகிய இளம்பெண்ணாக மாறியிருந்தார். பழைய நினைவுகள் எதுவுமில்லை மகா விஷ்ணு அங்கிருந்து மறைந்துவிட்டார்.

அதே சமயத்தில் கன்னோஜி நாட்டு அரசன் தாளத்வஜன் என்பவன் தன் படைகளுடன் அவ்வழியே வந்தான். குளக்கரையில் அழகான பெண்ணொருத்தி தனியாக நின்றிருப்பதைப் பார்த்த அவன் பெண்ணே. நீ யார்? என்று கேட்க, நான் யாருமற்றவன் என்னைக் காப்பாற்ற ஒருவருமில்லை என்றாள். உடனே இளவரசன் அவளைத் தன் நாட்டுக்கு அழத்துச்சென்று. முறைப்படி திருமணம் செய்துகொண்டான். அவள் பட்டத்து ராணியானாள். பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு ராணி கர்ப்பவதியாகி ஒரு சுரைக்காயைப் பெற்றாள். சில நாட்கள் கழித்து அந்த சுரைக்காயிலிருந்து மிகச் சிறிய-ஆனால் பலசாலிகளான ஐம்பது ஆண் குழந்தைகள் வெளிவந்தனர். அவர்களை ஒரு பெரிய நெய் அண்டாவில் போட்டு மூடிவைத்தாள் ராணி. சிலகாலம் கழித்து அந்த ஐம்பது பேரும் பெரியவர்களாகி வெளியே வந்தனர். அவர்களுக்குத் திருமணமாகி ஏராளமான குழந்தைகள் பிறந்தனர். அவர்களும் பெரியவர்களாக வளர்ந்தனர். அவர்களுக்கும் திருமணமாகி, அநேக குழந்தைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்களாயினர் ராணியின் குடும்பம் கணக்கிட முடியாதபடி வளர்ந்திருந்தது. ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமையில்லை நாட்டையாள ஆசைப்பட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர். இறுதியில் அனைவருமே இறந்துபோயினர். தன் பிள்ளைகளும் பேரன்களும் இப்படி அடித்துக்கொண்டு இறந்து போனதைக் கண்ட ராணி மிகவும் துயருற்றாள். அரசன் தாளத்வஜனும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தான்.

அந்த சமயத்தில் பகவான் விஷ்ணு பழைய வயோதிகராக உருவம்கொண்டு அரண்மனைக்கு வந்தார். மன்னனையும் ராணியையும் பார்த்து. நடந்த சம்பவங்கள் யாவும் விஷ்ணு மாயை வீணாக நீங்கள் கவலைப் பட வேண்டாம். உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இந்த கதிதான் ஏற்படுகிறது. அவரவர் செய்த நல்வினை-தீவினைகளை அவரவர் அனுபவித்துதான் ஆக வேண்டும் வருவது நல்லதா கெட்டதா என யாராலும் அறியமுடியாது. மீண்டும் மீண்டும் பிறந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் மடிவதும் உலக நியதி. மகிழ்ச்சி ஏற்பட்டால் கூத்தடுகிறார்கள். துன்பம் வந்தால் புலம்புகிறார்கள். இதுதான் உலக வழக்கம் என்று கூறி ராணியின் கையைப் பிடித்தார். உடனே ராணி நாரதராகவும், வயோதிக பிராமணர் மகாவிஷ்ணுவாகவும் மாறிக் காட்சியளித்தனர். மகாவிஷ்ணு நாரதரைப் பார்த்து மாண்டவர்கள் உன்னுடைய பிள்ளைகள்-பேரன்கள்-கொள்ளுப் பேரன்களாகிறார்கள். அவர்களுக்கான கிரியைகளை நீ செய்யத்தான் வேண்டும் என்றார். அப்படியே நாரதரும் செய்தார். பகவான் விஷ்ணு நாரதரைப் பார்த்து, என் மாயையைப் பார்த்து விட்டீர் நான் மீண்டும் ஸ்வதே த்வீபம் செல்கிறேன் என்று கூறி மறைந்தார். நாரதரும் பகவானின் மாயையை எண்ணி வியந்தபடி வான்வழிச் தேச சஞ்சாரம் புறப்பட்டார். ஒருசமயம் தர்மபுத்திரர் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து, விஷ்ணுமாயை எப்படிப்பட்டது? என்று கேட்க, அதற்கு இந்தக் கதையைச் சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar