Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சுகமான பயணத்திற்கு யமதீபம்!
 
பக்தி கதைகள்
சுகமான பயணத்திற்கு யமதீபம்!

தர்மத்தின் தலைசிறந்த மூர்த்தி யமன் அதனால்தான் எமதர்மராஜன்  என்று அழைக்கிறோம். அவன் ஒரு  நியாயமான நீதிபதி. அவன் நீதிமன்றமும் நியாயமான நீதிமன்றம். எமனுடைய அந்த நியாயமான நீதிமன்றத்திலிருந்து தப்பு செய்வதன் எவனும் தப்பிக்க முடியாது. தவறுகள் செய்தவனுக்கு அங்கே அதற்கான தண்டனை நிச்சயமாக உண்டு எத்தனையோ தெய்வங்களை வழிபடக்கூடிய மக்கள் யாரும் எமனை தெய்வமென்று வணங்குவதில்லை. பூஜிப்பதில்லை. காரணம் எமன் என்பவன் உயிரை எடுத்துச் செல்லும் கொடியவன் என்று அவனைக் கண்டாலே எல்லோருக்கும் பயம்தான் வருகிறதே தவிர பக்தி வருவதில்லை.

மனிதன் மரணத்திற்குப் பிறகு எங்கு போகிறான் அவன் போகும் இடம்தான் என்ன என்பது அவனுக்கே தெரியாது? எதை எதை எல்லாமோ கண்டுபிடித்து பட்டம் பலவற்றைப் பெற்ற விஞ்ஞானிகளால் கூட இந்த இடத்தை கண்டு பிடித்து அமரப் போகும் இடம் இன்னதுதான் என்று இன்றுவரை அடித்துச் சொல்ல முடியவில்லை.

புராணத்திலும், வேத சாஸ்திரத்திலும் எமதர்மராஜனின் எமலோகத்தில் இருட்டு என்ற கொடிய பாதையில் தட்டுத் தடுமாறி சென்று அல்லல் படவேண்டும் என்று கூறுகிறது. அப்படி நாம் தட்டுத் தடுமாறி சென்று அல்லல் படாமல் பிரகாசமான வெளிச்சத்திலே. சுகமான பயணத்தை மேற்கொள்ள தீபவாளிப் பண்டிகைக்கு முதல் நாள் இரவு, அரை லிட்டர் நல்லெண்ணெய் பிடிக்கும் அளவிற்கு, ஒரு பெரிய மண் அகல் விளக்கில் பஞ்சுத் திரியிட்டு, அந்த விளக்கை ஏற்றி, நமது வீட்டின் கூரைப்பகுதி, அல்லது மொட்டை மாடியில் எவ்வளவு உயரத்தில் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் தெற்கு நோக்கி வைக்க வேண்டும். அப்படி வைத்து விட்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி ஊதுவத்தி காட்டி நைவேத்தியமாக புளியன் சாதமோ அல்லது தயிர் சாதமோ வைத்து, கற்பூரம் காட்டி, வழி பட வேண்டும். அப்போது இந்த மந்திரத்தைச் சொல்லி பூஜிக்க வேண்டும்

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாயா:
ம்ருத்யவே சாந்த காயச!
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச!
ஒலிதும் பராய தத்நாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம!
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி!!

அதாவது அனைத்தையும் அடக்கி ஆள்பவராகவும், தர்ம மூர்த்தியாகவும், தீவினையை அழிப்பவராகவும், விவஸ்வானுடைய புத்திரனாகவும். காலத்தின் வடிவமாகவும், அனைத்து ஜீவன்களுக்கும் நல்லதோர் முடிவை அளிப்பவராகவும், பலவித பிறப்பு, இறப்பு, இரகசியங்களைத் தன்னுள் கொண்டவராகவும், அனைவராலும் பூஜிக்கப்படுபவராகவும் விளங்கும் எமதர்ம மூர்த்திக்கு வந்தனம் உரித்தாகுக என்பது அர்த்தம்.

இந்த மந்திரம் சொல்லி பூஜிப்பதனால் நமக்கு மட்டும் பலன் கிடைப்பது இல்லை. நமது மூதாதையர்கள் மாளய பட்ச நாட்களில் நம்முடன் இருந்து விட்டு, மீண்டும் செல்லுவார்கள். அப்போது அவர்களுக்கும் இந்த விளக்கு பிரகாசமான வெளிச்சத்தைக் கொடுத்து அழைத்துச் செல்லும். சிரமமின்றி அவர்கள் இருட்டில் செல்லும்போது நம்மை ஆசிர்வதித்தபடியே செல்வார்கள். மூதாதையர் ஆசீர்வாதம் மிகச்சிறந்த ஆசீர்வாதமாகும். பல நன்மைகளை நமக்கு வாரி வழங்கும் அந்த ஆசீர்வாதத்தையும் நாம் பெற தீபவாளிக்கு முந்நாளில் இந்த விளக்கை யமதீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar