Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மான் உணர்த்திய மானுடம்
 
பக்தி கதைகள்
மான் உணர்த்திய மானுடம்

ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈயும் ஒரு நிலை. அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது. அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு. இதுவே தாம் மகவை ஈன்றெடுக்க சரியான இடம் என்று மான் அங்கு சென்றது. அப்போது கரு மேகங்கள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தனது இடப்பக்கம் பார்த்தது, அங்கே ஒரு வேடன் தன்னை நோக்கி அம்பை செலுத்த குறி பார்த்துக் கொண்டிருந்தான். வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி, மானை நோக்கி வந்து கொண்டிருந்தது. பாவம் கருவுற்ற மான் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்துவிட்டது. மேலும் காட்டுத் தீயும் எரிய ஆரம்பித்து விட்டது. என்ன நடக்கும்? மான் பிழைக்குமா? மகவை ஈனுமா? இல்லை காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா? அல்லது வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா? இல்லை, புலியின் பசிக்கு இரையாகுமா?

தீ ஒரு புறம், பொங்கும் காட்டாறு மறுபுறம், வேடனும், புலியும் மற்ற இரு புறங்களிலும் என.. ஆபத்து தம்மை நெருங்க, மானால் என்ன செய்ய முடியும்? தம்மை நெருங்கும் ஆபத்துக்களை இறைவனிடம் விட்டு விட்டு, மான் தனது மகவை ஈன்றெடுப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தியது. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் முழு கவனமும் இருக்க, மற்ற சூழல்கள் அதன் பார்வைக்குத் தெரியவில்லை. அப்போது நடந்த நிகழ்வுகள்... மின்னல் தாக்கியதால் வேடன் கண்களை இழந்தான். அவனால் எய்தப்பட்ட அம்பு புலியைத் தாக்கி அது இறக்கிறது. தீவிர மழை, காட்டுத் தீயை அழிக்கிறது. இந்தச் சூழலில், அந்த மான் அழகான தமது குட்டியை ஈன்றெடுக்கிறது. நம் வாழ்விலும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கின்றன. இனியும் வரும் அச்சூழலில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும். சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி, அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும். நான்கு புறமும் ஆபத்து அச்சுறுத்த, அந்த மானின் சிந்தனை முழுதும், தமது மகவைப் பெற்றெடுப்பதிலேயே இருந்தது. மற்ற எதுவும் அதன் கைவசம் இல்லை. தம்மைச் சுற்றியுள்ள ஆபத்துக்களில் அதன் கவனம் இருந்திருந்தால் மானும் அதன் குட்டியும் மடிந்து இருக்கும்.

ஆக, எதில் கவனமும் நம்பிக்கையும் முயற்சியும் இருக்க வேண்டும்? வாழ்வில் ஏற்படும் கடினமான சந்தர்ப்பப்புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் மட்டும் செலுத்தி, மற்றதை இறைவன் வசம் விட்டு விடுங்கள். அவர் எப்போதும், எதிலும் நம்மை வருந்தச் செய்யமாட்டார். கடவுள் தூங்குவதும் இல்லை. துயரப்படுத்து பவரும் இல்லை. உன் செயலில் நீ கவனம் செலுத்து, மற்றவை நடந்தே தீரும். அந்த மான் நமக்குக் கற்றுத் தந்த மானுடவியல் அதுதான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar