Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திருதராஷ்டிரனுக்கு கிருஷ்ணர் சொன்ன கதை!
 
பக்தி கதைகள்
திருதராஷ்டிரனுக்கு கிருஷ்ணர் சொன்ன கதை!

குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார். நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது. அதன்படி, அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும் கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார். திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார். வசிஷ்டரின் சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார். ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார். அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய். அத்தகைய நீதி பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், வசிஷ்டர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய். அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். நீ சொன்னபடி, ஒருமுறை பார்த்ததுமே வசிஷ்டர் புலால் உணவெனப் புரிந்துகொண்டு விட்டார். ஆனால் தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய். தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar