Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தானத்திற்கு எப்போது தகுதி அதிகம்?
 
பக்தி கதைகள்
தானத்திற்கு எப்போது தகுதி அதிகம்?

நீ எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களுக்குத் தானம் செய்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு அல்லது அதைவிட அதிகமாகவே கடவுள் உனக்குத் திருப்பிக் கொடுப்பார். என்று ஒரு மளிகை வியாபாரியிடம் யாரோ சொன்னார்கள். அந்த வியாபாரி இதைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பினார். அவரது கடைக்குப் பக்கத்தில் ஓர் ஆசிரமம். அங்கிருந்து ஒரு வேலைக்காரர் தினமும் பொருட்கள் வாங்க அவரது கடைக்கு வருவது வழக்கம். அந்த வியாபாரி வேலைக்காரருக்குப் பல பொருட்களைத் தானமாகக் கொடுக்க ஆரம்பித்தார். அன்று முதல் அந்த வியாபாரியின் வருமானம் பல மடங்கு பெருக ஆரம்பித்தது. அவருடைய கடையில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. வியாபாரிக்கு ஒரே மகிழ்ச்சி. இப்படிப் பல வருடங்கள் ஓடின. அவர் ஒரு லட்சாதிபதி ஆகிவிட்டார். ஆனால் இன்னும் பணம் சேர்க்க ஆசை. ஒரு நாள் அவர் மனதில் இந்த எண்ணம் வந்தது; ஆசிரமத்தில் வேலை செய்யும் சாதாரண வேலைக்காரனுக்குக் கொடுப்பதாலேயே இவ்வளவு அதிக லாபம் வருமானால் அந்த ஆசிரமத்தையே நடத்தும் சுவாமிகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தால் நமக்கு இன்னும் பல மடங்கு அதிருஷ்டம் வராதா...? உடனேயே  அவர் அதைச் செயல்படுத்தினார்.

அவர் அளிக்கும் பொருள்களைப் பெற்றுக் கொண்டு சுவாமிகளும் வியாபாரிக்கு நல்லாசி வழங்க ஆரம்பித்தார். ஆனால் பாவம், அவருக்கு இதுவரை அடித்துக் கொண்டிருந்த அதிருஷ்டக் காற்று வேறு பக்கமாக வீச ஆரம்பித்தது. அந்தோ, இந்தப் புதிய திட்டம் அமலாக்கப்பட்ட தினத்திலிருந்து வியாபாரியின் தொழில் நலிவுற ஆரம்பித்தது. அவருக்கு லட்சக்கணக்கில் பணம் நஷ்டமடையச் தொடங்கியது. இதன் காரணத்தை அவர் அந்தச் சுவாமிகளிடமே சென்று, நான் உங்களுக்குத் தானம் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து எனது வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்படக் காரணம் என்ன? என்று கேட்டார். சுவாமிகள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்: நீ என் வேலைக்காரனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, யாருக்குக் கொடுக்கிறோம் என்று சிறிதும் சிந்திக்காமல் செயல் ஆற்றினாய். அதனால் கடவுளும் தான் யாருக்கு அருளை அள்ளி வழங்குகிறோம் என்று கவலைப்படவில்லை. இப்போதோ நீ உனது தானத்தைப் பெறுவதற்கு யார் அதிகத் தகுதி உடையவர் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டாய். ஒரு வேளை கடவுளும் இப்போது தமது அருளைப் பெறுவதற்கு யாரிடம் தகுதி அதிகம் என்று யோசித்துக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன்.

இந்தப் பதில் வியாபாரியைச் சிந்திக்க வைத்தது. இறைவனின் நியதிகள் மனிதனின் குறுகிய மனத்தின் எல்லைகளைக் கடந்தது என்பதை அவர் நன்கு புரிந்து கொண்டார். கொடுக்கும் கடவுள் கூரையைப் பிய்த்துக் கொடுப்பார். கூரையைப் பழுதுபார்க்க உங்களிடம் காசில்லையென்றால் அவர் நேராக வீட்டிற்குள்ளே வந்தும் கொடுப்பார். திருடிக்கொண்டு ஓடும் கள்வனையே துரத்திச் சென்று அவன் எடுத்துச் செல்ல மறந்த பொருட்களையும் கொடுக்கும் அளவிற்கு தியாக உள்ளம் மிகுந்த துறவியர் வசிக்கும் நாடு இது. நமது உள்ளம் கவர் கள்வனாகிய இறைவனுக்காக நாம் அவர் கொடுத்த பொருள்களையும், அவரைப் பற்றியச் சிந்தனைகளையும் பிறருக்கும் கொடுத்துப் பகிர்ந்து வாழ்வதில் ஏற்படும் மகிழ்ச்சி எல்லையற்றது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar