 |
| பகவானின் திருநாமத்தை இடையறாது உச்சரிப்பதால் என்ன லாபம் என்று சிலர் கேட்கிறார்கள். எவன் ஒருவன் பகவானின் நாமத்தை ஜபித்து அவனது புகழைப் பாடுகின்றானோ அந்த பக்தனின் உள்ளத்தில் பகவான் குடியேறி விடுகிறார். தெய்வத்தின் நாமத்தை ஜபிப்பது ஓர் இனிய அனுபவம். ஒரு முறை ஜபித்து அந்த சுகானுபவத்தை உணர்ந்தவர்கள், அந்த இன்பத்தைத் தொடர்ந்து அனுபவிக்கவே முயற்சிப்பார்கள். அத்தகைய மந்திர சக்தி அதற்கு உண்டு. ராம நாமத்தை ஜபித்துக் கொண்டு தான் ஆஞ்சநேயர் கடலைத் தாண்டி இலங்கைக்குப் போனார். கிருஷ்ணர் நாமத்தை ஜபித்த போதுதான் திரௌபதியின் சேலை வளர்ந்து கொண்டே போய் அவளுடைய மானத்தைக் காப்பாற்றியது. துச்சாதனன் அவளைத் துகிலுரித்த போது பஞ்ச பாண்டவர்களால் அதைப் பார்த்துக் கொண்டுதான் நிற்க முடிந்தது. பீஷ்மராலும் துரோணராலும் அவளுக்கு உதவ முடியவில்லை. கிருஷ்ண நாமம் ஒன்றினால்தான் திரௌபதியைக் காப்பாற்ற முடிந்தது. இதை உணர்ந்தால் பகவான் திருநாமத்தை உச்சரிப்பதால் என்ன பலன் என்று சிலரால் கேட்க முடியாது. |
|
|
|
|