Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராமரும், கிருஷ்ணரும் உண்மையா?
 
பக்தி கதைகள்
ராமரும், கிருஷ்ணரும் உண்மையா?

ஏராளமானவர்கள் கூடியிருந்த அவை அது, அதில் பலருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார், அந்தப் பெரியவர். விதவிதமாக வந்த கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்த அவரை நோக்கி குதர்க்கமான சில கேள்விகளை எழுப்பினான் ஓர் இளைஞன்.

இளைஞன்: ராமாயணம், மகாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தவை என்கிறார்களே, ஆனால், நிஜத்தில் எல்லாம் வெறும் கற்பனைக் கதைகள் தானே? பெரியவர்: அவை கற்பனை என்று எப்படித் தீர்மானித்தீர்கள்?

இளைஞன்: அப்படித்தான் சொல்கிறார்கள்!

பெரியவர்: அப்படிச் சொல்பவர்கள் எவ்வாறு அதை முடிவு செய்தார்கள்? அவர்களெல்லாம்தான் இதைச் சொல்வதற்கான அதிகாரம் படைத்தவர்களா? அவர்கள் சொல்வதே இறுதி முடிவா?

இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தா என்று ஒருவர் இருந்தார் அல்லவா?

இளைஞன்: ஆமாம்.

பெரியவர்: அவர் நல்ல மனிதரா? கெட்ட மனிதரா?

இளைஞன்: மிகமிக நல்ல மனிதர், நேர்மையானவர், நாணயமானவர். ஒழுக்கத்தில் சிறந்தவர்.

பெரியவர்: இவையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?

இளைஞன்: என்னுடைய தாத்தா எனக்குச் சொல்லியிருக்கிறார் அவருக்கு அவருடைய தாத்தா சொல்லியிருக்கலாம்.

பெரியவர்: உங்கள் தாத்தா சொன்னதை உண்மை என்று நம்புகிறீர்கள். வியாஸரும், வால்மீகியும் பலகாலம் முன்னால் எல்லோருக்கும் முன் வாழ்ந்தவர்கள் எல்லோருக்கும் தாத்தா அவர்கள் சொன்னால் நம்பமாட்டீர்களா?

இளைஞன்: அதையெல்லாம் விடுங்கள். இந்தப் புராணம் இதிஹாசம் இவையெல்லாம் பிராமணர்கள், மற்றவர்களை மட்டம் தட்டி தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக எழுதி வைத்த விஷயங்கள் என்பது உண்மைதானே?

பெரியவர்: பிராமணர்கள் எழுதி வைத்தது என்று சொல்கிறீர்கள். மஹாபாரதத்தை எழுதிய வியாஸரே, ராமாயணத்தை எழுதிய வால்மீகியோ பிராமணர்கள் அல்லரே! வியாஸர், மீனவப் பெண்மணிக்குப் பிறந்தவர் வால்மீகி ஒரு வேடுவர். சரி, பிராமணரல்லாத இவர்கள், யாரைப் பற்றி எழுதி வைத்தார்கள்?

வால்மீகி சொன்னது ஸ்ரீராமரைப் பற்றி ராமரோ ஒரு க்ஷத்ரியன், வியாஸர் சொன்னது கிருஷ்ணரைப் பற்றி கிருஷ்ணர், இடையர் குலத்தைச் சார்ந்தவர்.

இப்படி பிராமணரல்லாத ராமர், கிருஷ்ணர் இவர்களைப் பற்றி, பிராமணரல்லாத வால்மீகியும், வியாஸரும் எழுதி வைத்ததுதான் ராமாயணமும், மஹாபாரதமும்.

சொன்னவர்களும் பிராமணர்களில்லை; சொல்லப்பட்டவர்களும் பிராமணர்கள் இல்லை. இப்படிப்பட்ட விஷயத்தை பிராமணர்கள், மற்றவர்களை டாமினேட் செய்வதற்காக எழுதி வைத்தது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

சரி, வியாஸரோ, வால்மீகியோ பிராமணர்களாக இல்லாவிட்டாலும், அவர்களுடைய எண்ணம் பிராமணர்களை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று இருந்திருந்தால், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு பிராமண கதாபாத்திரத்தை அல்லவா அவர்கள் மிக உயர்ந்தததாகக் காட்டியிருக்க வேண்டும்? ஒரு பிராமணர்; அவர் சக்ரவர்த்தியாக இருந்தார்; அவரை மாதிரி ஓர் அரசர் இருந்ததே கிடையாது. மிகப் பெரிய வீரர்; அது மட்டுமல்ல நியாயம் தவறாதவர்; எல்லோரிடமும் கருணை காட்டுவர்.. என்றல்லவா எழுதியிருக்க வேண்டும்? அப்படிச் சொல்லவில்லையே அவர்கள்? இதிலிருந்தே தெரியவில்லையா? நீங்கள் கேள்விப்பட்டவை எல்லாமே தவறு என்பது?

குதர்க்கம் பேசிய அந்த இளைஞன் வாயடைத்துப் போகுமாறு இப்படி பதில் சொன்ன அந்தப் பெரியமனிதர் யார் தெரியுமா? சோ அவர்கள்தான்.*

வேதங்கள், புராணங்கள், இதிஹாசங்கள் எல்லாமே நிஜமாகவே நடந்தவை. அவை மனிதனுக்கு வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காகவே எழுதப்பட்டவையே தவிர, எவரையும் உயர்த்தவோ, தாழ்த்தவோ, பாகுபாடு பார்க்கவோ சொல்பவை அல்ல. இதை முழுமையாக உணருங்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். அதுதான் நம்நாட்டின் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்க தலைசிறந்த வழி!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar