Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சந்தோஷம் உங்கள் கையில்!
 
பக்தி கதைகள்
சந்தோஷம் உங்கள் கையில்!

ஒரு சமயம் திருமாலை வைகுண்டத்தில் சந்தித்தார், நாரதர். பிரபோ, எனக்கு ஒரு சந்தேகம்! என்று சொன்ன நாரதரை, கேள் என்பது போல் பார்த்துப் புன்னகைத்தார், புருஷோத்தமன். பிரபோ, சகல உயிர்களையும் படைத்து, அவற்றுக்கான விதியை இயற்றுபவர் நீங்கள்தானே? அப்படி இருக்க, எல்லாவற்றையும் சமமாக பாவிக்காமல், ஒவ்வொன்றிடமும் பகுபாடு காட்டி இருக்கிறீர்களே.... அது ஏன்? நாரதர் கேட்டதும், திடுக்கிட்டவர்போல் எழுந்தார் திருமால், என்ன சொல்கிறாய் நீ, உயிர்களுக்கு விதியை நான் எழுதுகிறேனா? கேட்டார். அய்யனே... விளையாடாதீர்கள். சகல உலகையும் உயிர்களையும் படைத்து, விதி என்ற கயிறால்கட்டி இயக்குபவர் தாங்கள்தானே... அதைத்தான் சொல்கிறேன்! சரியாகத்தான் சொல்கிறாய் நாரதா, விதி என்னும் கயிற்றால் கட்டி இயக்குபவன் நான்தான். ஆனால், அதற்கு இடையே அவரவர்களாகவே இயங்கும் ஓர் இயக்கமும் இருக்கிறதே, அதுதான் அவரவருடைய விளைவுக்கான காரணம்!

புரியவில்லை பகவானே!  நாரதா, பெரிய மைதானம் ஒன்றில் பல பசுக்களை ஒரே நீளமுள்ள கயிறால் கட்டி மேயவிட்டாலும், எல்லாமும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை. கயிறின் நீளமும் கட்டப்பட்டிருக்கும் விதமும் எல்லாவற்றுக்கும் ஒன்றுதான். ஆனால், ஒன்று சுற்றிச் சுற்றி வந்து கழுத்தை இறுக்கிக் கொள்கிறது. இன்னொன்று கயிறை இழுத்துப் பார்த்து கழுத்தைப் புண்ணாக்கிக் கொள்கிறது. மற்றொன்று ஒரே திசையில் நகர்ந்து நகர்ந்து எதுவும் கிடைக்கவில்லை என்று சலித்துக் கொள்கிறது. அடுத்தது பசும்புல் உள்ள இடத்திற்கு நகர்ந்து வயிறார மேய்கிறது... இந்தப் பசுக்கூட்டம் மாதிரிதான் உலகிலும் நடக்கிறது. என் இயக்கத்தினை நான் எல்லோரிடமும் சமமாகத்தான் செலுத்துகிறேன். ஆனால், அவரவர் இயக்கம் என்ற விஷயத்தில் நான் தலையிடுவதில்லை. இது எப்படி என்றால், ஒரு ஆசிரியர் தன்னுடைய எல்லா சீடர்களுக்கும் ஒரே மாதிரியே அனைத்தையும் கற்பிக்கிறார். பின் அவர்களுக்குள் போட்டி வைக்கிறார். போட்டிக்கு அவரே நடுவராக இருக்கிறார். அதேசமயம், போட்டியிடும்போது, எவர் விஷயத்திலும் அவர் தலையிடுவதில்லை. வெற்றியும் தோல்வியும் அவரவரது செயல்பாட்டினை ஒட்டியே அமைகிறது.

நானும் அந்த ஆசிரியரைப்போல்தான். எல்லோரையும் ஒன்றாகவே படைத்து, ஒரே மாதிரியான நெறிமுறைகளை வகுத்தேன். ரிஷிகள், முனிவர்கள் மூலம் அவற்றை வேதம் என்ற பெயரில் உலகில் பரவச் செய்தேன். விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதும், நடக்காததும் அவரவர் இயக்கம், அதில் நான் தலையிடுவதில்லை. அவரவர் செயலுக்கு ஏற்பவே வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகின்றன. இதனை உணர்ந்து தங்களது செயல்களை நேர்வழிப்படுத்திக் கொள்பவர்கள், நடப்பவை எல்லாம் என் செயலே என்று நம்புகிறார்கள். அப்படி நம்புகிறவர்களை நான் ஒருபோதும் கைவிடுவதில்லை! சொல்லி முடித்தார், பகவான். உலகங்கள் அனைத்தையும் சுற்றிவரக்கூடிய நாரதர், பகவானிடம் அப்படி ஒரு சந்தேகத்தைக் கேட்டதும், அதற்கு பகவான் சொன்ன பதிலும் நாமெல்லாம் அதனைப் புரிந்து கொண்டு நடக்கவேண்டும் என்பதற்காகத்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar