Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மந்திரத்தால் விளைந்த பலன்!
 
பக்தி கதைகள்
மந்திரத்தால் விளைந்த பலன்!

சுதாகுசலம் எனும் நாட்டில் அரங்கம் எனும் ஊரில் ஜினதத்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவ்வூருக்கு சருவகுப்தி பட்டாரகர் எனும் சமணத் துறவி ஒருவர் மழைக்காலத் தங்குதலுக்காக வந்திருந்தார். துறவிக்கு ஆகாரமளித்தல் புண்ணியச் செயலெனக் கருதிய ஜினதத்தன் அவருக்கு தினமும் ஆகாரம் அளித்து வந்தார். ஜினதத்தன் பெரிதான வசதி கொண்டவர் இல்லை என்பதால், அவரது வறுமையைப் போக்க நினைத்த துறவி அவருக்குச் சில மந்திரங்களை அருளியதோடு அதை எப்படிப் பயன் படுத்த வேண்டுமெனவும் கூறினார். ஒரு ஆலமரத்தில் ஊஞ்சல் ஒன்றைக் கட்டி, அதன் கீழ் வேல், வாள் ஆகியவற்றின் கூர் நுனியை மேல்நோக்கியவாறு நட்டு வைக்க வேண்டும். பின்பு, ஜினதத்தன் ஊஞ்சல் மேலேறி மந்திரத்தைச் சொல்லிச் சொல்லி ஊஞ்சலின் கயிற்றை ஒவ்வொன்றாக அறுக்க வேண்டும். இறுதி கயிற்றை அவர் அறுத்ததும், ஒரு தேவதை தோன்றி அவர் கேட்கும் வரத்தைத் தரும் என்று கூறினார் துறவி.

துறவி கூறியபடியே செய்த ஜினதத்தன், ஊஞ்சலில் ஏறி ஒரு கயிற்றை மந்திரம் சொல்லி அறுத்தான். உடனே, ஊஞ்சல் ஒரு பக்கமாகச் சாய, கீழே பார்த்தார். பாயக் காத்திருந்த கூராயுதங்களைக் கண்டு உடல் நடுங்க ஊஞ்சலிலிருந்து இறங்கி விட்டார். இறங்கியவருக்கும் மீண்டும் துறவி மீது நம்பிக்கை ஏற்பட, மறுபடியும் ஊஞ்சலில் ஏறி மந்திரத்தைக் கூறி, ஊஞ்சலின் மற்றொரு கயிற்றை அறுக்க, அது மறுபடியும் இன்னும் சாய, மீண்டும் பயந்து கீழே இறங்கி விட்டார். ஜினதத்தனுக்கு துறவி மீது நம்பிக்கையும், உயிர் பயமும் மாறி மாறி ஏற்பட, ஊஞ்சலில் ஏறுவதும் இறங்குவதுமாகத் தடுமாறிக் கொண்டு இருந்தார். ஜினதத்தனின் செயலை கவனித்துக் கொண்டிருந்த அஞ்சனசோரன் எனும் திருடன், இது பற்றிய விவரத்தை ஜினதத்தனிடம்  கேட்டு அறிந்தான். சமண முனிவர்கள் பொய் கூற மாட்டார்கள் என்பதை அறிந்திருந்த அத்திருடன், தன்னிடமிருந்த பெரும் பொருட்களை ஜினதத்தனிடம் தந்ததோடு, அதற்கு ஈடாக துறவி கூறிய மந்திரத்தைத் தனக்குக் கற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டான்.

திருடன் அஞ்சனசோரன், துறவி கூறியபடியே ஊஞ்சல் ஒன்றைக் கட்டி, அதன் கீழே கூரிய வாள், வேல்களை அமைத்து அந்த ஊஞ்சலில் அமர்ந்து மந்திரங்களைக் கூறி அனைத்துக் கயிற்றையும் ஒவ்வொன்றாக அறுத்தான். கடைசி கயிறு அறுந்து விழும் பொழுது, துறவி கூறியபடியே தேவதை ஒன்று தோன்றி அவனைக் காத்தது. அதோடு, அவன் வேண்டிய அனைத்துச் செல்வங்களையும் கொடுத்துச் சென்றது. அஞ்சனசோரன் திருடன் என்றாலும் சமணத்துறவியின் வாக்கை நம்பியதால் பலன் பெற்றான். அன்றிலிருந்து தமது திருட்டுத் தொழிலையும் விட்டான். ஜைன அறத்தைக் கேட்டு நற்காட்சி பெற்று, தவம் மேற்கொண்டு இறுதியில் முக்தியும் அடைந்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar