Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஜாம் ஜாமுன்னு’ கல்யாணம்
 
பக்தி கதைகள்
ஜாம் ஜாமுன்னு’ கல்யாணம்

நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வந்தாள். காஞ்சிப்பெரியவர் அவளது குடும்பத்தை நன்கறிவார். ஒரு காலத்தில் செல்வச் செழிப்பில் இருந்து, வறுமை அடைந்த குடும்பம். இப்போது வீட்டில் கடைசிப் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகி
விட்டது. ஆனால், கையில் பணமில்லை. சிக்கனமாக கல்யாணம் நடத்த திட்ட மிட்டாலும், மூவாயிரம் ரூபாய் துண்டு விழுகிறது. என்ன செய்வது? யாரிடம் கேட்பது? பரமாச்சாரியாரே சரணாகதி என காஞ்சிபுரம் வந்து விட்டாள் அவள். தன் மோசமான நிலையை சுவாமியிடம்  சொன்னாள். அவளது குடும்பத்தினர் செய்த அன்னதானம் பற்றிய எண்ணம் சுவாமிகளின் மனதில் படம் போல ஓடியது.

ஆதரவான குரலில், கவலைப்படாதே. மானேஜரிடம் நான் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லி மூவாயிரம் ரூபாய் வாங்கிக் கொள் ஆனால், அந்தக் காலகட்டத்தில் மடத்தில் பணப்புழக்கம் குறைவுஎன்பதால் அந்த பெண் யோசித்தாள். ஆனால் சுவாமிகள்,  தயங்காதே!  நான் சொன்னதாகச் சொல்லி பணம் வாங்கிக் கொண்டு போ! அவள் மானேஜரிடம் போய் விஷயத்தைச் சொன்னாள்.  அவர் ஏற இறங்கப் பார்த்தபடி, என்னம்மா...!  நேரில் ஏன் சுவாமிகளைப் பார்த்தாய்? எனக் கேட்டார். அந்த நேரத்தில் எதிர்பாராமல் சுவாமி அங்கு வந்தார்! எப்போது எங்கு வர வேண்டும் என அவருக்குத் தெரியாதா என்ன? சுவாமிகளைப் போய் ஏன் நேரே பார்த்துக் கேட்டாய் என மானேஜர் கேட்கிறாராக்கும்? என்றபடி வந்தவர் மானேஜரிடம், பணவிஷயத்தில் மடம் கஷ்டத்தில் இருப்பது எனக்கும் தெரியும். நிறைய தானம் செய்ததால் வறுமை நிலைக்கு வந்தது இவள் குடும்பம். தர்மம் செய்தவர்கள் சிரமப்படக் கூடாது. இவர்கள் கல்யாணத்திற்கு பணமில்லாமல் சிரமப்படுவதை விட, நாம் மடத்தை நடத்த முடியவில்லை என்றால் கூட பாதகமில்லை. எப்படியாவது பணத்தை சேகரித்து இவளிடம் கொடுங்கள். என்றார்.  கவலைப்படாதே அம்மா...! கல்யாணம் ஜாம் ஜாமுன்னு நல்லபடியா நடக்கும். என்று அவளுக்கு ஆசியும் அளித்தார். அவளது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. திருப்பூர் கிருஷ்ணன்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar