Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சதியின் சக்கரவர்த்தி!
 
பக்தி கதைகள்
சதியின் சக்கரவர்த்தி!

தன் சக்தியை பயன்படுத்தி, சுபாலனிடம், இரண்டு கண்களும் தெரியாத திருதராஷ்டிரனுக்காக, அழகு தேவதை காந்தாரியை பெண் கேட்டார் பீஷ்மர். அவரது ராஜதந்திரத்தால் அடங்கி போனார் சுபாலன். மணப்பெண் காந்தாரியின் சகோதரன் சகுனி வெகுண்டெழுந்தான். பீஷ்மரை படை பலத்தால் வெல்ல முடியாதென அறிந்து, புத்தி கூர்மையால் வெல்ல முடிவெடுத்தான். அவசரம் கொள்ளவில்லை; காலம் கனியும் வரை காத்திருந்தான். காந்தாரியுடன் அஸ்தினாபுரம் சென்று திருதராஷ்டிரன் அரசவையில் முக்கிய இடத்தை பிடித்தான் சகுனி. மெல்ல திருதராஷ்டிரன் மனதிலும் இடம் பிடித்தான். பிதாமகர் பீஷ்மரும், மந்திரி விதுரரும் சகுனியின் எண்ணம் பற்றி முதலில் அறியவில்லை. திருதராஷ்டிரனின் பிள்ளைகளுக்கும், பாண்டுவின் பிள்ளைகளுக்கும் தீராப் பகையை ஏற்படுத்தினான் சகுனி. பீமனின் பராக்கிரமத்தால், தன் மருமகன் துரியோதனனுக்கு பங்கம் விளையுமென்று எண்ணி, பீமனை கொல்ல சதி திட்டம் தீட்டினான். உணவில் விஷம் கலப்பது, ஆற்றில் தூக்கி ஏறிவது போன்ற திட்டங்கள் வெற்றியடையவில்லை.

துரோணரிடம் கலை பயின்ற கவுரவர்களும், பாண்டவர்களும் அஸ்தினாபுரம் திரும்பினர். யுதிஷ்டிரனுக்கு யுவராஜ பட்டம் சூட்டப்பட்டது. துரியோதனன் மனம் வெதும்பினான். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினான் சகுனி. வாரணாவதத்தில் அரசுக்கு மாளிகை அமைத்து பாண்டவரை தீயில் அழிக்க ஆலோசனை வழங்கினான். பாண்டவர்கள் சுரங்கம் அமைத்து தீயிலிருந்து தப்பினர். பாண்டவர்கள் திரவுபதியை மணந்தது, அர்ச்சுனன் சுபத்திரையை மணந்தது என, அனைத்து நிகழ்வுகளுமே துரியோதனனுக்கு எதிராக அமைந்தன. பாண்டவர்களின் அழகிய நகரமாகிய, இந்திர பிரஸ்தத்தை அபகரிக்க முடிவெடுத்தான் துரியோதனன். அவனிடம், பொறாமை கொள்ளாதே... என்று சொல்லி பார்த்தான் சகுனி. துரியோதனன் கேட்பதாயில்லை. உடனே, சகுனியின் தந்திர மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. பகடை ஆட்டம் ஆடுவதென சதி திட்டம் தீட்டினான். சகுனியின் ராஜ தந்திரத்திற்கு, முதல் மற்றும் மாபெரும் வெற்றி பகடை ஆட்டம். யுதிஷ்டிரனுக்கு பகடையின் மீது இருந்த காதலே சகுனிக்கு சாதகமாக அமைந்தது. சகுனியும், துரியோதனனும், பிள்ளை பாசத்தை காட்டி, திருதராஷ்டிரனை சாதுர்யமாக மடக்கினர். அவனும் அதை ஆமோதித்தான். பெரியப்பாவின் சொல்லை தட்டாத யுதிஷ்டிரன், சூது விளையாட வந்தான்.

யுதிஷ்டிரனிடம் நயமாகப் பேசி, தானே துரியோதனன் சார்பாக ஆடினான் சகுனி. சகுனி தன் திறமையால் வென்றான் எனவும், மாயா ஜாலத்தால் யுதிஷ்டிரனை மயக்கி வசப்படுத்தினான் எனவும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எது எப்படியோ, தர்மம் சாய்ந்தது; அதர்மம் வென்றது. அதன் வெற்றி என்னவோ தற்காலிகம் தான். யுதிஷ்டிரன் நாடு, ஆஸ்தி, சகோதரர்கள், மனைவி என அனைத்தையும் இழந்தான். சகுனியை கொல்வதாய் சபதம் பூண்டான் சகாதேவன். திரவுபதியின் அலறலால் பயந்து போன திருதராஷ்டிரன், பாண்டவர்களை விடுவித்தான். அவர்கள் நாட்டையும் திருப்பி அளித்தான். மனம் பொறுக்காத துரியோதனன், திருதராஷ்டிரனை வற்புறுத்தி மீண்டும், பாண்டவர்களை பகடை விளையாட அழைத்தான். திருதராஷ்டிரனும் இசைந்தான். மீண்டும் சபையில் நுழைந்த பாண்டவர்களிடம், போட்டியில் தோற்பவர்கள், 12 ஆண்டு வனவாசமும், ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் - மறைந்திருந்து வாழ்தல் ஏற்க வேண்டுமென நிபந்தனை விதித்தான் சகுனி. யுதிஷ்டிரன் ஆமோதித்தான்; மீண்டும் தோற்றான். சகுனி, துரியோதனனுக்கு முழுக்க துர்போதனையே செய்யவில்லை. அவ்வப்போது அறவழியையும் எடுத்து கூறினான். சூது விளையாட்டிற்கு முன்பு, பாண்டவர்களுடன் இணக்கமாக இருக்குமாறு துரியோதனனை வேண்டினான். துரியோதனன் மறுக்கவே, சூது அறிவுறுத்தப்பட்டது. பாண்டவர்கள் வனவாசத்தின் போது, கந்தர்வகளால் துரியோதனன் சிறைபிடிக்கப்பட்டான். பாண்டவர்கள் அவனை காப்பாற்றினர். அந்த அவமானத்தால் உயிரை விட துணிந்த துரியோதனனிடம், பாண்டவர்கள் உபகாரம் செய்ததால், அவர்களுக்கு நன்றி செலுத்து, ராஜ்ஜியத்தில் ஒரு பங்கை கொடு என அறிவுறுத்தினான் சகுனி. துரியோதனன் மசியவில்லை. போரின் போது, மற்றவர்களுக்கு சற்றும் சளைக்காமல், போர் செய்தான் சகுனி. கதைகளில் வருவதுபோல், சகுனி கோழையல்ல. யுத்தத்தின், 18ம் நாள், சகுனியின் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது. சகாதேவனுடன் மூண்ட போரில் சகுனி கொல்லப்பட்டான். கேரளாவில் பவித்ரேஸ்வரம் எனும் ஊரில், மலைவாழ் மக்கள், சகுனிக்கு கோவில் கட்டி வழிபடுகின்றனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar