Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » யாருக்கு சொர்க்கம் கிடைக்கும்
 
பக்தி கதைகள்
யாருக்கு சொர்க்கம் கிடைக்கும்

ஒரு முனிவரும், சீடரும் நதியைக் கடக்க படகுக்காக காத்திருந்தனர். அப்போது, ஒரு தாசி வந்தாள். அவளும் நதியைக் கடக்க வந்தவளே. அவளிடம் பேச்சுக் கொடுத்த முனிவர், அவள் செய்யும் தொழிலைப் பற்றி அறிந்து கொண்டார். பெண்ணே! இழிந்த தொழில் செய்யும் நீ, நாங்கள் பயணம் செய்ய இருக்கும் படகில் ஏறாதே. உன் காற்று பட்டாலே பாவம் தொற்றிக் கொள்ளும். வேறு படகில் வா! என்றார். அவள் வருத்தத்துடன் ஒதுங்கி நின்று கொண்டாள். நிர்ப்பந்தம் காரணமாக அந்தத் தொழில் செய்கிறாள் என்பது, அவருக்கு தெரியாது. படகு வந்தது.  முனிவரும், சீடரும் ஏறிக் கொள்ள, கிளம்பி  விட்டது. வருந்திய நிலையில் நின்ற அந்தப் பெண்ணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவள் இறந்து போனாள். முனிவர் சென்ற படகு கவிழ, நீச்சல் தெரிந்த சீடரும், படகுக்காரனும் தப்பி விட்டனர். முனிவர் இறந்தார். முனிவரும், இறந்த பெண்ணும் எமனுலகம் சென்று, ஒரே இடத்தில் நின்றனர். வாசல் திறக்கப்பட்டதும், நரக வாசல் வழியாக முனிவரும், சொர்க்க வாசல் வழியாக அந்தப் பெண்ணும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதென்ன அநியாயம்! தவமே வாழ்வாகக் கொண்ட எனக்கு நரகம். இழிந்த தொழில் செய்த அவளுக்கு சொர்க்கமா? என்று கத்தினார் முனிவர். முனிவரே!  அமைதியாயிரும். பிறரைக் குறை கூறுபவர்கள், அவர்களது நிலை அறியாது பேசுபவர்கள், எவ்வளவு பெரிய தபஸ்வியாயிருந்தாலும், தங்கள் தவ வலிமையை இழந்து, சாதாரணமானவர்களை விட, கீழ்நிலைக்கு போய் விடுவர். அந்தப் பெண்ணோ, இழிந்த இப்படி ஒரு வாழ்வு, இனி வரும் பிறவிகளில் வரக்கூடாதென ஸ்ரீமன் நாராயணனை நினைத்து கண்ணீர் வடித்து, வாழ்நாளெல்லாம் அவர் நினை வாகவே வாழ்ந்தாள். அவளது கோரிக்கை நாராயணனால் ஏற்கப்பட்டு, வைகுண்ட பதவியை அனுபவிக்கச் செல்கிறாள். நீரோ அவள் மனதைக் காயப்படுத்தினீர். பிறர் மனதைக் காயப்படுத்துபவர்களின் கண்களைக் குத்துவது எங்கள் வழக்கம். உமது கண்களும் இப்போது பறிக்கப்படும்! எனச் சொல்லி அழைத்துச் சென்றனர்.  புரிகிறதா! வெறும் விரதமும், தவமும் சொர்க்கத்தை அடைய உதவாது. பிறர் மீது கொள்ளும் இரக்க சிந்தனையே, சொர்க்க வாழ்வைத் தரும்.  வைகுண்ட ஏகாதசியன்று ரங்கநாதப் பெருமானிடம் இரக்க சிந்தனையுள்ள மனம் வேண்டுமென வேண்டி வருவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar