Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்!
 
பக்தி கதைகள்
எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்!

ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார். ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தார். அப்போது கடைத் தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது, மந்திரியிடம் சுட்டிக்காட்டி, “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விட வேண்டும் என்று தோன்றுகிறது” என்றார். அவரது பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனார். மன்னர் ஏன் அப்படிச் சொன்னார்? என்று குழம்பினார். அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக மாறுவேடத்தில் அந்தக் கடைக்குச் சென்றார். கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல, ‘வியாபாரம் நன்றாக நடக்கிறதா?’ என்று விசாரித்தார். “என் கடைக்கு வாடிக்கையாளரே இல்லை. கடைக்கு வருவோர் சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர். நல்ல மணம் வீசுவதாக பாராட்டக்கூடச் செய்கின்றனர். ஆனால் யாரும் வாங்குவதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான். அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனார்.

“இந்த நாட்டின் அரசன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும். எனக்கு நல்ல வியாபாரம் ஆகி, என் கஷ்டமும் தீரும் ” என்றான். கடைக்காரன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு, முதல் நாள் அரசர் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது. இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னரின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கி, அப்படிச் சொல் வைத்தது என்று உணர்ந்தார் மந்திரி. இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினார். அதை எடுத்துச்சென்று அரசனிடம், “நேற்று நீங்கள் சுட்டிக்காட்டிய சந்தனமரக் கடைக்காரன் உங்களுக்கு இதைப் பரிசாக வழங்கியுள்ளான் ” என்று கூறி, அதைத் தந்தார். அந்த சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசர் மிகவும் மகிழ்ந்தார். அந்தக் கடைக்காரனைக் கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டார். கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினார்.

அரசர் கொடுத்தனுப்பிய பொற்காசுகளைப் பெற்று கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான். அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது. ‘நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் ’ என்று தான் எண்ணியதற்கு மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான். அத்துடன், ‘மன்னர் நீண்டநாட்கள் வாழவேண்டும் ’ என்றும் பிரார்த்தனை செய்துகொண்டான். குரு, சீடர்களே, இப்போது சொல்லுங்கள்... கர்மா என்றால் என்ன?” என்றார். “கர்மா என்பது நமது எண்ணங்களே. நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும் . மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால், அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும். நாம் எதைத் தேடுகிறோமோ அதுவே கிடைக்கும். நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்..” சீடன் ஒருவன் சொல்ல, பாராட்டினார், குரு.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar