Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆசையா... எனக்கேது!
 
பக்தி கதைகள்
ஆசையா... எனக்கேது!

இன்பம், துன்பத்தை சமமாக கருதுபவர் முனிவர் ஜைகீஷவ்யர். மறந்தும் யார் மீதும் கோபம் கொள்ளாதவர். அவரது நற்குணம் கண்ட சிவன், அரூப வடிவில் (உருவம் இல்லாமல்) எந்நேரமும் தன்னை தரிசிக்க அனுமதி அளித்தார். கைலாயத்தில் ஒருநாள் சிவனும் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிவன்,“உலகில் எல்லாப் பொருளும் நானே. நான் அசைந்தால் தான் இந்த அகிலம் அசையும், காற்று, கடல், வான், நெருப்பு, பூமி, மக்கள் என அனைத்தும் நானே,” என்றார். பார்வதிக்கு கோபம் உண்டானது. “தாங்கள் தான் எல்லாம் என்றால், எனக்கு என்ன வேலை? நீங்கள்  என்னை பொருட்படுத்தவில்லையே....” “தேவி... கோபிக்காதே! என்னுள் நீயும் அடக்கம்” என்றார் சிவன்.

அப்போது, ஜைகீஷவ்யரின் குரல் கேட்டது, “உண்மை தேவி! சிவத்திற்குள் அடக்கம் சக்தி.. சிவத்தினால் தான் சக்திக்கு மதிப்பு.” என்றார். இதை கேட்ட பார்வதிக்கு கோபம் அதிகரித்தது.  “ என்னை விமர்சிக்கும் துணிச்சல் கொண்டது யார்?  நீங்களும் அதை கேட்டு அமைதியாக இருக்கிறீர்களே...?” என்று சிவனிடம் கொந்தளித்தாள். “அன்பே... கோபப்படாதே. தவசீலரான இவர் என்னை தரிசிக்க அரூப வடிவில் அடிக்கடி வருவார். இப்போதும் வந்த அவர்,  உன் கேள்விக்கான பதிலை சொல்லி விட்டு கிளம்பி விட்டார். ” என்றார் சிவன்.  “அப்படியா... அந்த தவசீலரை நான் பரிசோதிக்க விரும்புகிறேன், இப்போதே கிளம்புங்கள்,” என்றாள். இருவரும் முனிவரின் இருப்பிடம் வந்தனர்.  அப்போது ஜைகீஷவ்யர் தன் கந்தல் ஆடையை தைக்க ஊசியில் நூல் கோர்த்துக் கொண்டிருந்தார்.  சிவன் மட்டும் அவருக்கு காட்சி தந்தார். “பக்தா! உனக்கு வரம் தர  விரும்புகிறேன்” “ஐயனே! எனக்கு தேவையானதை எல்லாம் தந்து விட்டீர்கள். போதும்”

“பக்தா! நீ வேறு; நான் வேறு அல்ல, என்ன விருப்பமோ கேள்” என்றார் சிவன்.. முனிவர் மயங்கவில்லை. “எனக்கேதும் ஆசை இல்லை சுவாமி. முடிந்தால் இந்த ஊசியில் நூலை கோர்த்து கொடுங்கள் போதும்” என்றார். ஆச்சரியப்பட்ட பார்வதியும் முனிவருக்கு காட்சி கொடுத்தாள்.   “முனிவரே... ஆசை என்பதே இல்லாத தங்களை போன்றவர்கள் கடவுளுக்கே புத்தி சொல்லும் தகுதியை அடைவது உண்மையே. சிவத்துக்குள் சக்தி அடக்கம் என்பதை ஏற்கிறேன்,” என்றாள். சிவபார்வதியை ஒருசேர  தரிசித்த முனிவர் மகிழ்ச்சியில் திளைத்தார். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar