Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சிவந்த கைகள்
 
பக்தி கதைகள்
சிவந்த கைகள்

வரதந்து மகரிஷியிடம் கவுத்சன் என்ற சீடன் பாடம் கற்க வந்தான். ஆண்டுகள் உருண்டோடின. சிறுவனாக வந்த கவுத்சன் இளைஞனாக வளர்ந்தான். குருவுக்குத் தெரிந்த அனைத்தும் கற்று முடித்தான்.  சீடனை சோதிக்க குரு விரும்பினார்.  அதில் சீடன் வெற்றி பெற்றான்.  வீட்டுக்குப் புறப்பட்ட கவுத்சன், “குருதேவா! தட்சணை தர விரும்புகிறேன். தங்களின் விருப்பம் அறிய விரும்புகிறேன்” என்றான். “இத்தனை காலமும் நீ பணிவுடன் கற்ற விதமே தட்சணை பெற்ற மன நிறைவைத் தந்தது” என்றார் வரதந்து. ஆனால், கவுத்சன் விடுவதாக இல்லை. “தங்களுக்கு தட்சணை அளித்தால் தான் என் மனம் மகிழ்ச்சி பெறும்”என்றான்.   “சரி.... கவுத்சா.... நீ இதுவரை என்னிடம் பதினாலாயிரம் வித்தை கற்றுக் கொண்டாய். வித்தைக்கு ஒரு தங்கக் காசு வீதம் பதினாலாயிரம் பொன் கொடு”என்றார் வரதந்து. கவுத்சன் சிறிதும்  கலங்கவில்லை.

“நிச்சயம் நீங்கள் கேட்ட தட்சணையுடன் வருகிறேன்”என்று சொல்லிப் புறப்பட்டான். அயோத்தி மன்னர் ரகு பற்றி கவுத்சன் கேள்விப்பட்டிருந்தான். அவரிடம் சென்றால் தானம் பெறலாம் என்ற நம்பிக்கை தோன்றியது. அயோத்திக்குச் சென்றான்.

அரண்மனைக்கு வந்திருக்கும் அந்தணரான கவுத்சனை கண்ட  மன்னர் ரகு வரவேற்றார். அரண்மனையில்  விருந்து சாப்பிட்ட கவுத்சன், “அரசே... தங்களின் உபசரிப்புக்கு நன்றி” என்று சொல்லி கிளம்பத் தயாரானான்.  “தானம்  பெறாமல் செல்லலாமா?” என்றார் ரகு.  “அரசரே.... நான் பொருள் பெறும் நோக்கத்துடன் வந்தேன். ஆனால் வந்த பிறகே, தாங்கள் பொன், பொருள் அனைத்தையும் தானம் செய்து விட்டதை அறிய நேர்ந்தது. எனக்கு உணவளிக்க மண் பாத்திரங்களையே வைத்திருக்கிறீர்கள். என்னுடைய தேவையோ பதினாலாயிரம் பொற்காசுகள். அதைக் கேட்டு தங்களை சிரமப்படுத்த மாட்டேன்” என்றான் கவுத்சன். “உங்கள் விருப்பத்தை  நிறைவேற்றுவேன். அதுவரை இங்கு தங்கியிருங்கள்” என்றார் ரகு. செல்வத்திற்கு அதிபதியான குபேரன் மீது போர் தொடுத்து, செல்வம் பெற்று வரலாம் என்பது ரகுவின் எண்ணம். ஆனால் அப்போது அங்கு ஓடி வந்த அமைச்சர்,“ அரசே! போரிடத் தேவையில்லை. நம் பொக்கிஷ அறையில் குபேரன் தங்கமழை பொழிகிறான்”என்றார். “அப்படியா... மகிழ்ச்சி” என்ற ரகு அந்தணரை அழைத்தார்.  “உமது விருப்பம் நிறைவேறி விட்டது. குபேரன் தானாகவே வந்து தங்கமழை கொட்டிக் கொண்டிருக்கிறான். அது உமக்கே சொந்தம்” என்றார்.

கவுத்சன்,“ குருதட்சணையான பதினாலாயிரம் பொன் மட்டும் போதும். அதற்கு மேல் வேண்டாம்” என்றான். “அப்படி என்றால் நீங்கள் பெற்றது போக மீதியை தானம் பெற வருவோருக்கே கொடுப்பேன்” என்றார் ரகு. அள்ளித் தரும் வள்ளல் ரகுவின், சிவந்த கைகளைப் பிடித்து நெகிழ்ந்தான் கவுத்சன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar