Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுள் என்னும் விவசாயி
 
பக்தி கதைகள்
கடவுள் என்னும் விவசாயி

பேரரசர் ஒருவருக்கு, வெளிநாட்டு வர்த்தகன் ஒருவன், பஞ்சவர்ணக் கிளிக் குஞ்சுகள் இரண்டினைப் பரிசளித்தான். அரசன் மிகவும் மகிழ்ந்து அந்த வர்த்தகனை சிறப்பித்தார். பின்னர் தன் நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து, அவற்றை நல்ல முறையில் பராமரித்து, பறப்பதற்குப் பயிற்சியளிக்கச் சொன்னார். மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? எனப் பார்க்கச் சென்றார் அரசர். அங்கே இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்கக் கற்றுக்கொண்டிருக்க மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும், தான் அமர்ந்திருந்த கிளையை விட்டு நகர மறுத்தது. அதைக் கண்ட மன்னர், அதன் இறக்கைகளில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம் என நினைத்து, கால்நடை மருத்துவர்களை அழைத்தார். வந்த மருத்துவர்கள் அக் கிளியை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இதன் உடலில் எந்தக் குறையுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை, அரசே!” என்றனர்.

அமைச்சர் முதல் பலரும் முயற்சித்தும் அந்தக் கிளி இருந்த இடத்தை விட்டு நகரவேயில்லை. மன்னன் மனதிற்குள் ஒருவித கவலை படர்ந்தது. எனவே, அந்தக் கிளியினைப் பற்றிய விவரத்தைக் கூறி, அதனைப் பறக்க வைக்கத் தெரிந்தவர் யாராவது இருந்தால் வரவும் என்று தண்டோரா போடச் சொன்னான். விவரம் அறிந்து, கிராமப் பகுதியில் இருந்து வயதான விவசாயி ஒருவர் வந்தார். கிளி அமர்ந்திருந்த மரத்தை நெருங்கினார். விஷயம் அறிந்து அவர் என்ன செய்கிறார் எனப்பார்க்க மன்னன் வந்தபோது, அந்தப் பஞ்சவர்ணக் கிளி மரத்தைச் சுற்றி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. மன்னர் அந்த விவசாயியை அழைத்தார். “எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியை எப்படிப் பறக்கச் செய்தாய்?” என்று கேட்டார். “பெரிதாக எதுவும் செய்யவில்லை அரசே.... மரத்தில் அந்தப் பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். அவ்வளவுதான்!” என்றார். இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அவன் அப்படிச் செய்வது, நாம் ஆற்றலை நாம் உணரவேண்டும் என்பதற்காகத்தான். நாம் ஒவ்வொருவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்களே என்பதை உணர்ந்து கொள்வதும், நாம் அமர்ந்திருக்கும் பயமென்னும் கிளையை வெட்டி எறிந்துவிட்டு, சுதந்திரப் பறவைகளாய் உயரே உயரே பறப்பதும் நம்மிடம்தான் இருக்கிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar