Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராமனின் மோகனம்! சிங்கார மந்திரம்!
 
பக்தி கதைகள்
ராமனின் மோகனம்! சிங்கார மந்திரம்!

வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமர். அவரது பட்டாபிஷேக ஏற்பாடு நடந்தது. இலங்கை போரில் பல உயிர்களை கொன்ற பாவம் தீர, எள் தானம் செய்ய வேண்டுமென குலகுரு வசிஷ்டர்  தெரிவித்தார்.  எள் தானம் பெற்றால் பாவம் சேருமே என யாரும் முன்வரவில்லை.  இந்நிலையில் ’எள் தானம் பெறுவோருக்கு தங்கக்கட்டிகள்  தரப்படும்’ என்று அறிவிக்கச் சொன்னார் வசிஷ்டர்.

அயோத்தியின் எல்லையில் வாழ்ந்த சிங்கார முனிவர் – சொர்ணவல்லி தம்பதியை இந்த செய்தி எட்டியது.   தங்கத்தின்  மீது முனிவருக்கு ஆசை இல்லை என்றாலும் மனைவியின் மனதில், எள் தானம் பெற்றால் ஏழ்மை நீங்குமே என்ற எண்ணம் எழுந்தது. ஒருவிதமாக விருப்பத்தை முனிவரிடம் தெரிவித்தாள்.  அவ்வளவு தான் சாந்த சொரூபியான முனிவர் கொதித்து விட்டார். “கேவலம் தங்கத்திற்கு ஆசைப்பட்டு பாவத்தை சேர்க்க சொல்கிறாயா?” என்றார்.

“சுவாமி உங்களுக்கு பாவம் சேர நினைப்பேனா? ஸ்ரீராமர் கடவுளின் சொரூபம். நீங்கள் எள் தானம் பெற்றதும் அவரது முகத்தை ஒரு முறை பாருங்கள். அது போதும். அந்த நொடியே  பாவம் அத்தனையும் நீங்கி விடும். தானம் பெற்றால் வறுமை நீங்கும் என்ற நம்பிக்கையில் தான் சொன்னேன். என்னை மன்னியுங்கள்” என்றாள். சமாதானம் அடைந்த முனிவரும் எள் தானம் பெற தயாரானார்.  இந்த விஷயம் ஊரரெங்கும் பரவியது.’சிங்கார முனிவர் எப்படிப்பட்ட தவசீலர்... அவர் புத்தி ஏன் இப்படி போனது? தங்கத்திற்கு ஆசைப்பட்டு  தன்னை இவ்வளவு தாழ்த்திக் கொள்ள வேண்டுமா..?’ என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் தவசீலரான வசிஷ்டர்  சிங்கார முனிவரின் திட்டத்தை அறிந்தார்.

தானம் பெறும் முனிவர், ஸ்ரீராமரின் முகத்தைப் பார்த்தால் தானம் பயன் தராமல் போகுமே என்று யோசித்தவர், ஒரு திட்டம் தீட்டினார். தானம் பெறும் நாள் வந்தது. சிங்கார முனிவருக்கு ராமர் எள்ளை தானமாக கொடுத்ததுமே,  சட்டென இருவருக்கும் இடையில் ஒரு திரை விழுந்தது. அதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் ஆழ்ந்த முனிவர் துயரத்துடன் குடில் நோக்கி நடந்தார். அதற்குள் முனிவரின் குடிலுக்கு தங்கக்கட்டிகள் வந்து சேர்ந்தன. கணவரை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தாள் சொர்ணவல்லி. நடந்ததை கேட்டு நடுங்கினாள். இருந்தும்  மனம் தளரவில்லை.
யோசித்தாள்.

உற்சாகத்துடன் முனிவரிடம்,“சுவாமி... கவலை வேண்டாம். பட்டாபிஷேக நாளன்று  ஸ்ரீராமர் பவனி வருவார். அப்போது தரிசித்தால்  பாவம் அத்தனையும் காணாமல் போகும்” என்றாள்.
முனிவருக்கும் சரியென்று பட்டது. அந்த நாளுக்காக காத்திருந்தார். அயோத்தி மாநகரின் ராஜவீதியில் ஸ்ரீராமர் பவனி வந்தார். முனிவர் ஓடோடிச் சென்று  ராமரை கண்குளிர தரிசித்தார். ஸ்ரீராமர் மோகன புன்னகையுடன், ’ முனிவரே! உமது பாவம் எல்லாம் இந்த கணமே விலகியது. இனி உங்களது தவ வாழ்வு சிறக்கும்’ ’என்று வாழ்த்தினார். அந்த வாழ்த்தினை மந்திரமாக ஏற்ற சிங்கார முனிவர், அதன் பின் தங்கக்கட்டிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar