Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆழம் தெரியாமல்...
 
பக்தி கதைகள்
ஆழம் தெரியாமல்...

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். தொழிலில் ஈடுபாடே மனிதனுக்கு உயர்வு தரும். நற்பெயரும், வாழ்வில் வளமும் தரும். தொழிலில் நாம் முன்னேறுவோம் என்று முதலீட்டாளர் நம்ப  வேண்டும். மூலதனம் என்பது இரண்டாம் பட்சம் தான். முதல் மூலதனம் நம்பிக்கை தான். அதை தொடர்ந்து உழைப்பு. பெரியமலை மீதேற நினைத்ததும் ஏற முடியுமா? முடியும் என்ற நம்பிக்கையுடன் ஏறுவதற்கு என்னென்ன உத்திகளைக் கையாள வேண்டும் எனத் தெரிய வேண்டும். தெரியாத விஷயத்தை தெரிந்ததாக காட்டிக் கொண்டு மூக்கை நுழைக்க கூடாது.

எல்லாம் தெரிந்ததாக காட்டுவதில் சிலர் ஆர்வம் காட்டுவர்.  தெரியாது என்று எதையும் சொல்ல மாட்டார்கள். இதை சுயகர்வம் அல்லது தற்பெருமை என சொல்வர்.

இதற்கு உதாரணம் வேண்டுமே...

ஒரு பெரிய ஆறு. அதை ஸ்டீம் போட் மூலமாக கடக்க வேண்டும். அதில் ஏற பலர் காத்திருந்தனர். படகோட்டிக்கு உடல்நலம் சரியில்லாததால் வரவில்லை. அவசரமாக செல்ல வேண்டியவர்கள் எப்படியாவது போக வேண்டும் என்றார்கள். ஆற்றைக் கடப்பதற்காக ஒரு கார் டிரைவர் அங்கிருந்தார்.

“கார் போல ஸ்டீம் போட்டையும் அவரால் ஓட்ட முடியும்” என சிலர் எண்ணினர்.   

“ நீ டிரைவர் தானே?”

“ஆமாங்க”

“இந்த ஸ்டீம் போட்டை உன்னால்  ஓட்ட முடியாதா?”

கார், ஸ்டீம் போட் ஓட்டுவதில் உள்ள வித்தியாசம் தெரியும் என்றாலும்  பயமும் தொற்றியது. முடியாது என்று சொன்னால் கவுரவம் பாதிக்கும் எனக் கருதினான்.   

“முன்னாலே ஓட்டிப் பழக்கம் இல்லீங்க... அதான் யோசிக்கிறேன்”

“அட என்னப்பா நீ... எம்புட்டு தூரம் காரை வெரசா ஓட்டுவ. இப்போ இப்படி யோசிக்கிறயே?” என உசுப்பி விட்டார் ஒருவர்.
தன் கவுரவம் செல்லாக்காசாகி விடுமே எனக் குழம்பினான் டிரைவர்.

“என்னய்யா இம்புட்டு யோசனை? அவசரத்துக்கு உதவாத நீ என்னய்யா மனுஷன்?” என சலித்துக் கொண்டார் ஒருவர்.  
“வேணுங்கற காசை வாங்கிக்கப்பா.. சும்மா ஓட்ட வேணாம்” என்றார் இன்னொருவர்.

மற்றவர் சும்மா இருப்பார்களா... தலைக்குத் தலை பேசினார்கள். தனக்கு திறமை இருப்பதாக மற்றவர்கள் முன்பு நிரூபிக்க இதுவே தருணம். என்ற எண்ணம் எழுந்தது.

“சரி... சரி... ஏறுங்க எல்லாரும்” என்றான் பரபரப்பாக.  
தன்னால் மட்டுமே அவர்களை கரை சேர்க்க முடியும் என்ற இறுமாப்பு கொண்டான்.  

“போகலாம். எல்லோரும் ஏறியாச்சு” என்றதும் போட்டை செலுத்தினான் அவன். ஆற்றின் நடுவில் செல்லும் போது போட் நகராமல் நின்றது.

“என்னாச்சு” என்று அனைவரும் கேள்விக்கணை எழுப்பினர்.

“போட் இனி போகாது. ரிப்பேர் ஆயிடுச்சு” என்றான்.
போட்டில் இருந்தவர்கள், “என்னப்பா இது ஒரு விஷயமா என்ன?  கார் நின்னா செய்வியே அது மாதிரி ரிப்பேர் பண்ணுங்க!” என்றனர்.

“இது என்ன பிரமாதம்? இதோ ஒரு நொடியில பழுது பாத்தா... போட் புறப்பட்டு விடும்’ என்று சமாதானம் கூறினான். இது சாத்தியமா?

இந்த இடத்தில் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்...

கார் டிரைவருக்கு போட் ஓட்டத் தெரியும் என்று  மக்கள் சொல்லியது சரியா? தன் இயலாமையை உணராமல் டிரைவர் படகோட்ட சம்மதித்தது சரியா? என்று ஆளாளுக்கு பேசி  ஒரு முடிவுக்கு வருவதற்குள் போட் கவிழ்ந்து மூழ்கிய செய்தி வந்து
விடுமே! இந்த விஷயத்தில் இரண்டு பக்கமும் தப்பு இருக்கிறது என்பது தானே நிஜம்.

’தாம்பும் அறுதல் தோண்டியும் பொத்தல்” என்றொரு பழமொழி சொல்வதுண்டு. தாம்பு என்பது கிணற்றில் தண்ணீர் எடுக்க உதவும் கயிறு. அது இற்றுப் போய் தோண்டியை (வாளி) விடும் போது அறுந்தால் என்ன செய்வது?.

கயிறு சரியாக இருந்து தண்ணீர் சுமக்கும் தோண்டி(வாளி) ஓட்டையாக இருந்தால் என்ன பயன்? இரண்டும் சரியாக இருக்க வேண்டுமே...

தன்னால் எதை செய்ய முடியும்? எதைச் செய்தால் நன்றாக முடியும் என்று சிந்தித்து மனிதன் வேலை செய்ய வேண்டும்.  
ஆற்றங்கரையில் நின்ற மேதாவி ஒருவர், “ஏய்...! நான் அக்கரைக்குப் போகணும் வர்றியா?”  என படகோட்டியை அழைத்தார்.

“இதோ...வந்துட்டேன் சாமி” என்றான் படகோட்டி. புறப்பட்டது படகு.

“ என்ன படிச்சிருக்கே?” என்றார் படித்தவர்.

“எங்க சாமி படிக்கிறது... சின்ன வயசிலேயே படகோட்ட வந்திட்டேனுங்க! இது தானுங்க சோறு போடுது!”

“உன்னைப் பார்த்தாலே பாவமா... தான் இருக்கு!  உன் வாழ்க்கை இப்படி படகிலேயே முடிஞ்சிருச்சே” என்றார் இளக்காரத்துடன்.  
மட்டம் தட்டிப் பேசுகிறார் என்பதை புரிந்த படகோட்டிக்கு சுருக்கென்று இருந்தது.  யதார்த்தத்தை  புரிய வைக்க தீர்மானித்தான்.

“சாமி... உங்களுக்கு நீச்சல் தெரியுமா”

“அதுதான் படகு இருக்கு. செலுத்த படகோட்டி நீயும் இருக்கியே” என்றார்.

“இல்ல சாமி! படகில  பெரிய ஓட்டை விழுந்திட்டதால தண்ணி உள்ளே வரப்போகுது. கரை சேரும் வரை படகு தாங்காது.
அதனால் ஆற்றை  நீந்திக் கடப்பதை தவிர வேறு வழியில்லை” என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தான் படகோட்டி.

“ஐயோ.. கடவுளே என்னை காப்பாற்று” என்று கதறினார் படித்தவர்.

அப்போது படகோட்டி, “படித்தால் மட்டும் போதாது சாமி.  யாரும் யாருக்கும் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை என்பதை உணர்த்தவே அப்படி சொன்னேன். உங்களை கரை சேர்ப்பது என் கடமை ”  என சொன்னபிறகே மேதாவி தன் இயலாமையை உணர்ந்து அமைதியானார். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar