Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சொல்லெல்லாம் மந்திரங்கள்
 
பக்தி கதைகள்
சொல்லெல்லாம் மந்திரங்கள்

திருமணத்தின் போது தம்பதிகளை பெரியவர்கள் என்ன சொல்லி வாழ்த்துவர் தெரியுமா?

“பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க” எனச் சொல்வர்

“ இந்தக் காலத்தில் ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பதே கஷ்டம்; இதில் எப்படி பதினாறை வளர்ப்பது?” எனச் சிலர் நினைக்கலாம்.

பதினாறு என்பது குழந்தைகளைக் குறிக்கவில்லை. பதினாறுவித செல்வங்கள்.

உடல்நலம், கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, குழந்தைச் செல்வம், வலிமை, துணிவு, வாழ்நாள், வெற்றி, நல்வினை, நுகர்ச்சி என்ற பதினாறும் நம் வாழ்வை சிறக்கச் செய்யும் பேறுகள்.

அதிலும் மிகச் சிறந்தது கல்வி. இதன் பெருமை பேசாதவர்களே இல்லை.

மனிதன் படித்தால் மட்டும் போதாது. அவனது பேச்சில் ’நாணயம்’ வேண்டும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும்.  

செல்வந்தரிடம் கடன் வாங்குகிறார் ஏழை ஒருவர். கடன் பத்திரமோ அல்லது சாட்சியோ கிடையாது.

பணம் பெற்றுக் கொண்டு, “இந்த வருஷம் நிலத்துல அறுவடை முடிஞ்சதும் பணத்தைத் தருகிறேன்.” என்கிறார். இது தான் ’சொல் பத்திரம்’. நாவிற்கு நயம் உண்டு. அதை பெரியவர்கள் ’நாணயம்’ என்றனர்.

“உங்கிட்ட நாணயம் இருக்கா” என பணம் கொடுக்கல், வாங்கலின் போது சிலர் கேட்பதுண்டு.

சொன்னபடி பணத்தை திருப்பி கொடுத்து விட்டால் இருதரப்பிலும் நட்பு மலரத் தொடங்கும்.

பேச்சும், செயலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டால் என்னாகும்?
சிலர் வாய்ச்சொல்லில் வீரராகவும், செயலில் பூஜ்ஜியமாகவும் இருப்பதுண்டு.  

இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவன் புத்திசாலி; எதையும் உற்று கவனிப்பான். அதிகம் பேச மாட்டான்.

இன்னொருவன் சவடால் பேர்வழி. எல்லாம் தெரிந்தது போல பேசுவான். ஆனால் ஒன்றுக்கும் ஆக மாட்டான்.

“விமானம் ஓட்டுவது பெரிய காரியமா? காரைத் தரையில் ஓட்டுவது போலத் தான்” என்பான்.

“வீடு கட்டுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லையே? செங்கல்லை அடுக்கி சிமென்டைக் குழைச்சு வைச்சா போச்சு” என்பான். இப்படி எப்போதும் வாய் ஜாலம் மட்டும் தான்.

ஒருநாள் ஆற்றங்கரை ஓரம் நடந்து சென்றனர் நண்பர் இருவரும்.  புத்திசாலி இளைஞனுக்கு ஆற்றில் நீச்சலடிக்க ஆசை வந்தது.  
“ஏண்டா! உனக்கு நீச்சல் தெரியும் தானே?” எனக் கேட்டான்.

“கையும், காலும் வேகமா தண்ணீரில உதைச்சா... அதுக்கு பேரு நீச்சல். இதை கத்துக்க வேற செய்யணுமா” என்றான்.

உடனே புத்திசாலி நீச்சலடிக்க தயாரானான். நீச்சல் தெரியாத சவடால் பேர்வழியோ படித்துறையில் உட்கார்ந்தான். அப்போது லேசாக மழை தூறியது.   

“நீயும் என்னோடு நீச்சலடிக்க வா” என்றான் புத்திசாலி.

“போடா...மழையே என்னைக் குளிப்பாட்டுது. எதுக்கு தனியா நீச்சலடிக்கணும்” என்று படித்துறையில் ஓரத்திற்கு நகர்ந்தான்.

கால் பாசியில் வழுக்கவே ஆற்றுக்குள் விழுந்தான். நீரின் வேகத்தில் நிலை குலைந்தான்.

“ஐயோ! காப்பாத்துங்க” என அலறினான்.

அது கேட்டு விரைந்த புத்திசாலி, அவனது முடியைப் பிடித்து இழுத்து கரையில் சேர்த்தான்.

கண்விழித்ததும், “வீராப்பு பேசி வீம்பில் மாட்டி விட்டேனே” என்றான் சவடால் பேர்வழி.

“பட்டால் தானே புரிகிறது” என்றான் புத்திசாலி.

அறிவால்  உணருங்கள். இல்லாவிட்டால் அனுபவம் உணர்த்திடும்!
இது போல சிந்திக்கும் எண்ணம், பேசும் சொல்லுக்கு உயிர் உண்டு. அதனால் நல்லதை சிந்திப்பது, நல்லதையே தேர்ந்தெடுத்து பேசுவதும் அவசியம்.

பேசுவது மட்டுமல்ல; எதிர்மறை எண்ணத்தை மனதில் நினைப்பதும் தவறு தான். இந்த கதையைப் படியுங்கள். அப்போது புரியும்.

வெயிலில் நீண்ட தூரம் நடந்த இளைஞன் ஒருவன் மரத்தடியில் அமர்ந்தான். “ஒதுங்க நிழல் இருக்கு. தாகம் தீர தண்ணீர் கிடைச்சால் தேவலை” என நினைத்தான். ஒரு குவளையில் தண்ணீர் வந்தது.

ஆசையுடன் குடித்தான். அந்த மரம் கேட்டதை தரும் கற்பகமரம் என்பது அவன் அறியாத விஷயம். சிறிது நேரத்தில் பசிக்கவே “தண்ணீர் போல அறுசுவை உணவு கிடைத்தால் நல்லாயிருக்குமே” என நினைத்தான். வாழை இலையில் அறுசுவை உணவு தோன்றியது. ருசித்து சாப்பிட்டான்.

உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டல்லவா? ’இந்த இடம் நம் வீடாக இருந்தால் தூங்கலாமே?’  என  நினைத்தான். படுக்கை அறையே பக்கத்தில் வந்தது. ஆனால் அதற்கு கதவு இல்லை.
’அறையை பூட்ட முடியாதே?’ என நினைத்தால் தவறில்லை.
ஆனால் அவனோ ’காடாக இருக்கிறதே! திடீரென புலி வந்து அடித்தால் என்ன செய்வது?’ என நினைத்தான். அவ்வளவு தான்! நொடிப்பொழுதில் புலி பாய்ந்து வந்து இளைஞனை துவம்சம் செய்தது.  இந்த கற்பக மரம் போல மனதிற்கும் கேட்டதை தரும் சக்தி இருக்கிறது. அதனிடம் நல்லதை மட்டும் கேட்க வேண்டும்.
எதிர்மறை எண்ணத்தை அனுமதிக்கக் கூடாது.  

சுயபுத்தி இல்லாவிட்டாலும் தவறில்லை; பெரியவர்கள் கூறும் சொல்புத்தியை கேட்டாலும் வாழ்வில் உயரலாம்.  

வீட்டில் உள்ள பெரியவர்கள் நல்ல விஷயங்களை நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பர். ஆனால் இளையவர்கள் ஏற்பதில்லை.  “எனக்குத் தெரியாதா? சும்மா நொய் நொய்னு நச்சரிப்பு” என சிடுசிடுப்பர்.

தற்காலத்தில் வாழ்க்கை இயந்திரத்தனமாக ஓடுகிறது.  ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும் முன் ’இன்று நடந்தது என்ன?’  என ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். அப்போது ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றி மறையும். அவற்றை நங்கூரமிட்டு கூர்ந்து பார்க்க வேண்டும். நல்லதைச் செய்தோமா என யோசிக்க வேண்டும்.
செய்யாவிட்டால் இனியாவது செய்வேன் என்ற உறுதி கொண்டால் வாழ்வு சுகமாகும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar