Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வள்ளிக்கணவன் பெயரைத் தினம் சொல்லடா தம்பி!
 
பக்தி கதைகள்
வள்ளிக்கணவன் பெயரைத் தினம் சொல்லடா தம்பி!

பிரம்மச்சாரி அண்ணன் தன் தம்பிக்கு கல்யாணம் செய்து வைத்த கதை தெரியுமா எனக் கேட்டார் காஞ்சி மகாசுவாமிகள். ஆர்வமுடன் அவரது முகத்தைப் பார்த்தனர் பக்தர்கள். ’உபன்யாசம், டிராமா, சினிமா, டான்ஸ் என அனைத்திலும் வள்ளி கல்யாணத்தை கேட்டும், பார்த்தும் இருப்பீர்கள். விநாயகரே மதயானை வடிவெடுத்து வள்ளியை துரத்தியதால் தான் முருகனைச் சேர்ந்தாள். ’மூத்தது கோழை; இளையது காளை’ என்பது உண்மையல்ல. மூத்தது யானை தான்; அது காளையை விட வலிமையானது என்பதை அண்ணனான விநாயகர், தம்பியின் விஷயத்தில் நிரூபித்தார். வள்ளியை எப்படி திருமணத்திற்குச் சம்மதிக்க வைப்பது என யோசித்தார் முருகன். தடை அகல விநாயகர் வழிபாடு அவசியமல்லவா? எனவே அண்ணனை பிரார்த்தித்து, இடையூறு போக்க வேண்டினார்.  

மதயானை வடிவெடுத்த விநாயகர், காட்டில்  இருந்த வள்ளியைத் துரத்த ஆரம்பித்தார். பயந்தோடிய வள்ளி, கிழவன் வேடத்தில் இருந்த முருகனைச் சரணடைந்தாள். வள்ளியின் சம்மதம் கிடைக்கப் பெற்ற பின்பு மணம்புரிந்தார். ’கைத்தல நிறைகனி’ என்னும் திருப்புகழில் ’அத்துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி, அக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே” என்ற வரியில் ’சிறுமுருகன்’ எனக் குறிப்பிடுகிறார்  அருணகிரிநாதர். ’சிறுமுருகன்’ என்கிறார் அவர். சிறுவனாக இருந்த போது சூரபத்மனை சம்ஹாரம் செய்தவர் முருகன். ஆனாலும் வாலிபனாக வளர்ந்த பின், வள்ளியை மணக்க அண்ணன் விநாயகரின் உதவியை நாடுகிறார். அண்ணனுக்குத் தம்பி எப்படியும் வயதில் குறைந்தவன் தானே? எனவே விநாயகரின் கண்ணோட்டத்தில் அவர் ’சிறு’ முருகன் தான். ஆனால் வயதால் மட்டுமல்ல. சூரனை சம்ஹாரம் செய்த வீரன், வள்ளியை எப்படி சம்மதிக்கச் செய்வது எனத் தயங்கியதால் அவன் ’சிறுமுருகன்’ எனப்பட்டான்.

அவனுக்குத் திருமணம் நடத்தி வைப்பவர் பெரிய ஆள் தானே? அதனால் விநாயகர் ’பெரும் ஆள்’ ஆகி விட்டார். அருணகிரிநாதர் திருப்புகழில் முருகனை ’பெருமாளே’  என அழைப்பது வழக்கம். ஆனால் தம் இஷ்டதெய்வமான முருகன் விரும்பிய பெண்ணை மணம் புரியச் செய்தவர் என்பதால் விநாயகரையும் ’பெரும்’ ஆளாக போற்றுகிறார்”  என்றார் மகாசுவாமிகள். ’வள்ளிக்கணவன் பெயரைத் தினம் சொல்லடா தம்பி’ என்ற பாடலை மனதிற்குள் பாடியபடி பக்தர்கள் புறப்பட்டனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar