Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மாசி மாத பவுர்ணமியும் மகம் நட்சத்திரமும்!
 
பக்தி கதைகள்
மாசி மாத பவுர்ணமியும் மகம் நட்சத்திரமும்!

மாசி மாத பவுர்ணமியும் மகம் நட்சத்திரமும் சேரும் நாளே மாசிமகம். புனிதமான இந்நாளில் கோயில்களில் தீர்த்தவாரி விழா நடக்கும். இது குறித்த செவிவழிக்கதை ஒன்று கூறப்படுகிறது. வருண பகவானுக்கு தோஷம் பிடித்ததால், யாரும் அறியாதபடி கடலுக்கடியில் மறைந்திருந்தார். அங்கேயே சிவனை வேண்டி தவமிருக்க, தோஷம் நீங்கப் பெற்ற நாளே மாசிமகம். மகிழ்ச்சியில் ஒரு வேண்டு கோள் விடுத்தார் வருணன். ’எங்கெங்கெல்லாம் நீர்நிலை காணப்படுகிறதோ அங்கெல்லாம் மாசிமகத்தன்று தீர்த்தவாரிக்காக (நீராட) சிவன் எழுந்தருள வேண்டும். அன்று நீராடுவோரின் பாவங்களை போக்கியருள வேண்டும்’  என்றார். இதனடிப்படையில் மாசிமக விழா நடக்கிறது. இந்நாளில் நீர்நிலைகளுக்குச் செல்லாவிட்டால் கவலை வேண்டாம். வீட்டில் இருந்தபடி நீராடலாம். வருண பகவானைப் பிரார்த்தித்தால் மட்டும் போதும் பாவம் நீங்கும்.

இந்நாள் குறித்து இன்னொரு கதையும் உண்டு. மீனவப்பெண்ணாக அவதரித்த பார்வதியை மணம்புரிய சிவனும் மீனவ இளைஞனாக வந்தார். வருங்கால மாமனாரின் கவனத்தை திருப்ப, திமிங்கலம் ஒன்றை அடக்கினார். அதன் பின் பார்வதிக்கு சிவனுடன் திருமணம் நடந்தது. இருவரும் கைலாயம் புறப்பட்ட போது, ”தங்களையும், என் மகளாக அவதரித்த பார்வதியையும் எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை நான் பெற வேண்டுமே...” என்று பார்வதியின் தந்தை கேட்டார். ”ஆண்டுதோறும் மாசிமகத்தன்று நாங்கள் கடலில் நீராட வருகிறோம்; நீங்கள் தரிசிக்கலாம்” என வரமளித்தார். அதன்படியே மாசிமக நீராடல் விழா நடக்கிறது. மாசி மகத்தன்று சிவன் கோயில்களில் தீர்த்தவாரி காண்பது போல, பெருமாள் கோயில்களிலும்  விழா நடக்கிறது. இதற்கும் புராண வரலாறு இருக்கிறது.   இறப்பற்ற நிலையை அடைவதற்காக தேவர்கள் அமுதம் பெற விரும்பினர்.  பாற்கடலை கடைய காமதேனு, கற்பக மரம் என அபூர்வ வஸ்துக்கள் வெளிவந்தன. மகாலட்சுமியும் அதில் தோன்றினாள். அவளின் அழகில் மயங்கிய மகாவிஷ்ணு அவளை மணம் புரிந்தார். கடல்அரசனான சமுத்திரராஜனின் மருமகன் ஆனார் மகாவிஷ்ணு.

மகாலட்சுமி வைகுண்டம் புறப்பட்ட போது ’மகளை எங்கே எப்போது காண்பேன்?’ என்ற வருத்தம் சமுத்திரராஜனுக்கு எழுந்தது. இதையறிந்த விஷ்ணு,”கவலை வேண்டாம். ஆண்டுக்கு ஒரு முறை மாசிமகத்தன்று கடற்கரையில் லட்சுமியுடன்  எழுந்தருளி நீராடுவேன்” எனத் தெரிவித்தார். மாமனாருக்கு அளித்த வாக்குப்படி, மாசிமகத்தன்று மகாலட்சுமியுடன் எழுந்தருள்கிறார். மாசிமகம் என்றாலே நினைவுக்கு வரும் திருத்தலம் கும்பகோணம். மகத்தன்று கும்பகோணத்தில் காவிரி, பொற்றாமரைக்குளம், மகாமகக்குளத்தில் நீராடுவர். மகாமகக் குளத்தில் நீராடினால் தொலையாத பாவம் கூட தொலையும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar