Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனமே விழித்தெழு
 
பக்தி கதைகள்
மனமே விழித்தெழு

யாரும் எதிர்பாராத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது பீகார் மாநிலத்தில் இருக்கும் கெலவுர் (எஞுடடூச்தணூ) என்ற கிராமத்தில்! தஷ்ரத் மான்ஜி என்பவர் இந்த கிராமத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்த போது வீட்டை விட்டு வெளியேறிய அவர் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்தார். பல ஆண்டுகள் கழித்து கிராமத்திற்கு வந்தவர், பகுனிதேவி என்ற பெண்ணை மணந்தார்.

சந்தோஷமாக வாழ்ந்த மான்ஜியின் வாழ்வில் விதி விளையாடியது. பகுனிதேவி விபத்தில் சிக்கியதால் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் 55 கி.மீ., துாரத்திலுள்ள பக்கத்து நகரத்தில் இருந்து மருத்துவரை அழைத்து வருவதற்கு ஐந்து மணிநேரம் ஆனது.

ஏனெனில், இந்த கிராமத்திற்கும் பக்கத்து நகரத்துக்கும் இடையில்  மலை ஒன்று இருக்கிறது. மலையைச் சுற்றிக் கொண்டு தான் கிராமத்திற்கு வர வேண்டும். சரியான நேரத்தில் மருத்துவர் வர முடியாததால் பகுனி தேவியை காப்பாற்ற முடியவில்லை.

சோகமான நேரத்திலும் மான்ஜியின் மனதில் மின்னல் போல ஒரு எண்ணம் தோன்றியது.  மலை குறுக்கிட்டதால் தானே மருத்துவர் சரியான நேரத்திற்கு வரவில்லை? மலையைக் குடைந்து கிராமத்தையும், நகரத்தையும் இணைத்தால் மனைவிக்கு நேர்ந்த கதி யாருக்கும் ஏற்படாதே? என சிந்தித்தார்.

ஆனால் மான்ஜி அரசியல் பிரமுகரோ, எம்.எல்.ஏ.வோ, எம்.பி.யோ கிடையாது. தன் கையே தனக்கு உதவி என்ற தாரக மந்திரத்துடன் சுத்தியல், உளியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். தனியாளாக மலையை உடைக்க ஆரம்பித்தார்.
வாரங்கள்,  மாதங்கள் என காலம் ஓடியது. மனைவி இறந்த துக்கத்தால் பைத்தியம் பிடித்து விட்டதாக ஊரார் கேலி செய்தனர்.   

மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரால் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார்
என்ற பாடலுக்கு விளக்கமாக இருந்தார் தஷ்ரத் மான்ஜி. தான் எடுத்துக் கொண்ட பணியில் தொடர்ந்து 22 ஆண்டுகள் ஈடுபட்டார். விளைவு? 360 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட பாதையை உருவாக்கி கிராமத்தை நகரத்தோடு இணைத்தார்.
இனி யாரும் நகரத்தை அடைய 55 கி.மீ., பயணிக்க வேண்டாம்.
மருத்துவர் வர நேரம் ஆனதால் இனி யாரும் இறக்கவும் வேண்டாம்!  பாட்டுக்கொரு புலவர் பாரதியார் மட்டும் இருந்தால் ’தனி மனிதருக்கு மருத்துவம் இல்லையெனில் மலையைக் குடைந்திடுவேன்’ என்ற கவிதை எழுதியிருப்பார்!
புராணங்களும், இதிகாசங்களும் கட்டுக்கதைகளா... அல்லது அவற்றில் கூறப்படும் வாழ்க்கைப்பாடத்தை நாம் புரிந்து கொள்ள வில்லையா? ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  நம் பெரியோர்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்?
இப்போது உள்ள வசதிகளில் நூறில் ஒரு பங்கு கூட அவர்களுக்கு இருக்கவில்லை. கம்ப்யூட்டர், இயந்திரங்கள் இல்லாத காலத்தில் எப்படி ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் பாடல்கள் கொண்ட மகாபாரதத்தை ஒரு மனிதனால் எழுத முடிந்தது?

அவர்களுக்கு இருந்த திடமான தெளிந்த மனம் நமக்கு இல்லை. இப்படித் தான் வாழ வேண்டும் என அவர்களால் வாழ முடிந்தது. ஐம்புலன்களை அடக்கி தங்களின் முழு சக்தியை வெளிப்படுத்திய நம் முன்னோர்கள் அரிய செயல்களில் ஈடுபட்டனர்.

ஆனால் இன்று கயிறு அறுந்த பட்டம் போல திக்கு தெரியாமல் பலர் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய செயல்கள் அறிவு சார்ந்ததாக இருக்க வேண்டும். வெறும் உணர்ச்சிக்கு அடிமையாகாமல், எது நல்லது எது கெட்டது என யோசித்து செயல்பட வேண்டும். அதற்கு மூளை, மனம் மற்றும் புத்தி எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்த உவமை ஒன்று கடோபநிஷதத்தில் இடம் பெற்றுள்ளது.  

திருப்பதி மலைக்கு நீங்கள் போயிருப்பீர்கள். மலைப்பாதையில் பயணிக்கும் போது எட்டிப் பார்த்தால் கிடுகிடு பாதாளம் தெரியும். ஆனால்  ஓட்டுனர் சாதாரணமாக பேருந்தை இயக்கிச் செல்வார். இப்போது அதே மலைப்பாதையில் ஐந்து குதிரைகள் பூட்டிய தேர் ஒன்று வேகமாகச் செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் குதிரைகளை எங்கு இடது பக்கம் திரும்ப வேண்டுமோ அங்கு இடது பக்கமும், எங்கு வலது பக்கம் திரும்ப வேண்டுமோ அங்கு வலது பக்கமும், எங்கு வேகத்தைக் குறைக்க வேண்டுமோ அங்கு குறைத்தும், எங்கு வேகத்தைக் கூட்டணுமா என்று அங்கு கூட்டியும் பாதுகாப்பாகச் செல்வதாக கற்பனை செய்யுங்கள்.   

இது எப்படி என நீங்கள் ஆச்சரியத்தோடு பார்க்கையில், கடிவாளம் ஒன்று குதிரைகளை இடது பக்கமும் வலது பக்கமும் திருப்புவதையும், அதற்கு கட்டுப்பட்டு அவை ஓடுவதையும் பார்க்கிறீர்கள். கடிவாளம் எப்படி குதிரைகளைக் கட்டுப்படுத்துகிறது என பார்க்கும் போது, தேரோட்டி ஒருவர் துணிச்சலுடன் குதிரைகளை இயக்குவதை பார்க்கிறீர்கள்!
இந்த கற்பனையை நம்மோடு அப்படியே பொருத்திப் பாருங்கள்.

அந்த குதிரைகள் தான் நம்முடைய கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்னும் ஐம்புலன்கள்! அவற்றை கட்டுப்படுத்தும் கடிவாளமே மனம். கடிவாளத்தைப் பிடித்து குதிரைகளுக்குக் கட்டளைக் கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் புத்தி. அந்தத் தேர் தான் நீங்கள்! ஏற்றமும், தாழ்வும் கொண்ட மலைப்பாதை தான் நாம் பயணிக்கும் வாழ்க்கை!

இப்போது தெரிகிறதா  புத்தி, மனம் மற்றும் மூளைக்கு இடையே உள்ள தொடர்பு?

ஆக, புத்தி மூலம் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தினால் குறிக்கோளை யாரும் எளிதாக அடையலாம்.

நாம் சந்திக்கும் சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற  சிந்திக்க வைப்பது தான் புத்தி. அதுவே நம்முடைய சக்தி.

உலகத்தில் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. பலபேர் ஆசிரியர் பணியில் ஈடுபடுகிறார்கள். அதில் ஒருவரால் மட்டும் எப்படி இந்தியாவின் ஜனாதிபதியாகவும் வர முடிந்தது? எத்தனையோ ஜனாதிபதிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால் டாக்டர் அப்துல் கலாம் மட்டும் இளைஞர்களின் மனதில் இன்றும் வாழ்கிறாரே எப்படி?
நம்மை யாராவது கேலி பேசினால் மனம் உடைகிறோம் (அ) கோபப்படுகிறோம். ஆனால் ஒரு மருத்துவரைப் பார்த்து  உறவினர்கள் ’எதையும் சாதிக்க முடியாதவன்’ என கேலி பேசினர். ஆனால் அதை சவாலாக ஏற்ற அவர் ஒரு முக்கியமான துறையைத் தேர்ந்தெடுத்தார். இன்று அதில் சாதனை படைக்கிறார் அவர்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar