Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குரு சிஷ்யன்
 
பக்தி கதைகள்
குரு சிஷ்யன்

வேடன் ஒருவனுக்கு, "மற்றவர்களைப் போல தனக்கு படிப்பறிவு இல்லை; கடவுளைப் பற்றி அறியும் அறிவு இல்லை; காட்டிலுள்ள முனிவர்களைப் போல மனம் ஒன்றி வழிபாடு செய்ய முடியவில்லை என பலவிதமான ஏக்கங்கள் மனதில் ஏற்பட்டது. அவனுக்கு திருமண வாழ்வில் நாட்டமில்லை. உலகத்தின் பிற சுகங்களும் பிடிக்கவில்லை. மதனின் ஒரு ஓரத்தில், "எப்படியும் ஈசனைப் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. ஒருமுறை துறவி ஒருவரைக் கண்டான். அந்த துறவிக்கு ஆசை அதிகம். அவரது உள்ளத்தில் அருள் நாட்டமே இல்லை. அவரை வேடன் பணிந்து, ""குருவே, நான் வேடனாய் பிறந்தும் மாமிசம் உண்பதில்லை. சிவனருளை எண்ணி எண்ணி தூக்கம் வருவதில்லை. அருள் மார்க்கத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளேன். எனக்குநல்வழி காட்டுங்கள்! என்று வேண்டினான். வேடனின் வேண்டு தலைக் கேட்ட துறவி, ""கல்வியறிவில்லாத உனக்கு உபதேசம் செய்து என்ன பலன்? காட்டில் கிடைக்கின்ற தேன், பலா, தினைமாவு, மாம்பழங்கள், கனி வகைகளை கொண்டு வந்து எனக்குக் கொடு! உனக்கு உபதேசம் செய்வது பற்றி பிறகு பார்க்கலாம் என்று சொன்னார்.

வேடன் காட்டிற்குச் சென்று குருநாதர் கேட்டவற்றை தட்சிணையாக எடுத்துக்கொண்டு மடத்தை வந்தடைந்தான். குருவினை வணங்கி, ""ஐயனே! தாங்கள் கேட்டதைக் கொண்டு வந்து இருக்கிறேன்.  பொருள்களை ஏற்று, எனக்கு நல்வழி காட்டி அருள் செய்யுங்கள்! என்று வேண்டினான். ""ஏ, வேடனே! "சிவாயநம என்று தினமும் ஜபம் செய். உனக்கு விரைவில் சிவபெருமான் காட்சி தருவார். ஆனால், ஒரு நிபந்தனை, அவ்வப்போது எனக்குக் காட்டில் கிடைக்கும் பழங்களைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் உனக்கு ஈசனருள் கிடைக்காது என்று சொல்லி அனுப்பினார். காட்டிற்குத் திரும்பிய வேடன், மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தான். தூக்கத்திலும் அவன் "சிவாயநம என்றே உளறுவான். தனக்கு உபதேசித்த குருவின்மீது அலாதி நம்பிக்கை கொண்டிருந்தான்.

ஒரு நாள் சிவன் அவனுக்கு ஆசியளிப்பது போல கனவு கண்டான். அன்று முதல் அவனுக்கு தெளிந்த ஞானம் உண்டாயிற்று. பந்தபாசங்களை விட்டான். காண்பதெல்லாம் சிவ காட்சியாகவே தென்பட்டது. தன் குருநாதரான துறவியைக் காணச் சென்றான். தன் சிவானுபவத்தை குருவிடம் சொன்னான். வேடனின் வார்த்தைகள் அவ்வளவும் உண்மை என்பதை அவனது முகத்தில் தெய்வீக ஒளிவீசுவதைக் கண்டு துறவி உணர்ந்தார். உண்மை ஞானம், உள்ளம் சார்ந்தது என்ற உண்மையைத் துறவி உணர்ந்தார். ""குருவாக இருந்து பலகாலம் ஆசாபாசங்களில் சிக்கிக்கிடந்த அற்பனாகிய நான் இனிமேல் குருவல்ல! என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டு ஞானம் பெற்ற நீதான் எனக்கு குரு! என்னை சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேடனின் கால்களில் விழுந்து, தன்னைப் பற்றிய உண்மையையும் கூறி மன்னிப்புக் கேட்டார் துறவி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar