Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனமே விழித்தெழு
 
பக்தி கதைகள்
மனமே விழித்தெழு

அமிலத்தின் தன்மையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எந்த பொருளின் மீது அமிலம் பட்டாலும் அது அழியும். துணி மீது பட்டால் அது பாழாகும். நம் தோலின் மீது பட்டால் பாதிப்பு ஏற்படும். அதுபோலத் தான் கோபமும். அது யாரைச் சேர்கிறதோ அவர்கள் சிரமத்திற்கு ஆளாவர்.

இந்தியா மீது  போர் தொடுத்த மாவீரன் அலெக்சாண்டர்  தாய்நாடான கிரேக்கத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கிரேக்க மக்கள் கேட்ட விஷயம் ஒன்று நினைவுக்கு வந்தது.

“மன்னா! கிரேக்கம் திரும்பும் போது இந்தியாவிலுள்ள யோகி யாராவது ஒருவரை அழைத்து வாருங்கள்! நாங்கள் அவரிடம் ஆசி பெற வேண்டும்”.  உடனே யோகிகள் இருப்பிடம் தேடி காட்டிற்குள் நுழைந்தார். பிரகாசமான முகத்துடன் யோகி ஒருவர் தியானத்தில் இருப்பதைக் கண்டார்.  அவரிடம்,“யோகி அவர்களே! எங்கள் நாட்டிற்கு வாருங்கள். நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் தருகிறேன்” என்றார். ஆனால் யோகியோ, ’நீ யார்? நான் ஏன் உன்னுடன் வர வேண்டும்? எனக்கு எதுவும் வேண்டாம்’ என்றார். அலெக்சாண்டருக்கு வந்ததே கோபம். கண்கள் சிவக்க வாளை சுழற்றியபடி,“அற்பனே! யாரோடு பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசுகிறாய். நான் தான் மாவீரன் அலெக்சாண்டர். என்னுடைய கட்டளையை ஏற்காவிட்டால் கொன்று விடுவேன்” எனக் கத்தினார்.

யோகியோ பொறுமையுடன்,“என் உடலை வேண்டுமானால் வாளால் வெட்டலாம். ஆனால் உடம்பு நானல்ல. நான் வேறு, எனது உடம்பு வேறு. உன்னைக் குறிப்பிடும் போது’நான் தான் மாவீரன் அலெக்சாண்டர்’ என்று சொன்னாய். ஆனால் நான் சொல்கிறேன் நீ யார் என்று...’என்னுடைய அடிமைக்கு நீ அடிமை” என்றார். பொருள் புரியாமல் விழித்தார் அலெக்சாண்டர். அதற்கு யோகி,’ நீ போரில் பகைவர்களை வென்றிருக்கலாம். ஆனால் நான் கோபத்தை வென்றவன் என்பதால் கோபம் எனக்கு அடிமை. நீ கோபத்திற்கு அடிமை, அதுவே உன்னை இப்படி பேச வைக்கிறது. எனவே என் அடிமையான கோபத்திற்கு நீ அடிமை’ என்றார். அதைக் கேட்ட அலெக்சாண்டர்  தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

கோபப்படும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் உணர வேண்டும். துக்கத்தில் கண்ணீர் வருகிறது, உணவைப் பார்த்தால் எச்சில் சுரக்கிறது. அதே போல கோபத்தால் உடலில் ’அட்ரினலின்’ (அஞீணூடிணச்டூடிண)  திரவம் சுரக்கிறது. இதனால் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகமாகிறது, வியர்க்கிறது, கண்கள் விரிவடைகிறது,  தோல்களுக்கு அதிக ரத்தம் செல்கிறது.  இதுவே கோபத்தில் நம்மைத் தயார்படுத்த மூளை எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அட்ரினலின் சுரக்கும் போது’நானிபைன்ப்ரின்’  (ணணிணஞுணீடிணஞுணீடணூடிணஞு) என்னும் கெமிக்கலும் சுரக்கிறது. இது அதிகமாகச் சுரந்தால் ரத்தநாளங்கள் தடிக்கும். இதயத்தின் தோல் சுருங்கும். நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கும். இதனால் இதயம் பாதிக்கப்பட்டு உடல்நலம் கெடும்.  உடல் கெடுவது ஒரு பக்கம் இருக்கட்டும்.
மனநலம்? மனித நேயம்? நட்பு? உறவுகளின் பாதிப்பு? கோபத்தின் தீமை குறித்து பகவத் கீதையில் இரு ஸ்லோகங்கள் உள்ளன.  

“த்யாயதோ விஷயான்பும்ஸ:
ஸங்கஸ்தேஷூபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோபிஜாயதே (2.62)

பொருள்: நாம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். அதன் மீது மனம் பற்று கொள்கிறது. அந்தப் பற்று ஆசையாக மாறுகிறது. ஆசை தீராவிட்டால் கோபத்தை உண்டாக்குகிறது.

க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ருதிவிப்ரமஹ:
ஸ்ம்ருதிப்ரம்சாத்புத்தி நாசோ புத்திநாசாத்ப்ரணச்யதி (2.63)

பொருள்: கோபம் காரணமாக மனதில் குழப்பம் வருகிறது. குழப்பத்தால் நினைவு தடுமாறுகிறது. இதனால் நமது புத்தி நாசமாகிறது. முடிவில் மனிதன் அழிகிறான்.
ராமாயணமும் மகாபாரதமும் நம் வாழ்வைக் கட்டுப்படுத்த வந்த கதை.  பலசாலியான ராவணன் எப்படி அழிந்தான் என்பதை கீதையின் ஸ்லோகங்கள் எடுத்துச் சொல்கின்றன.

’சீதை அழகான பெண்’ என்று ராவணனின் தங்கை சூர்ப்பனகை சொல்கிறாள். உடனே சீதையை அடைய வேண்டும் என்ற ஆசை ராவணனுக்கு உண்டாகிறது.  நேரம் பார்த்து சீதையை ஏமாற்றி இலங்கைக்கு கடத்துகிறான். தன்னுடைய ஆசைக்கு இணங்க மறுக்கும் சீதை மீது கோபம் வருகிறது.  ராட்சசிகள் மூலம் பயமுறுத்தவும், பணியாவிட்டால் கொல்லவும் கட்டளையிடுகிறான்.  

கோபம் அவனது புத்தியை மழுங்கச் செய்கிறது. மனைவி மண்டோதரியும்,  தம்பிகளான கும்பகர்ணன், விபீஷணன் எடுத்துச் சொல்லியும் ஏற்கவில்லை. அனுமன் தூது வந்த போது, கோபமடைந்த ராவணன் அவன் வாலிற்கு தீ வைக்கிறான். தூதுவனை அவமதிக்க கூடாது என்பதை அவன் பொருட்படுத்தவில்லை. புத்தி நாசமடைய இறுதியில் அழிகிறான்.

சரி... கோபமே கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். கோபம், பசி, தூக்கம், மகிழ்ச்சி, துக்கம், எரிச்சல் போன்றவை இயற்கை உணர்வுகள். ஒழிக்க முடியாது. ஆனால் தற்காலிகமாக வெல்லலாம். பசியே இல்லாமல் போனால் உடல்நலன் பாதிக்கும் அல்லவா? அது போலவே கோபமும். அழிக்க முயல்வதை விட, அதை நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கச் செய்ய வேண்டும். அதற்கான உத்திகளைப் பார்ப்போம்.

உங்களுக்கு அடிக்கடி கோபம் வருகிறது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மேலாளர் தன் உதவியாளரோடு நட்புடன் பேசிக் கொண்டிருந்தார்.’என்னிடம் என்ன குறை?’ எனக் கேட்டார் மேலாளர். தயங்கியபடி’சார், உங்களுக்கு சில நேரத்தில் கோபம் வரும்’  என்றார் உதவியாளர். ’எனக்கா, கோபமா, கிடையவே கிடையாது’ என்றார் மேலாளர். உதவியாளர் மீண்டும் அதையே கூறினார். மேலாளர் சத்தமாக’யார் சொன்னது எனக்கு கோபம் வரும் என்று’ என்று கண்களை உருட்டினார்.  நட்புடன் தானே பேசுகிறோம் என்ற உரிமையுடன்,’சார், பல நேரங்களில் இப்படி கோபப்படுகிறாரே... உடல்நலம் கெடுமே என்று நான் நினைப்பதுண்டு. நீங்களே கேட்டதால் தான் சொல்கிறேன்! நம்புங்கள்’ என்றார். அவ்வளவு தான். மேலாளர்’ திரும்ப திரும்ப சொல்கிறேன், எனக்கு கோபம் வராது என்று.... ஆனால் நீ என்னையே குறை சொல்கிறாய்... இது உனக்கு நல்லதல்ல!’  என ஆவேசம் அடைந்தார்.   

பிறகு நமக்கு ஏன் வம்பு என உதவியாளர் நழுவினார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar