Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குடும்பம் அழைக்கிறது!
 
பக்தி கதைகள்
குடும்பம் அழைக்கிறது!

கண்ணனை ராதை கேட்டாள்: ""கண்ணா! நிறையச் செல்வம் சேர்கிறது சூருக்கு.  செல்வத்தால் சூர் மனம் மாறுவானா?”

""அவன் மனம் மாறுகிறானா இல்லையா என்பதை அதோ வெளியூரிலிருந்து அவனைத்  தேடி வருகிறார்களே சிலர், அவர்களுக்கு அவன் சொல்லும் பதிலிலிருந்து நீ புரிந் துகொள்ளலாம்!”

ராதை, சூர்தாஸின் இல்லத்து வாயிலை உற்றுப் பார்த்தாள். சூர்தாஸைத் தேடி  அவனுடைய தாயும் தந்தையும் மூன்று சகோதரர்களும் வந்து கொண்டிருந்தார்கள்!

சூர்தாஸை வெறுத்து ஒதுக்கிய இவர்கள் எதற்கு இங்கே இப்போது வருகிறார்கள் என்று  திகைத்தாள் ராதை. தொடர்ந்து நடப்பதை உற்று கவனிக்கலானாள்.

தான் தங்கியிருந்த ஆலமரத்தடியிலேயே செல்வந்தர் கட்டிக்கொடுத்த இல்லத்தின்  வாயிலில் அமர்ந்து இளைஞர் சூர்தாஸ் கண்ணனைப் பற்றி உருக உருகப்  பாடிக்கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கானோர் அவர் குரலிலும் பாடலின் கருத்திலும்  மனம் பறிகொடுத்து அமர்ந்திருந்தார்கள்.

கண்ணன் வெண்ணெய் திருடியதாகத் திரும்பத் திரும்பச் சொல்கிறாள் யசோதை.  கண்ணன் சொல்லும் பொய்யை நம்ப மறுக்கிறாள். என்ன செய்வது? யோசிக்கிறான்  கண்ணன். அவளை ஏதாவது ஒருவகையில் வசப்படுத்த வேண்டும்.

அழுதுகொண்டே அவளிடம் சொல்கிறான்: ""நான் உன் பிள்ளை இல்லை போலிரு க்கிறது. எங்கிருந்தோ யாரோ உன்னிடம் என்னைக் கொண்டுவந்து போட்டு விட்டுப் போய்விட்டார்களோ என்னவோ? அதனால்தான் கொஞ்சம் வெண்ணெய் குறைந் ததற்காக இத்தனை கடுமையாக இருக்கிறாய். நீ பெற்ற பிள்ளையாக இருந்தால் ஒரு சின்னக் குழந்தையான என்னிடம் இத்தனை கடுமை காட்டுவாயா?”

கண்ணனின் இந்த வார்த்தைகளை யசோதையால் தாங்க முடியவில்லை. கண்ணனைக்  கட்டி அணைத்துக் கொள்கிறாள். ""நீ என் பிள்ளைதான் கண்ணா, என் பிள்ளையேதான்.  உன்னிடம் கோபிப்பதுபோல நடித்தேன். அவ்வளவுதான். நீ வெண்ணெய் திருடவேயி ல்லை ” என்று சொல்லி அழுகிறாள்.

சந்தடி சாக்கில், ""ஆமாம், நான்தான் வெண்ணெய் திருடினேன். அதற்கென்ன
இப்போது?” என்று சொல்லியவாறே, கண்ணன் தானும் அவளைக் கட்டியணைத்து தன் தாயின் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறான்!

குழந்தைகளைக் கொஞ்சுவது, மழலை மொழிகளைக் கேட்பது இதெல்லாம் ஒரு தனி  வகை ஆனந்தம் என்று சொல்லி அதற்கு, சுதானந்தம் என்று பெயர் கொடுத்துப் போற்றுகிறது சம்ஸ்க்ருத இலக்கியம். அவரவர் குழந்தைகளின் மழலைச் சொல்  குழலைவிட யாழை விட இனியது என்கிறார் வள்ளுவர். குழலூதும் கண்ணனின் குரல்,  குழலைவிட இனிமையாக இருப்பதில் என்ன வியப்பு? யசோதை அந்த மழலைக் குர லில் மயங்கி அவன் வெண்ணெய் திருடிய சம்பவத்தையே மறந்து போகிறாள்.

கன்னையா, தைநஹி மக்கான் காயோ!
லல்லா மோர் தைநஹி மக்கான் காயோ!

நீ வெண்ணெயைத் திருடவில்லை கண்ணா, திருடவேயில்லை! என்று யசோதை  அழுதுகொண்டே கண்ணனைக் கட்டியணைத்துக்கொண்டு சொல்லும் வரிகளைப்  பாடும்போது சூர்தாஸ் விழிகளிலும் கண்ணீர் வழிகிறது. அவர்
ஒரு கணத்தில் யசோதையாகவே மாறிவிட்டார்.

கூடியிருந்த கூட்டம் முழுவதும் விம்மி விம்மி அழுதது. அங்கிருந்த தாய்மார்கள்  கண்ணீர் வழியும் கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டார்கள்.

பக்திப் பரவசத்தின் அமைதி படர்ந்திருந்த அந்த இடைவேளைத் தருணத்தில்,  கூட்டத்தை விலக்கிக் கொண்டு சூர்தாஸை நோக்கி நடந்தார்கள் அவரின் தந்தையும்  தாயும் மூன்று சகோதரர்களும்.

செல்வ வளத்தோடு வீடு கட்டிக்கொண்டு கண்ணில்லாத ஒரு பாடகர் அந்த கிராமத்தில் வாழ்ந்து வருவதாகக் கேள்விப் பட்டு, அது சூராக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர்கள் அங்கு வந்திருந்தார்கள்.

அது சூராக இருந்தால் மறுபடி அவனை வீட்டுக்கே அழைத்துப்போய்விடலாம்..  
அங்கிருந்து அவன் பாடினாலும் இத்தனை பணம் வருமல்லவா அவன் சம்பாதிக்கும்  பணம் அவனது பெற்றோர் என்ற வகையில் அவர்களுக்கு உரியதுதானே? இதுதான் அவர்கள் மனத்திலிருந்த திட்டம்.

இளம் குழந்தையாக இருந்த சூர் இப்போது வாலிப வயதில் இருந்தாலும் அவர்கள் சுலபமாக அடையாளம் கண்டுகொண்டார்கள்.

""சூர்! நீ இங்கேயா இருக்கிறாய்? உன்னை எங்கெல்லாம் தேடினோம்!” என்றவாறே சூர்தாஸின் தாய் நாடக பாணியில் ஓடிப்போய் அவரைக் கட்டிக் கொண்டாள். சூர்தாஸ்  மெல்ல அவள் கைகளை விலக்கிவிட்டார்.

அவர் முகத்தில் ஒரு விரக்திச் சிரிப்பு இழையோடியது. திடீரென்று அரங்கேறும் இந்த  நாடகத்தை மக்கள் கூட்டம் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தது.

""சூர்! என்னைத் தெரியவில்லையா? உன்னைப் பெற்ற தாயை நீ மறந்து போகலாமா?  இதோ உன் அப்பா வந்திருக்கிறார். உன் அண்ணன்கள் மூவரும் வந்திருக்கிறார்கள்.  குடும்பத்தை விட்டு எங்கு போனாய் என்று ஊரெல்லாம் தேடி பலப்பல வருஷ ங்களுக்குப் பிறகு இப்போதுதான் உன்னைக் கண்டுபிடித்தோம். எங்களுடன் வந்துவிடு  சூர்! நீ உன் குடும்பத்தோடு ஆனந்தமாக இருக்கலாம்.” சூர்தாஸ் எதுவும் பேசாமல்  அமைதி காத்தார்.

அடுத்து, சூரின் தந்தை பேசலானார்: ""உனக்கு நம் வீட்டுத் திண்ணையிலேயே இடம்  இருக்கிறது. நீ அங்கிருந்து கொண்டே இந்தப் பாட்டையெல்லாம் பாடலாம். அங்கும் ஏராளமான வழிப்போக்கர்கள் வருவார்கள். நீ அங்கிருந்தவாறும் சம்பாதிக்கலாம். நாம்  ஒரு பெரிய வீடாகக் கட்டிக்கொள்வோம். உன் சம்பாத்தியம் இருக்கவே இருக்கிறது.  எல்லோரும் ஆனந்தமாக வாழ்வோம். எனக்கு வயதாகிவிட்டது. என்னால் இனியும் வேலை பார்க்க இயலாது. உன் அண்ணன்கள் மூவரும் சோம்பேறிகள். அவர்கள் எந்த  வேலைக்கும் போவதில்லை. நீ எங்களுடன் வந்துவிடு!”

சூர்தாஸ் என்ன பதில் சொல்லப்போகிறார்? அவருடைய குடும்பத்தினர் இத்தனை காலத்துக்குப் பிறகு அவரை வந்து அழைக்கிறார்களே? அவர் தங்கள் கிராமத்தை  விட்டுப்போய்விடுவாரா? கூட்டம் கேள்விக்குறியோடு சூர்தாஸின் பதிலைக் கேட்கக்  காத்திருந்தது.

ராதாம்மா நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது.  பிள்ளையில்லாத தனக்குப்  பிள்ளையாக இறைவன் அனுப்பிய செல்வம் சூர்தாஸ். இந்தச் செல்வம் பறிபோய் விடுமா? வேண்டுமானால் என பிள்ளை சூர் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் அவன்  குடும்பத்தினர் எடுத்துக்கொள்ளட்டும். என் மகன் சூரை மட்டும் என்னிடம் கொடுத்து  விடட்டும். கண்ணா! கொடுத்த பிள்ளை வரத்தைப் பறித்துக்கொண்டு விடாதே!

சூர்தாஸ் தொண்டையைச் செருமிக்கொண்டார். ""நான் கொஞ்ச நேரம் பேச விரும்புகி றேன். நான் பாடினால் கேட்கிறீர்களே? என் பேச்சையும் எல்லோரும் அமைதியாகக் கேளுங்கள்!” என விண்ணப்பித்துக் கொண்டார். பின் பேசலானார்: ""கடவுள் ஏன் ஊனமுற்ற குழந்தையைப் படைக்கிறார்? அந்தக் குழந்தையின் பெற்றோர் குழந்தையை  நன்கு பரமாரித்து வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான். பெற்றோரின் முன்வினை  இந்தக் குழந்தையைப் பாசம் செலுத்தி வளர்ப்பதால் கழியட்டும் என்ற கருணையி ல்தான். ஊனமுற்ற குழந்தையைப் புறக்கணிக்கும் பெற்றோர் இறைவன் விருப்பத்தை  நிறைவேற்றத் தவறுபவர்களே. அவர்களை இறைவன் மன்னிப்பானா?

இந்தக் குழந்தைக்குப் பதிலாக பிறக்கும்போதே அந்தப் பெற்றோர் ஊனமுடன் பிறந்தி ருந்தால் என்ன செய்வது? ஒரு குழந்தை தான் விரும்பியா ஊனத்துடன் பிறக்கிறது?  இதில் அந்தக் குழந்தையின் பிசகு என்ன? இதை நாம் சிந்திப்பதில்லை.

என் கிராமத்து மக்களே! ஊனமுற்ற குழந்தைகள் கடவுளின் வடிவங்கள் என்று நினையு ங்கள். அவர்கள் மேல் கூடுதலான பாசம் செலுத்துங்கள். கைப்பிடியில்லாத கூஜாவை  இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்குவது மாதிரி, அத்தகைய குழந்தைகள் மேல்  சமுதாயம் இரண்டு மடங்கு அக்கறை காட்டவேண்டும். என் கண்ணன் அதைத்தான்  எதிர்பார்க்கிறான்.”

சூர்தாஸ் சிறிது அமைதிக்குப் பின் விரக்தித் தொனியில் மேலும் பேசலானார்: ""என்  குடும்பத் தாரால் நான் கண்ணில்லாதவன் என்ற ஒரே காரணத்தால்
புறக்கணிக்கப்பட்டேன். வீட்டை விட்டு வெளியே செல்ல நான் அனுமதிக்கப் படவில்லை. ஒரு தங்க நாணயம் காணாமல் போயிற்று. நான் கண்ணில்லா திருந்தும்  கண்ணன் அருளால் அதைக் கண்டுபிடித்துக் கொடுத்தேன். அப்படிக் கண்டுபிடித்துக்  கொடுத்தால் நான் வெளியே செல்ல பெற்றோர் அனுமதிப்பார்கள் என நம்பினேன்.  அந்த நம்பிக்கையிலும் மண் விழுந்தது. நான் தொடர்ந்து வீட்டுச் சிறையிலேயே இருக்க  நேர்ந்தது. என் தாய், தந்தை, சகோதரர்கள் அனைவராலும் நான் வெறுக்கப்பட்டேன்.

ஒரு நாள் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறினேன். ரத்த பந்தமுள்ள  குடும்பத்தாரே வெறுத்ததால் வேறு யார் என்னை நேசிப்பார் என அஞ்சியிருந்தேன். கண்ணன் என்னை இங்கு கொண்டு சேர்த்தான். இங்கு தான் பாசம் என்றால் என்ன  என்பதை அனுபவிக்கத் தொடங்கினேன். இதெல்லாம் பழங்கதை. அந்தப் பழைய  வெறுப்பெல்லாம் என் மனத்திலிருந்து முற்றிலுமாக நீங்கிவிட்டது. இதோ இப்போது யாரிடமிருந்து நான் விலகி வந்தேனோ அவர்களே மறுபடி அவர்களோடு வந்து  வாழுமாறு வற்புறுத்துகிறார்கள். நான் என் முடிவைச் சொல்ல வேண்டிய தருணம் இது.” சற்றே நிறுத்திய சூர்தாஸ் தெளிவான குரலில் அறிவித்தார்: ""நான் என் குடும்பத்தாரோடு  இருப்பதையே விரும்புகிறேன்!” கிராமத்து மக்கள் திகைத்தார்கள். ராதாம்மா விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar