Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இவரல்லவா நல்லாசிரியர்
 
பக்தி கதைகள்
இவரல்லவா நல்லாசிரியர்

இளைஞர் ஒருவர் தன் பள்ளிக்கூட ஆசிரியரை ஒருநாள் சந்தித்தார். அப்போது அவர், என்னைத் தெரிகிறதா?” எனக் கேட்டார். ‘எனக்கு நினைவு இல்லை நீங்களே... யார் எனச் சொல்லுங்கள்” என்றார்.

ஐயா! நான் உங்களின் முன்னாள் மாணவன்” என்றார். அதற்கு ஆசிரியர் மகிழ்ச்சி! என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டார்.  ‘நான் ஆசிரியராக இருக்கிறேன்”  என்றார் இளைஞர்.

உங்களைத் தூண்டியது யார்?”

உங்களின் தாக்கத்தினால் தான் நானும் ஆசிரியர் தொழிலில் உள்ளேன்”

எப்படி தாக்கம் ஏற்பட்டது?”

அதற்கு, நான் ஒரு கதை சொல்லட்டுமா?” என ஆரம்பித்தார் இளைஞர்.
ஒருநாள் சக மாணவர் ஒருவர் விலையுயர்ந்த கடிகாரம் அணிந்து பள்ளிக்கு வந்தார். நான் அதை திருடினேன். கடிகாரம் காணாததால் அந்த மாணவர் புகார் செய்தார். கடிகாரத்தை யார் எடுத்து இருந்தாலும் திரும்பக் கொடுங்கள்” என அறிவித்தார். நான் எப்படி திருப்பித் தருவது என மலைத்தேன்.

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார்.  எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிக அவமானமாக இருந்தது. அப்போது, மாணவர்களே கண்ணை மூடிய படி வரிசையாக நில்லுங்கள்” என கட்டளையிட்டார்.
ஒவ்வொருவராக சட்டை பாக்கெட்டில் கையை விட்டு பார்த்தபடி நகர்ந்தார். என் பாக்கெட்டில் இருந்து கடிகாரத்தை எடுத்துக் கொண்டார்.  கண்கள் மூடி இருந்ததால் யாருக்கும்  இது தெரிய வில்லை.

பின் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்தார். இது பற்றி ஒரு வார்த்தை கூட யாரிடமும் கேட்கவில்லை. அந்நாளிலே நீங்கள் தான் என் மானத்தை காப்பாற்றினீர்கள்.  என்னை திட்டவில்லை. கடிகாரத்தின் உரிமையாளரிடமும் எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. ஆசிரியர் என்பவர், இப்படி தான் இருக்க வேண்டும். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இதை என் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என விரும்பினேன்”

இதைக் கேட்ட ஆசிரியர் அற்புதம் என்றார்.

இப்போதாவது என்னை தெரிகிறதா” என இளைஞர் கேட்டார்.

யார் என்பது தெரியவில்லை?” என்றார்.

ஏன் எனக் கேட்டார் இளைஞர். நானும் அப்போது கண்ணை மூடியிருந்தேன்” என்றார் ஆசிரியர். நல்ல சமுதாயத்தை உருவாக்கும் நல்லாசிரியரை போற்றுவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar