Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கீழே தாழ்ந்த கைகள்
 
பக்தி கதைகள்
கீழே தாழ்ந்த கைகள்

ஒருமுறை கர்ணனின் சபைக்கு பெரியவர் ஒருவர் வந்தார். அவரிடம் என்ன  உதவி வேண்டும் எனக் கேட்டார் கர்ணன்.

""கருணைக்கடலே! தங்களிடம் சந்தேகம் ஒன்றைக் கேட்க வந்தேன்” என்றார்.

""உலகில் சிறந்தது ஞானதானம். தனக்கு தெரிந்ததை, பிறருக்கு கற்றுக்  கொடுத்தால், அதை விடச் சிறந்தது ஏதுமில்லை. இந்த வாய்ப்பை அளித்த  தங்களுக்கு நன்றி” என்றார் கர்ணன்.

""தானம் செய்யும் போது வாங்குவோரின் கைகள் கீழேயும், கொடுப்பவர் கைகள்  மேலேயும் இருக்க வேண்டும். ஆனால் தானம் அளிக்கும் போது தங்களின் கைகள்  கீழேயும், வாங்குவோர் கைகள் மேலேயும் இருக்கிறதே! இது சாஸ்திர விரோதம்  தானே?” என்றார்.

""ஐயா! மேலே உள்ள கைகள் புண்ணியத்தை கொடுக்கின்றன.

என் கைகளோ அதை பெறும் விதமாக கீழே இருக்கின்றன. சாஸ்திரம்  மீறப்படவில்லை” என்றார் கர்ணன்.

கர்ணனின் சாமர்த்தியமான விளக்கம் கேட்டு மகிழ்ந்தார் பெரியவர். ஆனால், ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் கர்ணனின் கைகள் மேலே இருந்தன.போர்க்களத்தில் கர்ணன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது  அந்தணர் வடிவில் வந்தார் கிருஷ்ணர். ""கர்ணா! உன் புண்ணியத்தை எல்லாம்  எனக்கு தானமாக கொடு” எனக் கேட்டார்.  அப்போது மட்டும் கர்ணனின் கைகள்  மேலேயும், கிருஷ்ணர் கைகள் கீழேயும் இருக்க தானம் கொடுத்தார். ஏனெனில்  தன் மார்பில் குத்திய அம்பை உருவி ரத்தத்தையே கிருஷ்ணருக்கு தாரை  வார்த்தார் கர்ணன். இதன் பயனாக சொர்க்கத்தை அடைந்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar